சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
சண்டியர் படத்தை கமல் வெளியிடக் கூடாது: கிருஷ்ணசாமி எதிர்ப்பு

கமல்ஹாசனின் சண்டியர் படம் விவகாரத்தில் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்திருப்பது பற்றி.. சண்டியர் போஸ்டர்- கிருஷ்ணசாமி சண்டியர் படத்தை கமல்ஹாசன் வெளியிடக் கூடாது என்று புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவையில் இன்று அவர் அளித்த பேட்டியில்: "ரத்தம் சொட்ட சொட்ட ஒரு விளம்பரத்தை வெளியிட்டு 'சண்டியர்' படம் குறித்து கமல் அறிவித்துள்ளார். பிறந்த நாளில் 'பழிக்கு பழி' வாங்கும் வகையில் கமல் ஆரம்பித்துள்ளார். பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அதே பெயரை வைத்துள்ளார். கமல்ஹாசன் தற்போது ஒரு அரசியல் கட்சியின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர். எம்பியாக உள்ள கமல், சாதி மற்றும் மதம் சார்ந்து செயல்படக் கூடாது. தான் எடுத்த உறுதிமொழிக்கு மாறாக அவர் செயல்படுகிறார். 'சண்டியர்' படத்தை கமல் எடுக்கவும் முடியாது, அதைத் தமிழ்நாட்டில் திரையிடவும் முடியாது. யாரோ சிலரின் தூண்டுதலின் பே பேரில்தான் சண்டியர் படத்தை அவர் அறிவித்துள்ளார். அந்தப் படத்தை அவர் எடுக்கக் கூடாது. இதற்குப் பதில் சொல்ல வேண்டிய பொறுப்பில் கமல் உள்ளார். உள்நோக்கத்துடனேயே அவர் அனைத்து விஷயங்களையும் செய்கிறார். கமல் சிறந்த நடிகராக இருக்கலாம். ஆனால், அவர் ஒரு பொறுப்பற்ற நடிகர். கமல்ஹாசன் ஏற்கனவே நடித்த 'தேவர் மகன்' திரைப்படத்தால் தென் தமிழகத்தில் இன்றும் அமைதியின்மை நிலவுகிறது. சண்டியர் படம் வெளிவந்தால் கடந்த காலங்களை விட தற்போது நிலைமை மேலும் மோசமாகும். எனவே 'சண்டியர்' என்ற தலைப்பிற்குத் திரைத்துறையினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்தார். கமல்ஹாசன் பிறந்த நாளையொட்டி சு. அருண்குமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ள புதிய திரைப்படத்திற்கு 'சண்டியர்' எனப் பெயரிடப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. கடந்த 2004 ஆம் ஆண்டு கமல்ஹாசன் இயக்கி நாயகனாக நடித்து வெளியான “விருமாண்டி” படத்துக்கு முதலில் “சண்டியர்” எனப் பெயர் சூட்டப்பட்டது. இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்ததால் படத்தின் பெயர் மாற்றப்பட்டது. இதையடுத்து, சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு தான் தயாரித்து நடிக்கும் புதிய படத்துக்கு நடிகர் கமல் ஹாசன் “சண்டியர்” எனப் பெயர் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை