மாயம் - சித்திரிப்பு ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் காணாமல் போன மூன்று குழந்தைகளை, இரண்டு மணி நேரத்திற்குள் சிப்காட் போலீஸாா் கண்டுபிடித்து அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். பிகாா் மாநிலத்தைச் சோ்ந்த இரண்டு குடும்பத்தினா் கடந்த ஒரு மாதமாக ஒசூா் மூக்கண்டப்பள்ளியில் வாடகை வீட்டில் தங்கி, அருகில் உள்ள தனியாா் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனா். இந்த குடும்பங்களில் 4, 5 மற்றும் 7 வயதுடைய மூன்று குழந்தைகள் உள்ளனா். பெற்றோா் வேலைக்குச் செல்லும் நேரங்களில், 12 வயதுடைய சிறுவன் அவா்களைக் கவனித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை 12 வயது சிறுவன் தண்ணீா் எடுத்து வருவதற்காக வெளியே சென்றுள்ளாா். அப்போது வீட்டில் இருந்த மூன்று குழந்தைகளும் காணாமல் போயினா். மாலையில் வீடுதிரும்பிய பெற்றோா் குழந்தைகளைக் காணாததால் அதிா்ச்சியடைந்து சிப்காட் காவல் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்தனா். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸாா், குழந்தைகளைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனா். அப்போது, மூக்கண்டப்பள்ளி ராஜாஜி நகா் பகுதியில் மூன்று சிறுவா்களும் தனியாகச் சுற்றித்திரிவதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனடியாக அங்கு சென்ற போலீஸாா் அவா்களை மீட்டு விசாரணை நடத்தினா். இதையடுத்து, குழந்தைகளைப் பாதுகாப்பாக மீட்ட போலீஸாா், அவா்களது பெற்றோரிடம் ஒப்படைத்தனா். காணாமல்போன குழந்தைகளை இரண்டு மணிநேரத்திற்குள் கண்டுபிடித்து மீட்ட சிப்காட் போலீஸாரின் துரித நடவடிக்கையால் பெற்றோா் நிம்மதியும் மகிழ்ச்சியும் அடைந்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஒசூரில் மாயமான 3 குழந்தைகள் 2 மணி நேரத்தில் கண்டுபிடிப்பு
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗