கோவை பெரியார் அறிவுலகம் சர்ச்சை: 'அகல் விளக்கு' பதிப்பக முகவரியில் பிபிசி நேரில் கண்டது என்ன?

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
கோவை பெரியார் அறிவுலகம் சர்ச்சை: 'அகல் விளக்கு' பதிப்பக முகவரியில் பிபிசி நேரில் கண்டது என்ன?

கோவையில் அமைந்துள்ள பெரியார் அறிவுலகத்துக்கான நூல்கள் கொள்முதலில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக எழுத்தாளரும் பேராசிரியருமான பெருமாள் முருகன் வெளியிட்ட செய்தி விவாதப் பொருளாகியுள்ளது. பல புத்தகங்கள் போலி பதிப்பகத்தால் பொய்யான எழுத்தாளர்கள் பெயர்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு அங்கு வைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியிருந்த அவர், இதில் முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் யார் என்பது பற்றி விசாரித்து நடவடிக்கை எடுப்பதுடன் அந்தப் புத்தகங்களையும் உடனடியாக அகற்ற வேண்டுமென்றும் அவர் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த ஊழல் திமுக ஆட்சியில் நடந்தி இருப்பதாக தமிழக முதல்வர் ஜோசப் விஜய் பதிவு வெளியிட்டுள்ளார். இது பற்றி விசாரணை நடத்தி கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென்று அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். பெரியார் அறிவுலகத்தால் திமுக தலைவருக்குக் கிடைத்த பெருமையை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு பரப்பப்படும் தகவல் இது என்று திமுக தரப்பில் பிபிசியிடம் பதில் தரப்பட்டுள்ளது. பெரியார் அறிவுலகத்தில் நூல்கள் கொள்முதலில் என்ன நடந்துள்ளது என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு செய்தது. சென்னையில் உள்ள பதிப்பகத்தின் முகவரிக்கு பிபிசி தமிழ் நேரில் சென்றபோது தெரிய வந்தது என்ன? இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். கோவையின் இதயப் பகுதியான காந்திபுரத்தில் தமிழக அரசால் சுமார் ரூ.300 கோடி மதிப்பில் அமைக்கப்பட்ட பெரியார் நூலகத்தை, கடந்த அக்டோபர் 16 ஆம் தேதியன்று தமிழக முதல்வர் விஜய் திறந்து வைத்தார். இது திமுகவின் திட்டம் என்று திமுகவினர் அதே நாளில், அதே வளாகத்தில் இனிப்பு வழங்கிக் கொண்டாடினர். பெரியார் அறிவுலகத்தை திமுக தலைவர் ஸ்டாலின், கடந்த நவம்பர் 4ஆம் தேதியன்று நேரில் வந்து பார்வையிட்டார். அன்று மாலை திராவிடர் கழகம் சார்பில் அவருக்குப் பாராட்டு விழா நடத்தப்பட்டது. பட மூலாதாரம், PTI இந்தச் சூழலில்தான் எழுத்தாளர் பெருமாள் முருகனின் இந்தப் பதிவு, பெரும் விவாதங்களை உருவாக்கியுள்ளது. அவர் வெளியிட்ட பதிவில், ''நூல் கொள்முதலில் கோடிக்கணக்கில் ஊழல் நடந்திருக்கிறது. இந்த நூலகத்திற்கு விநியோகிப்பதற்காகவே புதுப்பதிப்பகங்கள் தொடங்கப்பட்டுள்ளன. தொழில்நுட்பம் மேம்படாத செய்யறிவு மூலம் நூல்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நூலாசிரியர் பெயர்கள் எல்லாம் பொய்ப் பெயர்கள். நூல்களில் காணப்படும் 'பன்னாட்டுத் தரப் புத்தக எண்' (ISBN) அனைத்தும் பொய்யானவை. அவற்றை இணையத்தில் தேடினால் அப்படிப்பட்ட எண் இல்லை என்றே தகவல் வருகிறது'' என்றும் கூறியிருந்தார். பெருமாள் முருகன் இந்தப் பதிவை வெளியிடுவதற்கு முன்பே, அறிவுலகத் திறப்பு விழாவுக்கு மறுநாள் கடந்த அக்டோபர் 17ஆம் தேதியன்றே இதுகுறித்து கோவையைச் சேர்ந்த எழுத்தாளர் பாலசுப்ரமணியம் பொன்ராஜ், தனது முகநூல் பதிவில் எழுதியுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது அதில், ''இரண்டு பெரிய அலமாரிகள் முழுக்க 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் ஏதேதோ தலைப்புகளில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் ஏராளமான எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் எழுதிய நூல்கள். ஆய்வுக் கட்டுரைகளா, இல்லை பொது நூல்களா இல்லை ஏஐ உருவாக்கியதா என்று தெரியவில்லை. பாரதியார் கதைகள் 'இன்றைக்கும் இனிமை' என்ற புத்தகத்தின் பின்னட்டைக் குறிப்பு: 'தமிழ் சின்மய பாரம்பரியத்தின் பெருமகுடத்தைச் சுருக்கி... பாரதியார் அத்தனையும் ஒரு கற்பனையாளராக மாறியவர்... அவர் கதைகள் இன்னும், இன்றைக்கு... ஒவ்வொரு நூலும் ரூ1000 மேல் விலை. இதற்கு மேல் இதை விளக்க வேண்டியதில்லை'' என்று பதிவிட்டிருந்தார். ஆனால் பெருமாள் முருகனின் பதிவுக்குப் பின்பே இந்த விவகாரம் பேசுபொருளாகியுள்ளது. பிபிசியிடம் பேசிய பாலசுப்ரமணியம், ''பெரியார் அறிவுலகம் அமைக்கப்பட்டபோது அதைப் பெருமையாகக் குறிப்பிட்டுப் பல்வேறு பதிவுகளைப் பதிவிட்டிருந்தேன். ஆனால் இங்குள்ள புத்தகங்களைப் பார்த்தபோது எனக்குப் பெரும் ஏமாற்றமாகிவிட்டது. அதிலும் அந்த 'அகல் விளக்கு' பதிப்பகப் புத்தகங்களைப் பார்த்த பின்பு, இது எத்தகைய விளைவை ஏற்படுத்துமோ என்ற அச்சம் உருவாகிவிட்டது. பெரியார் பெயரிலான நூலகத்தில் பெரியாரைக் குறித்த புத்தகங்களே மிகக் குறைவாயிருந்தன. கருணாநிதி புத்தகம் இல்லவே இல்லை'' என்றார். பெரியார் அறிவுலகத்தின் 4வது தளத்தில்தான் தமிழ் நூல்கள் பிரிவு இருக்கிறது. அதிலுள்ள ஒரு பகுதி அதாவது 2 பக்க அலமாரிகளிலும் 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் புத்தகங்கள் மட்டுமே அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தான் எண்ணிப் பார்த்ததில் அவற்றில் சுமார் 1800 புத்தகங்கள் இருந்ததாக பெருமாள் முருகன் தெரிவித்திருந்தார். இந்தப் புத்தகங்களில் உள்ள 'அகல் விளக்கு' பதிப்பகத்தின் முகவரியில் சென்னை மடிப்பாக்கத்தைச் சேர்ந்த முகவரி இடம் பெற்றுள்ளது. ஃபீனிக்ஸ் பதிப்பகமும் அதே முகவரியில் இருப்பதாக மற்றொரு புத்தகத்தில் உள்ளது. அந்த முகவரியை பிபிசி தமிழ் நேரில் ஆய்வு செய்தபோது, அங்கு பதிப்பகத்தின் பலகையோ அல்லது குறிப்போ இல்லை. ஆனால் அங்கு புத்தகங்களைக் கையாளும் நடவடிக்கைகள் சில நேரங்களில் இருந்ததாக அக்கம் பக்கத்தினர் தெரிவித்தனர். அந்தக் கட்டடத்தில் விசாரித்தபோது அங்கிருந்த வயதான பெண்மணி ஒருவர் "இந்த முகவரியில்தான் அகல்விளக்கு பதிப்பகம் உள்ளது. அதன் பதிப்பாளர் மோகன் தன்னுடைய மகன்தான்" என்று கூறினார். பதிப்பாளர் மோகனை பிபிசி தமிழ் தொடர்புகொண்டது. ஆனால் அவரைத் தொடர்பு கொள்ள முடியவில்லை. மேலும், அகல் விளக்கு பதிப்பகம் குறித்த ஆவணங்களை பிபிசியால் சுயாதீனமாகச் சரிபார்க்க இயலவில்லை. பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு சக்தி சூர்யா என்ற எழுத்தாளர் பெயரில், 'அகல் விளக்கு' பதிப்பகம் வெளியிட்டுள்ள ''நகர நீர் சட்டங்கள்: பொதுநலப் போராட்டம்'', ''நல்ல செயல்கள்'', ''இந்தியாவில் ஆங்கில மொழியின் வரலாறு'' ஆகிய புத்தகங்கள் அங்குள்ளன. சக்தி சூர்யா என்ற பெயரில் உண்மையிலேயே ஒரு எழுத்தாளர் இருப்பதால், அவரிடம் பிபிசி தமிழ் பேசியது. பத்திரிகையாளராகவும் இருக்கும் அவர், ''சந்தாலி'', ''நரவேட்டை'', ''செந்தட்டி'' என 3 புத்தகங்களை எழுதியுள்ளார். ஆனால் மேலே குறிப்பிட்ட புத்தகங்களைத் தான் எழுதவில்லை என்று பிபிசியிடம் கூறினார் சக்தி சூர்யா. பொய்யான எழுத்தாளர்கள் பெயரில் இருந்தாலும் 'அகல் விளக்கு' பதிப்பக புத்தகங்கள் அனைத்துமே கனமான அட்டைகளாக இருந்ததையும், ஒவ்வொரு புத்தகத்தின் விலையும் 500 ரூபாய் முதல் துவங்கி 2,000 ரூபாய் வரை இருந்ததையும் பிபிசி தமிழ கள ஆய்வில் காண முடிந்தது. பிபிசியிடம் பேசிய தமிழ் இலக்கிய ஆய்வு (பி.எச்.டி.) மாணவி சுபல்லா, ''என்னைப் போன்ற ஆய்வு மாணவிகள் இங்கு தினமும் வந்து பல்வேறு நூல்களையும் ஆதாரமாக எடுத்துப் படிக்கிறோம். இங்கே பல நல்ல புத்தகங்கள் உள்ளன. இதற்கிடையில் இந்த 'அகல் விளக்கு' பதிப்பகப் புத்தகங்களைப் பார்த்தேன். அதிலுள்ள 'நாலடியார்' என்ற புத்தகத்தில் முதல் வார்த்தையே 'நாலடியார் நான்கு வகைப்படும்' என்பதைப் பார்த்தபோது பேரதிர்ச்சியாகிவிட்டது. அதிலுள்ள எல்லா புத்தகங்களுமே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமே மேம்படாத காலத்தில் அவற்றால் உருவாக்கப்பட்ட புத்தகங்கள் என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது'' என்றார். ''இதே நூலகத்திலுள்ள வேறு பல புத்தகங்களையும் இதிலுள்ள தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது அகல் விளக்கு புத்தகங்களிலுள்ள தகவல்கள் அனைத்தும் இணையதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட நம்பகத்தன்மை இல்லாத, பொய்யான தகவல்கள் என்பது தெரிய வந்தது. அறிவைத் தேடி என்னைப் போன்ற மாணவர்கள், ஆய்வாளர்கள் வரும் இந்த நூலகத்தில் இத்தகைய புத்தகங்களை வைத்திருப்பது வருத்தம் என்றால் போலி நூல்கள் என்று தெரிந்த பின்னும் அகற்றாமல் இருப்பது இன்னும் வேதனை'' என்றார் சுபல்லா. அந்த அலமாரிகளில் ஏற்கெனவே இருந்த 'நாலடியார்' புத்தகத்தைத் தற்போது பார்க்க முடியவில்லை. அதேபோன்று 'திரிஷா விஜய்' என்ற எழுத்தாளர் பெயரிலும் புத்தகம் இருந்ததாக எழுத்தாளர் பெருமாள் முருகன் குறிப்பிட்டிருந்தார். அப்படியொரு எழுத்தாளர் பெயரிலான புத்தகத்தையும் காணவில்லை. ஆனால் ஒரே மாதிரியான எழுத்தாளர்கள் பெயர்கள் கொஞ்சம் மாறி மாறி இடம் பெற்றிருப்பதையும் பல்வேறு புத்தகங்களில் பார்க்க முடிந்தது. உதாரணமாக, விஜய் செல்வம், சுமேகா விஜய், விஜய் பாலு, விஜய் ஆதித்தன், ஜோதிலட்சுமி அன்பழகன், நிவேதா அன்பழகன் என எழுத்தாளர்களின் பெயர்களையும் செயற்கை நுண்ணறிவே உருவாக்கியிருக்குமோ என்று சந்தேகம் எழும் அளவுக்கு அந்தப் பெயர்கள் இருந்தன. அதேநேரத்தில் இந்தப் புத்தகங்களுக்கு பெரியார் அறிவுலகம் பெயரில் தேதியிட்ட முத்திரை (சீல்) வைக்கப்பட்டிருப்பதில், மார்ச் மாதம் துவங்கி ஜூன் மாதம் வரையிலான பல தேதிகள் இடம் பெற்றுள்ளன. புத்தகக் கொள்முதல் முறைகேடு புகார் குறித்து பெரியார் அறிவுலகத்தில் ஆய்வு செய்து கொண்டிருந்த தமிழர் திராவிடர் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான வெண்மணி, இதுபற்றி பிபிசியிடம் விரிவாகப் பேசினார். ''கோவைக்கு பெரியார் அறிவுலகம் மிகப்பெரிய அடையாளமாக மாறியிருக்கிறது. ஆனால் புத்தகக் கொள்முதலில் பெரும் முறைகேடு நடந்திருப்பது அப்பட்டமாகத் தெரிகிறது. இல்லாத பதிப்பகம் பெயரில் பொய்யான எழுத்தாளர்கள் பெயரில் புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன. வெறும் 150 பக்கமுள்ள புத்தகம் 750 ரூபாய் என்று விலை குறிப்பிடப்பட்டுள்ளது'' என்றார் வெண்மணி. மேலும் பேசிய அவர், ''பிரபல பொதுவுடமை நூலான ''வால்கா முதல் கங்கை வரை'' நூல், புத்தகச் சந்தையில் 100 ரூபாய்க்குக் கிடைக்கிறது. ஆனால் இங்கே கேள்வியே பட்டிராத மொழிபெயர்ப்பாளர் பெயரில் தமிழில் மொழி பெயர்க்கப்பட்டதாகக் கூறி, 500 ரூபாய் விலை வைத்து கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இதில் முகப்பில் அந்த எழுத்தாளர் எம்.ஏ., பி.இ. படித்ததாகவும், முதல் பக்கத்தில் எம்.ஏ., பிஎட் படித்ததாகவும் உள்ளது. இந்த நூலகத்தில் எந்த வகை ஊழலாக இருந்தாலும் அதை இப்போதே கண்டறிந்து கடுமையாகத் தண்டித்து தடுத்தால் மட்டுமே, எதிர்கால சந்ததிக்குப் பயனுள்ள ஓரிடமாக பெரியார் அறிவுலகம் இருக்கும்'' என்றார். இதே கருத்தை இன்னும் அழுத்தமாக விளக்கினார் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணைப் பொதுச் செயலாளரும், கோவை மாவட்டத் தலைவருமான கரீம். பிபிசியிடம் பேசிய எழுத்தாளர் கரீம், ''பெருமாள் முருகனின் பதிவுக்குப் பின்பு இங்கு வந்து ஆய்வு செய்தோம். இதில் எங்களுக்குப் பேரதிர்ச்சி காத்திருந்தது. அந்தப் பதிவில் கூறியது அத்தனையும் உண்மை. அகல் விளக்கு பதிப்பகப் புத்தகங்கள் அனைத்தும் பொய்யான எழுத்தாளர்கள் பெயர்களில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டு இருப்பதாக சந்தேகம் எழுகிறது. தாமரை பன்னீர் என்ற பெயரில் பல புத்தகங்கள் உள்ளன. அதேபோல தாமரை சிவா, தாமரை முரளி, தாமரை கார்த்திகா என தாமரை என்ற பெயரில் மட்டும் 50க்கும் மேற்பட்ட புத்தகங்கள் உள்ளன'' என்றார் அவர். இதுபோன்ற புத்தகங்களால் தவறான தகவல்களை மக்களுக்குப் பரவும் வாய்ப்பு இருப்பதாகத் தெரிவிக்கிறார் யூடியூபர் இஷானா. பிபிசியிடம் பேசிய இஷானா, ''நான் பதிப்பகங்களைப் பார்த்துதான் புத்தகங்களைத் தேர்வு செய்வேன். அந்தப் புத்தகங்களில் உள்ள தரவுகளை வைத்து யூடியூபில் பேசுவேன். இந்த ''அகல் விளக்கு'' பதிப்பக புத்தகங்கள் இவ்வளவு இருப்பதால் என்ன இருக்கும் என்பதை அறிய சில புத்தகங்களை எடுத்து வாசித்தபோது, எதுவுமே வாசிக்கும் வகையில் இல்லை. அந்தத் தரவுகள் எல்லாம் தவறாக இருந்தன. இதை வைத்து நான் பேசினால் என் மூலமாக எவ்வளவு பேருக்குத் தவறான தகவல் போய்ச் சேர்ந்திருக்கும். என்னைப் போலவே மாணவர்களையும் இது பாதிக்கும் என்பதால் இந்தப் புத்தகங்களை உடனே அகற்ற வேண்டும்'' என்றார். ஆனால் பெரியார் அறிவுலகத்தில் கட்டுமானப் பணிகளுக்கு ஒதுக்கிய கவனத்தை, புத்தகங்கள் தேர்வு செய்வதில் முந்தைய அரசும், இப்போது உள்ள அரசும் காண்பிக்கவில்லை என்று குற்றம் சாட்டுகிறார் ஓய்வு பெற்ற அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பாலு. விழுப்புரத்தைச் சேர்ந்த அவர், கோவையில் பெரியார் அறிவுலகத்தில் இரு நாட்களாக புத்தகங்களை ஆய்வு செய்ததாகத் தெரிவித்தார். பிபிசியிடம் பேசிய பாலு, ''பெரியார் பெயரில் உள்ள அறிவுலகத்தில் அவரைப் பற்றிய புத்தகங்களே அதிகம் இல்லை. அவரைப் பற்றிய நூல்களைத் தனியாக ஒரு பகுதியில் வைத்திருக்க வேண்டும். பெரியாரைப் பற்றி அதிகமாக புத்தகங்கள் எழுதியுள்ள நாச்சிமுத்து அய்யாவின் எந்தத் தொகுப்புமே இங்கில்லை. புத்தகங்கள் தேர்வு செய்வதில் தமிழக அரசு பெரும் தவறு செய்துவிட்டது'' என்றார். ''தமிழ் நூல்கள் பிரிவில் மிக முக்கியமான எழுத்தாளர்களின் புத்தகங்களையே அதிகமாகப் பார்க்க முடியவில்லை. இந்தப் பிரிவில் எனக்கு 70% ஏமாற்றமே கிடைத்தது. அதேபோன்று ஆங்கில நூல்கள் பிரிவிலும் தொழில்நுட்பம் சார்ந்த புத்தகங்கள் அதிகமாக இருக்கிறதே தவிர, இலக்கியம், புனைவுகள் போன்ற வேறு வகையான புத்தகங்கள் மிகக் குறைவாகவே உள்ளன. இப்போது நடந்துள்ள ஊழலை சரி செய்வதுடன் புத்தகங்கள் தேர்வில் அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்'' என்றார் பாலு. தமிழ்நாடு முதல்வர் ஜோசப் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ''பெரியார் அறிவுலகத்தைப் பார்த்துப் பார்த்துக் கட்டியதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்ட திமுக தலைமை, இப்படி நூல்கள் கொள்முதல் செய்வதிலும் பார்த்துப் பார்த்து, தரமற்ற நூல்களாகப் பரிந்துரை செய்து ஊழல் செய்துள்ளதை உலகமே பார்த்துச் சிரிக்கிறது'' என்று கடுமையாக விமர்சித்துள்ளார் விஜய். திமுக ஐடி விங், ''இந்த புத்தகங்கள் திமுக ஆட்சியில் வைக்கப்படவில்லை. முதல்வர் விஜய் பிறந்தநாளன்று சீல் வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த ஆட்சியில்தான் இந்தப் புத்தகங்கள் வாங்கப்பட்டிருக்கும்'' என்று தெரிவித்துள்ளது. பிபிசியிடம் பேசிய திமுக செய்தித் தொடர்பாளர் ஆர்.எஸ்.பாரதி, ''பெரியார் அறிவுலகத்தை உருவாக்கிய எஙகள் தலைவருக்கு நடந்த பாராட்டு விழாவை சகிக்க முடியாமல் இப்படியொரு குற்றச்சாட்டை பரப்பி திசை திருப்புகின்றனர். கட்டடப் பணியே முடியாதபோது எப்படி புத்தகம் வாங்கியிருப்பார்கள். அப்படி வாங்கியிருந்தால் அதை ஆய்வு செய்து அறிவுலகத்தில் வைத்திருக்க வேண்டியது இந்த அரசின் பொறுப்பு'' என்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக அமைச்சர் ராஜ்மோகன், ''அறிவுசார் தளத்தில் இதுபோன்ற ஊழல்களை ஏற்றுக் கொள்ள முடியாது. இதுபற்றி விரிவான விசாரணை நடத்தப்பட்டு, தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'' என்று கூறியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை