'என் மகளுக்காக நான் உகாண்டா செல்ல வேண்டும்' - தண்டனை முடிந்தும் வழக்குகள் தொடர்வதாக வெளிநாட்டுப் பெண் வேதனை

📅 📍 Madurai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
'என் மகளுக்காக நான் உகாண்டா செல்ல வேண்டும்' - தண்டனை முடிந்தும் வழக்குகள் தொடர்வதாக வெளிநாட்டுப் பெண் வேதனை

பட மூலாதாரம், Handout 'சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் ஏதுமற்ற ஓர் ஏழைப்பெண், காவல்துறை அதிகாரிகளுக்கு ஆபத்தையோ அச்சுறுத்தலையோ ஏற்படுத்தியிருக்க முடியும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை' 'ஒரு சிறிய இரும்புத் துண்டைப் பயன்படுத்தி உரிமைக்காகக் குரல் எழுப்பியது தண்டனைக்குரிய குற்றத்தின் கீழ் வராது' - அக்டோபர் 14-ஆம் தேதி திருச்சி நீதித்துறை நடுவர் பரம்வீர் அளித்த தீர்ப்பில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. விசா காலம் முடிந்த பின்னரும் இந்தியாவில் தங்கியிருந்ததாக தொடரப்பட்ட வழக்கில் திருச்சி சிறப்பு முகாமில் உகாண்டாவைச் சேர்ந்த பெண் ககோயா ஆயிஷா அடைக்கப்பட்டிருந்தார். முகாமில் காவல்துறை அதிகாரிகளை தாக்கியதாகத் தொடரப்பட்ட வழக்கில் உகாண்டா பெண்ணை விடுதலை செய்து திருச்சி நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. "என் மகளின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு என்னை உகாண்டாவுக்கு அனுப்பி வைத்தால் போதும்" எனக் கூறுகிறார் ககோயா ஆயிஷா. உகாண்டா நாட்டைச் சேர்ந்த ககோயா ஆயிஷா என்ற 30 வயதான பெண், கடந்த ஆண்டு மே மாதம் தமிழ்நாட்டுக்கு வந்திருந்தார். சென்னை விருகம்பாக்கத்தில் வசித்து வந்த உகாண்டா பெண் ஒருவருக்கு பராமரிப்புப் பணிகளைச் செய்வதற்காக அவர் வரவழைக்கப்பட்டிருந்தார். "என்னுடைய பள்ளி தோழி ஒருவர் மூலமாக அந்தப் பெண்ணின் அறிமுகம் கிடைத்தது. அவர் உடல்நலமில்லாமல் இருந்ததால் என்னை வரவழைத்தார். நானும் இரண்டு மாத சுற்றுலா விசாவில் சென்னைக்கு வந்தேன்," என, பிபிசி தமிழிடம் பேசிய ககோயா ஆயிஷா தெரிவித்தார். ஆனால், விசா காலத்தை மீறி சுமார் 10 நாட்கள் இந்தியாவில் தங்கியிருந்ததாக ககோயா ஆயிஷா உள்பட ஆறு பேர் மீது விருகம்பாக்கம் காவல்நிலையத்தில் கடந்த ஆண்டு ஜூலை-15 ஆம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. காவல்நிலையத்தில் பதிவான முதல் தகவல் அறிக்கையில், 'சாலிகிராமத்தில் குற்றம் சுமத்தப்பட்ட ஆறு பேரும் தங்கியிருந்தனர். சுற்றுலா, வணிகம் மற்றும் கல்வி ஆகிய நோக்கங்களுக்காக விசா பெற்றுள்ளனர். ஆனால், விசா காலம் முடிந்த பின்னரும் வசித்து வந்துள்ளனர்' எனக் கூறப்பட்டுள்ளது. End of அதிகம் படிக்கப்பட்டது இவர்கள் மீது வெளிநாட்டவர் (Foreigners Act, 1946) சட்டம் மற்றும் திருத்தச் சட்டம் 2004-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ககோயா ஆயிஷா உள்பட ஆறு பேரும் திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டனர். பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு ககோயா ஆயிஷா உள்பட 6 பேர் மீதான வழக்கில் கடந்த ஜூன் மாதம் சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அதில், ஆறு பேரும் குற்றத்தை ஒப்புக் கொண்டதால் 45 நாட்கள் குறைந்தபட்ச சிறைத் தண்டனை விதிக்கப்படுவதாக உத்தரவிட்டது. "முகாமில் இருந்த காலத்தைக் கணக்கிட்டால் எங்களுக்கான தண்டனைக் காலம் எப்போதோ முடிந்துவிட்டது. ஆனால், சொந்த நாட்டுக்கு அனுப்பாமல் வேறு சில குற்ற வழக்குகள் என் மீது தொடுக்கப்பட்டன," என்கிறார் ககோயா ஆயிஷா. திருச்சி மத்திய சிறை வளாகத்துக்குள் உள்ள சிறப்பு முகாமில் மண்டல துணை ஆட்சியராகப் பணிபுரிந்து வரும் சந்தான லட்சுமி, கடந்த ஜனவரி 23-ஆம் தேதி காவல்நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அதில், தன் மீதான குற்ற வழக்கில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவில்லை எனக் கூறி பணியில் இருந்த காவலர்களுடன் ககோயா ஆயிஷா வாக்குவாதத்தில் ஈடுபட்டதாகக் கூறியுள்ளார். 'வழக்கை விரைந்து முடிப்பதாக மண்டல துணை ஆட்சியர், வருவாய் ஆய்வாளர் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கூறியும் அவர் அதைக் கேட்கவில்லை' என புகார் மனுவில் அவர் தெரிவித்திருந்தார். 'அன்று மாலை சுமார் 7 மணியளவில் சிறப்பு முகாமில் பணியில் இருந்த காவலர்களை ஆபாசமான வார்த்தைகளைப் பயன்படுத்தி ககோயா ஆயிஷா திட்டினார். 'எல்' வடிவ இரும்புத் தடியால் சிறப்பு முகாமின் இரண்டாவது கதவைத் தாக்கி 800 ரூபாய் மதிப்பில் சேதத்தை ஏற்படுத்தினார்' எனப் புகார் மனுவில் சந்தானலட்சுமி கூறியிருந்தார். 'காவலர்கள் அவரைத் தடுக்க முயன்றபோது, 'உங்களைக் கொன்றுவிடுவேன்' என மிரட்டினார். காவலர்களைப் பணி செய்யவிடாமல் இரண்டு மணி நேரங்களுக்கு மேலாக தடுத்தார்' எனவும் அவர் கூறியிருந்தார். ககோயா ஆயிஷாவின் இந்தச் செயல்கள், தண்டனைக்குரிய குற்றங்கள் எனக் கூறிய காவல்துறை, திருச்சி நடுவர் நீதிமன்றத்தில் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்தது. பட மூலாதாரம், Getty Images அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட திருச்சி நீதித்துறை நடுவர் பரம்வீர், கடந்த அக்டோபர்-14 ஆம் தேதி தீர்ப்பு வழங்கினார். அதில், 'குற்றம் சுமத்தப்பட்ட நபர், ஒரு போராட்டத்தை முன்னெடுப்பது, சிறிய அளவில் சத்தம் எழுப்புவது போன்றவை ஓர் அரசு ஊழியர் அதிகாரப்பூர்வக் கடமையைத் தடுக்கும் செயலாகக் கருத முடியாது' எனக் குறிப்பிட்டார். 'குற்றம் சுமத்தப்பட்ட நபர் காவல்துறை அதிகாரிகளுக்கு உடல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியிருந்தால் அது உண்மையான இடையூறாக இருந்திருக்கும்' எனவும் அவர் தெரிவித்துள்ளார். 'ஆனால், தனது உரிமைகளுக்காகக் குரல் கொடுத்த ஓர் ஏழைப்பெண், சிறை போன்ற சூழலில் ஒரு சிறிய இரும்புத் துண்டைப் பயன்படுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டது தண்டனைக்குரிய குற்றச்சாட்டின் கீழ் வராது' எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. 'மேலும், எந்தக் கோணத்தில் பார்த்தாலும் சிறப்பு முகாமில் அடைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் ஏதுமற்ற ஓர் ஏழைப்பெண், ஆயுதங்களுடன் பாதுகாக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு ஆபத்தையோ அச்சுறுத்தலையோ ஏற்படுத்தியிருக்க முடியும் என என்னால் நம்ப முடியவில்லை' எனத் தீர்ப்பில் நீதிபதி பரம்வீர் குறிப்பிட்டுள்ளார். "நீதிக்காக அந்தப் பெண் போராடியிருந்தாலும் அதில் அவர் தோல்வியடைந்திருக்கவே வாய்ப்புகள் உள்ளன," எனவும் அவர் தெரிவித்துள்ளார். புலனாய்வில் குறைபாடுகள் உள்ளதாகக் குறிப்பிட்ட நீதிபதி தீர்ப்பில். 'விசாரணை அதிகாரி சிறப்பு முகாமின் இரும்பு வாயிலை புகைப்படம் எடுக்கத் தவறிவிட்டார். சேதம் ஏற்பட்டதற்கான எந்த ஆதாரத்தையும் அவர் சமர்ப்பிக்கவில்லை. முகாமில் இருந்த மற்றவர்களிடம் விசாரணை நடத்தப்படவில்லை. சேத மதிப்பீடும் தயாரிக்கப்படவில்லை' என்று கூறியுள்ளார். சம்பவம் தொடர்பாக நீதிமன்றத்தில் காணொளி ஒன்று காவல்துறையால் சமர்ப்பிக்கப்பட்டது. இதனைக் குறிப்பிட்டுள்ள நீதிபதி, 'அந்தப் பெண் ஒரு பெரிய கதவைத் தட்டி சத்தம் எழுப்புவது மட்டுமே தெரிகிறது' என்கிறார். ஆயுதம் ஏந்திய காவல்துறை அதிகாரிகளின் பலத்த பாதுகாப்பில் சிறப்பு முகாம் உள்ளதாகக் கூறியுள்ள நீதிபதி, 'இத்தகைய சூழலில் ஒரு சிறிய இரும்புத் துண்டை ஏந்தியதன் மூலம் குற்றவியல் மிரட்டல் விடுத்தார் என்பதை நம்புவது கடினம்' எனக் கூறி வழக்கில் இருந்து ககோயா ஆயிஷாவை விடுதலை செய்து உத்தரவிட்டார். திருச்சி நீதிமன்றம் தன்னை விடுதலை செய்தது தொடர்பான விவரங்களைக் குறிப்பிட்டு மத்திய உள்துறை அமைச்சகத்துக்குக் கடிதம் ஒன்றை ககோயா ஆயிஷா எழுதியுள்ளார். அந்தக் கடிதத்தில், 'உகாண்டாவுக்கு செல்வதற்கு விமான டிக்கெட்டை வாங்குவதற்குத் தேவையான நிதி வசதி என்னிடம் இல்லை. எனது பயண ஏற்பாடுகளுக்கு அரசு அதிகாரிகள் உதவி செய்ய வேண்டும்' என வேண்டுகோள் வைத்துள்ளார். 'இந்திய நாட்டின் சட்டங்களையும் அதிகார அமைப்புகளையும் நான் முழுமையாக மதிக்கிறேன். நான் குற்றமற்றவள் என விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து மனிதாபிமான அடிப்படையில் இந்தக் கோரிக்கையை முன்வைக்கிறேன்,' எனவும் அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Handout "என்னுடன் எட்டு பேர் பிறந்தனர். பள்ளிக் கட்டணம் செலுத்த முடியாததால் எங்களால் பள்ளிப் படிப்பை முடிக்க முடியவில்லை. இதனால் வீட்டு வேலைகளைச் செய்து குடும்பத்தைக் காப்பாற்றி வந்தேன்" எனக் கூறுகிறார் ககோயா ஆயிஷா. உகாண்டாவில் முகோணோ நகரத்தைச் (Mukono city) சேர்ந்த ஆயிஷாவின் தந்தை சுவகா முகமது, கடந்த 2014-ஆம் ஆண்டு உடல்நலக் குறைவால் இறந்துவிட்டார். பிபிசி தமிழிடம் பேசிய அவர், "என் மகள் ஆறு மாதக் குழந்தையாக இருந்தபோது கணவர் இறந்துவிட்டார். மகளுக்கு ஒன்பது வயதாகிறது. வருமானம் இல்லாததால் கடந்த இரண்டு ஆண்டுகளாக அவளால் பள்ளிக்குச் செல்லவில்லை. என் அம்மாவின் பராமரிப்பில் அவர் வளர்ந்து வருகிறார்," என்று தெரிவித்தார். "இந்தியாவில் நான் தங்கியிருந்த காலத்தில் நாளொன்றுக்கு 3 டாலர் வரை ஊதியம் தருவதாகப் பேசப்பட்டது. அந்தத் தொகையை என்னால் பெற முடியவில்லை. என்னை ஏமாற்றிவிட்டனர்," எனவும் அவர் தெரிவித்தார். "விசா வழக்கு முடிந்த பிறகும் என்னை விடுவிக்கவில்லை. வேறு சில குற்ற வழக்குகள் தொடரப்பட்டதால் மீண்டும் முகாமில் இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" எனவும் அவர் தெரிவித்தார். "சிறப்பு முகாமில் என்னுடைய இருப்பை மறுஆய்வு செய்து எஞ்சியுள்ள சட்ட நடைமுறைகளை நிறைவு செய்து என்னை விடுவிப்பதற்கு அரசு உதவி செய்ய வேண்டும்," என்கிறார் ககோயா ஆயிஷா. ககோயா ஆயிஷா மீது வேறு ஏதேனும் வழக்குகள் உள்ளதா?" என திருச்சி சிறப்பு முகாமின் மண்டல துணை ஆட்சியர் சந்தானலட்சுமியிடம் பிபிசி தமிழ் கேட்டது. "அவர் மீதான வழக்குகளைக் காவல்துறை விசாரித்து வருகிறது. அவருக்கு தடையில்லா சான்று கொடுக்க வேண்டிய இடத்தில் காவல்துறை உள்ளது. தவிர, கூடுதல் வழக்கு குறித்த விவரங்களை வெளியில் கூற முடியாது" என்று மட்டும் அவர் பதில் அளித்தார். பட மூலாதாரம், KR Raja திருச்சி சிறப்பு முகாமில் 150க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பலர் பங்களாதேஷ், நைஜீரீயா, கானா, கென்யா, இரான், உகாண்டா ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாக உள்ளனர். இவர்களுக்கு நாளொன்றுக்கு 175 ரூபாய் வழங்கப்படுவதாக, தமிழ்நாடு அரசின் வெளிநாடுவாழ் தமிழர் நலன் மற்றும் அகதிகள் நலத்துறையின் இணையதளத்தில் கூறப்பட்டுள்ளது. "இந்தத் தொகை போதுமானதாக இல்லை. முகாமில் ஒரு குடிநீர் கேன் 50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. தண்ணீர் உள்பட சமையல் பொருட்களை அதிக பணம் கொடுத்து வாங்க வேண்டும்" எனக் கூறுகிறார், மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் கே.ஆர்.ராஜா. பிபிசி தமிழிடம் பேசிய அவர், "இந்தியாவின் குடியுரிமை சட்டவிதிகளைத் தாண்டி அதிக நாட்கள் தங்கியிருந்ததாக இவர்களில் பலர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. ஆனால், தண்டனைக் காலம் முடிந்த பிறகு அவர்களை வெளியேற்றுவது தொடர்பான எந்த விதிகளும் பின்பற்றப்படுவதில்லை." என்கிறார். "முகாமில் பொழுதுபோக்குக்கு தொலைக்காட்சி அல்லது செய்தித்தாள் உள்ளிட்ட எந்த வசதிகளும் இல்லை. எப்போது வெளியே செல்வோம் எனத் தெரியாத சூழலில் இருப்பதால் அவர்களின் மனநிலையில் பாதிப்பு ஏற்படுகிறது," என்கிறார் கே.ஆர்.ராஜா. "தண்டனைக் காலம் முடிந்தும் வெளியேற்றாமல் அவர்களை வைத்திருப்பதற்கான பின்னணியை அரசு ஆராய வேண்டும். முகாமில் வெளிநாட்டவரின் குழந்தைகளும் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களின் எதிர்காலத்தைக் கருதி அரசு முடிவெடுக்க வேண்டும்," என அவர் தெரிவித்தார். சிறப்பு முகாமின் மண்டல துணை ஆட்சியர் சந்தானலட்சுமியிடம் இதுகுறித்து பிபிசி தமிழ் கேட்டது. "வெளிநாட்டவருக்குப் போதுமான வசதிகள் செய்து தரப்பட்டுள்ளன. மேலும் சில கோரிக்கைகளை அவர்கள் வைத்துள்ளனர். அதனை நிறைவேற்றுவது தொடர்பாக அரசின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது," என்று மட்டும் பதில் அளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை