ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் மறைவு பற்றி... ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் - AP உலகப் புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர் சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் (86) உடல்நலக் குறைவால் காலமானார். பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சர் பேட்ரிக் ஸ்டீவர்ட் தொலைக்காட்சித் தொடர்கள், ஹாலிவுட் படங்களில் கடந்த 60 ஆண்டுகளாக நடித்து வந்தார். இவர், கடந்த 1987 ஆம் ஆண்டு வெளியான ’ஸ்டார் டிரெக் : தி நெக்ஸ்ட் ஜெனரேஷன்’ தொடரில் கேப்டன் ஜீன்-லூக் பிகார்ட் கதாபார்த்திரத்தில் நடித்து உலகம் முழுவதும் ரசிகர்களைப் பெற்றார். தொடர்ந்து பல ஆண்டுகளாக அந்த கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர், 2000ஆம் ஆண்டு வெளியான ’எக்ஸ்-மென்’ திரைப்படங்களின் சீரிஸில் பேராசிரியர் சார்லஸ் சேவியர் கதாபாத்திரத்தில் நடித்து தற்போதைய தலைமுறையினரையும் கவர்ந்தார். பேட்ரிக் ஸ்டீவர்ட் கடைசியாக நடித்துள்ள ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படம் வருகின்ற டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இவரது நடிப்புத் திறமைக்காக எம்மி, கோல்டன் குளோப், கிராமி உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விருதுகளை வென்றுள்ளார். நாடகத்துறைக்கு இவர் ஆற்றிய பங்களிப்புக்காக பிரிட்டன் இரண்டாம் எலிசபெத் ராணியால் பாராட்டைப் பெற்றார். இந்த நிலையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் தனது குடும்பத்துடன் வசித்து வந்த பேட்ரிக் ஸ்டீவர்ட், உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். இவரின் மறைவு செய்தி அறிந்து ஹாலிவுட் பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
‘எக்ஸ்-மென்’ புகழ் ஹாலிவுட் நடிகர் பேட்ரிக் ஸ்டீவர்ட் காலமானார்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Entertainment
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗