பெரியார் அறிவுலக ஊழல் குறித்து அமைச்சர் செங்கோட்டையன் கருத்து.... செங்கோட்டையன் - DIN பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக் கூடியவர்கள் பெரியார் நூலகத்தில் இது போன்ற ஊழல் நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பது உண்மையில் வெறும் வேதனையைத் தருகிறது என வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். கோவை விமான நிலையத்தில் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், "பெரியார் நூலகத்தை முதல்வர் வந்து திறந்து வைத்தார். இன்று அந்த துறையின் அமைச்சர் பெரியார் நூலகத்தில் புத்தகங்கள் வாங்குவதில் பல்வேறு தவறுகள் நடைபெற்று இருக்கிறது, ஊழல் நடந்துள்ளது என சொல்லி இருக்கிறார். பெரியார் வழியில் வந்தவர்கள் என்று சொல்லக்கூடியவர்கள் பெரியார் நூலகத்தில் இது போன்ற நடவடிக்கையில் ஈடுபட்டு இருப்பது உண்மையில் வெறும்வேதனையைத் தருகின்றது. இதுபோன்ற தவறுகளை செய்வது ஏற்றுக்கொள்ள முடியாது. பதிப்பகம் இல்லாத புத்தகங்கள் நூலகங்களில் இருக்கின்றது என்ற நிலையை அமைச்சர் குறிப்பிட்டிருக்கிறார். எத்தனை பக்கங்கள் இருக்கிறது, அதற்கு என்ன விலை என்பதையும் குறிப்பிட்டு காட்டப்பட்டு இருக்கிறது. பெரியாரின் புனித பெயரைச் சொல்லிக் கொண்டு பெரியார் நூலகத்தில் இப்படி நடைபெறுவது உண்மையில் வேதனை அளிக்கிறது. இது போன்ற நிகழ்வுகளை தமிழக மக்கள் கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள். இதிலும் கூட ஊழல் நடந்து இருக்கிறதா என மக்கள் பேசும் அளவிற்கு இருக்கிறது" என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
பெரியார் நூலகத்தில்கூட ஊழலா? உண்மையில் வேதனை அளிக்கிறது! செங்கோட்டையன்
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗