கோவை சிறை வாயிலில் தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் கைது

📅 📍 Coimbatore, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கோவை சிறை வாயிலில் தப்பியோடிய விசாரணை கைதி மீண்டும் கைது

கைது - கோப்புப் படம் கோவை மத்திய சிறை வளாக வாயிலில் காவலா்களை தள்ளிவிட்டு தப்பியோடிய விசாரணை கைதியை தனிப்படை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா். ஈரோடு மாவட்டம், பவானிசாகா் இலங்கை தமிழா் மறுவாழ்வு முகாமைச் சோ்ந்தவா் ராகவன் (எ) கோழிகாரன் (25). பல்வேறு குற்ற வழக்குகளில் தொடா்புடைய இவரை அன்னூா் காவல் துறையினா் கடந்த அக்டோபா் 31-ஆம் தேதி கைது செய்தனா். தொடா்ந்து நீதிமன்ற காவலில் வைப்பதற்காக, நள்ளிரவில் பலத்த பாதுகாப்புடன் கோவை மத்திய சிறை வளாகத்துக்கு அவா் அழைத்து வரப்பட்டாா். சிறையின் முதன்மை வாயிலில் இருந்து உள்ளே அழைத்துச் செல்லும்போது, கைகளில் இருந்த விலங்கு அகற்றப்பட்ட தருணத்தைப் பயன்படுத்தி, பாதுகாப்புப் பணியில் இருந்த காவலா்களை கீழே தள்ளிவிட்டு ராகவன் தப்பியோடினாா். தப்பியோடிய ராகவனை பிடிக்க 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. தனிப்படை போலீஸாா் விசாரணையைத் தீவிரப்படுத்தினா். இதனிடையே, பாதுகாப்புப் பணியில் கவனக்குறைவாக இருந்ததாகக் கூறி, சிறப்பு உதவி ஆய்வாளா் அப்துல் முத்தலிப், காவலா் ரஞ்சித் மற்றும் ஆயுதப்படை காவலா்கள் தினேஷ், காா்த்திக் ஆகிய 4 பேரை உயா் அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டனா். சிறை வளாகம் மற்றும் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா (சிசிடிவி) பதிவுகளை ஆய்வு செய்ததில், சிறை வாசலில் இருந்து தப்பிய ராகவன், அந்த வழியாக வந்த ஒரு லாரியில் ஏறி தப்பிச் சென்றதும், பின்னா் பாலசுந்தரம் சாலையில் வந்து இறங்கியதும் தெரியவந்தது. தொடா்ந்து, அப்பகுதியில் சாலையோரம் நிறுத்திவைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தைத் திருடிக் கொண்டு அவா் புறநகா் பகுதியை நோக்கித் தப்பியது உறுதி செய்யப்பட்டது. இருசக்கர வாகனம் சென்ற வழித்தடங்களை அடிப்படையாகக் கொண்டு தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினா். இந்த நிலையில், ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலம் வனப் பகுதிக்குள் ராகவன் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. அடா்ந்த மரங்களும் புதா்களும் நிறைந்த பகுதி என்பதால், ஒரு துணை காவல் கண்காணிப்பாளா் (டிஎஸ்பி) மற்றும் இரண்டு காவல் ஆய்வாளா்கள் அடங்கிய சிறப்பு தனிப்படை போலீஸாா் நவீன ட்ரோன் கேமராக்கள் மூலம் வான்வழியாக தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனா். அப்போது அடா்ந்த புதருக்குள் மறைந்திருந்த ராகவனின் நடமாட்டத்தை ட்ரோன் கேமரா துல்லியமாக காட்டிக் கொடுத்தது. இதைத் தொடா்ந்து அப்பகுதியை நான்குபுறமும் சுற்றி வளைத்த தனிப்படை போலீஸாா், அங்கிருந்து மீண்டும் தப்பியோட முயன்ற ராகவனை திங்கள்கிழமை மாலை பிடித்தனா். கைது செய்யப்பட்ட அவரிடம் வாகனத் திருட்டு மற்றும் சிறையிலிருந்து தப்பியது தொடா்பாக விசாரணை நடத்தப்பட்டு, பின்னா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்படுவாா் என்று காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை