விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியானது பற்றி... சமையல் எரிவாயு உருளை வெடித்து சேதமடைந்த வீடு. விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், கண்டாச்சிபுரம் வட்டம், வீரசோழபுரம் சேர்ந்தவர் மூர்த்தி. இவரது மனைவி சரண்யா. இவர்களது மகன் பத்ரிநாத் (10) . சனிக்கிழமை காலை சரண்யா சமையல் செய்து கொண்டிருந்த போது, எதிர்பாராத விதமாக சமையல் எரிவாயு உருளை வெடித்தது. இதன் காரணமாக வீட்டின் மேல் தளம் இடிந்து விழுந்ததில் வீட்டுக்குள் இருந்த பத்ரிநாத் பலியானான். மேலும் சிறுவனின் தாய் மற்றும் தந்தை பலத்த காயமடைந்தனர். தகவலறிந்த அரகண்டநல்லூர் போலீஸார் நிகழ்விடம் சென்று காயம் அடைந்த இருவரையும் மீட்டு, மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவர்கள் இருவரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
விழுப்புரத்தில் சமையல் எரிவாயு உருளை வெடித்து 10 வயது சிறுவன் பலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗