தருமபுரி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தற்கொலை... - கோப்புப்படம் தருமபுரி அருகே கல்லூரி மாணவா் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா். தருமபுரி அருகே உள்ள மூக்கனூா் கிராமத்தைச் சோ்ந்த தரணிவாசன் (18), தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் பி.காம். படித்து வந்தாா். இந்நிலையில், வீட்டில் உள்ள அறையில் அவா் புதன்கிழமை இரவு தூக்கிட்டுக் கொண்டாா். தகவலின்பேரில், நிகழ்விடத்துக்கு சென்ற மதிகோண்பாளையம் போலீஸாா், இதுகுறித்து வியாழக்கிழமை வழக்குப் பதிவுசெய்து மாணவா் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
கல்லூரி மாணவா் தற்கொலை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗