'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'என் இனிய பொன் நிலாவே' – இளையராஜா இசையில் கிதார் கலைஞர் சதானந்தம் வாசித்த 8 மறக்க முடியாத பாடல்கள்

பட மூலாதாரம், sadasudarsanam/Instagram இளையராஜாவின் இசையில் 'கிதார்' இசைக்கருவிக்கு ஒரு பிரத்யேக இடம் இருக்கும். 'என் இனிய பொன் நிலாவே', 'ராஜ ராஜ சோழன் நான்', 'கோடை கால காற்றே' என பல பாடல்களை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம். இளையராஜாவின் பல திரைப்படப் பாடல்களை மெருகூட்டிய அந்த கிதார் இசைக்குப் பின் இருந்தவர் கிதார் கலைஞர் எஸ்.சதானந்தம். சதா மாஸ்டர் என திரைத்துறையில் பலராலும் அழைக்கப்படும் இவர், 'அன்னக்கிளி' (1976) தொடங்கி இளையராஜா இசையில் வெளியான பெரும்பாலான திரைப்படங்களில் முன்னணி கிதார் கலைஞராக பணியாற்றியுள்ளார். கடந்த 1947, செப்டம்பர் 30-ஆம் தேதி பிறந்த அவர், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (அக்டோபர் 29) தனது 79வது வயதில் காலமானார். 1966இல் வெளியான 'யாருக்காக அழுதான்' என்ற திரைப்படத்தில் முதன் முதலில் கிதார் வாசித்த சதானந்தம், தனது 60 வருட திரையிசைப் பயணத்தில், 45 வருடங்களுக்கும் மேலாக இளையராஜாவின் குழுவில் பணியாற்றியுள்ளார். தென்னிந்திய திரையுலகின் பிரபல இசை அமைப்பாளர் ஆர்.சுதர்சனத்தின் மகன்தான் சதா மாஸ்டர். ஆர்.சுதர்சனம், 'பராசக்தி', 'களத்தூர் கண்ணம்மா' உள்ளிட்ட பல தமிழ், தெலுங்கு திரைப்படங்களுக்கு இசையமைத்தவர். "சிறு வயதில் என் அண்ணனிடம் ஒருவர் தனது 'கிதார்' இசைக்கருவியை பழுதுபார்க்க வந்திருந்தார். அப்போது நான் அதைத் தொட, 'இது ஒன்றும் விளையாட்டு கருவி அல்ல' என திட்டினார். அப்போது முடிவு செய்தேன், கிதார் கற்றுக்கொள்ள வேண்டும் என்று" என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் எஸ்.சதானந்தம். அதன் பின்னர், இளையராஜாவின் குருவான தன்ராஜ் மாஸ்டரிடம் இசை பயின்றுள்ளார். End of அதிகம் படிக்கப்பட்டது "ஏ.ஆர்.ரஹ்மானின் அப்பா (ஆர்.கே.சேகர்) எனது அப்பாவிடம் உதவியாளராக இருந்தார். எனக்கு கிதார் வாங்கிக் கொடுத்து, என்னை தன்ராஜ் மாஸ்டரிடம் சேர்த்துவிட்டது அவர் தான். அதன் பின்னர் அங்கு இளையராஜாவும் வந்து சேர்ந்தார். பின்னாட்களில் நாங்கள் இருவரும் நண்பர்கள் ஆனோம்" என்றும் அந்த நேர்காணலில் கூறியிருந்தார் சதானந்தம். பட மூலாதாரம், Moodupani picture: Raja cine arts இளையராஜா சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ள காணொளியில், "ஆரம்ப காலத்திலிருந்து நீண்ட நெடுங்காலமாக என்னுடன் பணிபுரிந்த சதானந்தம் இன்று காலமாகிவிட்டார் என்பதை அறிந்து மிகவும் துக்கமடைந்தேன்." என்று கூறியுள்ளார். "காலமானவர்களை, அந்த நிலையில் பார்க்க என்னால் இயலாது. ஏனென்றால், அவர்களெல்லாம் என்னுடன் உயிருடன் வாழ்ந்தவர்கள், உணர்வுடன் கலந்தவர்கள்" என்றும் அவர் அந்தக் காணொளியில் பேசியுள்ளார். பாடகி சுஜாதா மோகன் தனது பேஸ்புக் பக்கத்தில், "மிகச் சிறந்த மற்றும் திறமைமிக்க கிதார் கலைஞர்களில் ஒருவர் கிதார் சதானந்தம். இளையராஜாவின் இசைப் பயணத்தில் அவர் எப்போதும் ஒரு அங்கமாகத் திகழ்ந்தார்; கோடிக்கணக்கான நெஞ்சங்களைத் தொட்ட அந்த காலத்தால் அழியாத பாடல்களில் அவரது கிதார் இசை என்றுமே நீங்காது நிலைத்திருக்கும்." என பதிவிட்டுள்ளார். இளையராஜா மட்டுமல்லாது எம்.எஸ்.விஸ்வநாதன், சலீல் சௌத்ரி, தேவராஜன், ஆர்.டி.பர்மன், பாபுராஜ் என பல்வேறு இசையமைப்பாளர்களிடம் பணியாற்றியுள்ளார் சதானந்தம். பட மூலாதாரம், sadasudarsanam/Instagram இளையராஜா இசையில், கங்கை அமரன் எழுதிய இந்த பாடல் வரிகளைக் கேட்டவுடன், பிரதாப் போத்தன் கையில் கிதாருடன் நாயகி ஷோபாவைப் பார்த்து பாடும் காட்சி உடனடியாக நினைவுக்கு வரும். நடபைரவி எனும் கர்நாட இசை ராகத்தில் அமைந்த இந்தப் பாடலில் சதானந்தத்தின் கிதார் இசை பிரதான பங்கு வகித்தது. கே.ஜே.யேசுதாஸ் குரலில் திரையில் ஒலித்த இந்தப் பாடலை முழுவதுமாக கிதார் மூலம் வாசித்து தனது யூடியூப் பக்கத்தில் காணொளியாக பதிவேற்றியிருந்தார் சதானந்தம். சதானந்தத்தின் கிதார் இசையில், கே.ஜே. யேசுதாஸ் குரலில் மற்றுமொரு பிரபல இளையராஜா பாடல். பாலு மகேந்திரா இயக்கத்தில் வெளியான 'இரட்டை வால் குருவி' திரைப்படத்தில் இடம்பெற்ற இப்பாடல், இப்போதும் இளையராஜாவின் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. 'தென்றல் வந்து என்னைத் தொடும்' பாடல் குறித்து ஒரு நேர்காணலில் பேசியிருந்த சதானந்தம், "இளையராஜா, பாடலுக்கான தேவையான இசைக்கருவிகளை மிகச் சிறப்பாக தேர்வு செய்வார். வீணை தேவைப்படும் இடத்தில் கிதார், கிதார் தேவைப்படும் இடத்தில் வீணை எனக் கொடுப்பார். அப்படி வீணை இசையை கிதாரில் கொண்டுவந்த பாடல் தான் இது. அவரே ஒரு கிதாரிஸ்ட் என்பதால் இத்தகைய விஷயங்களை சிறப்பாகச் செய்வார்" எனக் கூறியிருந்தார். வைரமுத்து வரிகளில் கே. ஜே. யேசுதாஸ், எஸ். ஜானகி குரலில் திரையில் ஒலித்த இந்தப் பாடல், இன்றும் இளையராஜாவின் மேடை கச்சேரிகளில் தவறாமல் இடம்பெறுகிறது. கங்கை அமரன் இயக்கிய 'கரகாட்டக்காரன்' திரைப்படம் இளையராஜாவின் பாடல்களுக்காகவே பெரும் வெற்றி பெற்ற திரைப்படம். இதில் 'இந்த மான்…உந்தன் சொந்த மான்' பாடலில் தொடக்கத்திலேயே சதானந்தத்தின் கிதார் இசை ஒலிக்கும். "இப்பாடலின் 'ப்ரீலுட்' இசை சற்றே கடினமானது. இரண்டு வகையான கிதார் இசையை சேர்த்து வாசிக்க வேண்டுமென இளையராஜா கூறிவிட்டார். அவர் நினைத்த மாதிரியே வாசித்தேன். நான் ஒரு கிதாரிஸ்ட்-ஆக இருப்பதற்கு இளையராஜாவே காரணம்" என ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் சதானந்தம். கங்கை அமரன் வரிகளில் இளையராஜா, சித்ரா இந்தப் பாடலை பாடியிருந்தார்கள். 'வானில் போகும் மேகம் இங்கே…யாரைத் தேடுதோ' என இளையராஜா இசையில் இன்றும் இளைஞர்களின் 'பிளே-லிஸ்டில்' ஒலிக்கும் இப்பாடலை தனது கிதார் இசை மூலம் மெருகூட்டியிருப்பார் சதானந்தம். கையில் கிதாருடன் பிரதாப் போத்தன் திரையில் தோன்றும் இப்பாடலை கங்கை அமரன் எழுதியிருந்தார். இதை முழுமையாக கிதார் மூலம் வாசித்து, 2019இல் தனது யூடியூப் பக்கத்தில் சதானந்தம் வெளியிட்ட காணொளி 4 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. இளையராஜா இசையில், வாலி வரிகளில், உமா ரமணன், யேசுதாஸ் பாடிய இப்பாடலை பல்வேறு நேர்காணல்களில் இசைத்துக் காட்டியுள்ளார் சதானந்தம். இங்கும் வீணைக்குப் பதிலாக கிதார் இசையை பயன்படுத்தியிருப்பார் இளையராஜா. அதை மிகச் சிறப்பாகவே செய்திருப்பார் சதானந்தம். "இளையராஜா இசையமைக்கும்போது ஸ்டூடியோவே அவ்வளவு அமைதியாக இருக்கும். அவர் எழுதிக் கொடுத்ததை நாங்கள் அப்படியே வாசிப்போம். பூவே செம்பூவே உள்ளிட்ட பல்வேறு பாடல்கள் அப்படி உருவானவை தான்" என ஒரு நேர்காணலில் பகிர்ந்திருந்தார் சதானந்தம். வாலி வரிகளில், யேசுதாஸ் இந்தப் பாடலை பாடியிருந்தார். இளையராஜா இசையில், வைரமுத்து வரிகளில், எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பாடிய இப்பாடலில், திரையில் நடிகர் மோகன் இசைத்த கிதாருக்கு பின்னால் இருந்தது சதானந்தம். "அப்போது ஒரு நாளில் மூன்று முதல் நான்கு பாடல்கள் வரை வாசிக்க வேண்டியிருக்கும். பயணங்கள் முடிவதில்லை திரைப்படத்தின் மூன்று பாடல்களை ஒரே நாளில் வாசித்தோம். 'இளைய நிலா' அதில் பெரும் வரவேற்பைப் பெற்றது" என ஒரு ஒரு நேர்காணலில் கூறியிருந்தார் சதானந்தம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை