பனிமூட்டத்தால் முகப்பு விளக்குகளை எரியவிட்டு வாகன ஓட்டிகள் பயணம்.. பனிமூட்டம் - video crop கோவை மாநகரில் தொடர்ந்து இரண்டாவது நாளாக இன்று அதிகாலை பரவலாகப் பனிமூட்டம் காணப்பட்டது. கோவை மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை முன்னிட்டு கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக மழைப்பொழிவு குறைந்துள்ளது. அதேசமயம், வானிலை குளிர்ச்சியடைந்து காணப்படுகிறது. இதனால் இரவு முதல் அதிகாலை வரை குளிரின் தாக்கம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், கோவை மாநகரின் உக்கடம், சுங்கம், சிங்காநல்லூர், ஒண்டிப்புதூர், பேரூர் சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியது. இதன் காரணமாக, காலை நேரத்தில் வெளியே சென்ற பொதுமக்கள் பலர் ஸ்வெட்டர் அணிந்து சென்றனர். மேலும், பனிமூட்டத்தால் சாலைகளில் எதிரே வரும் வாகனங்கள் தெளிவாகத் தெரியாத நிலையில், வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி பயணம் மேற்கொண்டனர். தொடர்ந்து நிலவி வரும் குளிர்ச்சியான வானிலையால் கோவை மாநகரம் அதிகாலை நேரத்தில் பனிமூட்டத்துடன் காணப்பட்டது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கோவையில் 2-வது நாளாகப் பனிமூட்டம்! மக்கள் அவதி!
📅
📍 Coimbatore, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗