கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை மத்திய சிறை / தப்பியோடிய கைதி ராகவன் கோவை மத்திய சிறையிலிருந்து கைதி ஒருவர் தப்பியோடியதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. கோவை மாவட்டத்தின் கோபாலபுரம் பகுதியில் மத்திய சிறை அமைந்துள்ளது. இந்தச் சிறையிலிருந்து கைதி ராகவன் என்பவர் நேற்று தப்பியோடினார். ஈரோட்டைச் சேர்ந்த ராகவன் மீது வழிப்பறிக் கொள்ளை தொடர்பான வழக்குகள் இருந்துள்ளன. அன்னூர் காவல்நிலைய எல்லைக்குள்பட்ட வழிப்பறி வழக்கு ஒன்றில் கைதான இவர், நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். பின்னர் கோவை மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்ட ராகவன், சிறையில் சோதனைக்காக காக்க வைக்கப்பட்ட நிலையில், அங்கிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. சிறை வளாகம் முழுவதும் பல்வேறு இடங்களில் போலீஸார் தேடிய நிலையில், அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதுதொடர்பாக, அன்னூர் காவல்துறையினர் ரேஸ்கோர்ஸ் காவல்நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். பொதுவாக சிறை வளாகம் மற்றும் நுழைவுவாயிலில் பாதுகாப்பு கெடுபிடிகள் அதிகமாக இருக்கும் நிலையில் கைதி தப்பியோடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாள்களுக்கு முன், தேனி சிறையில் 17 கைதிகள் தப்பியோடிய நிலையில் அவர்கள் 43 மணி நேரத்தில் பிடிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, ஒரே வாரத்தில் மீண்டும் அதுபோன்ற சம்பவம் நிகழ்ந்துள்ளது சிறை வளாகத்தில் காவல்துறையினரின் பாதுகாப்பை கேள்விக்குள்ளாக்கியுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவை மத்திய சிறையில் கைதி தப்பியோட்டம்!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗