போபால்: 'கர்வா செளத்' தினத்தன்று விரதம் விரதம் கடைப்பிடித்தால் தங்களின் கணவர் நீண்ட ஆயுளோடு இருப்பார் என்பது வடமாநில பெண்களின் நம்பிக்கையாக உள்ளது. ஆனால் தனது மனைவி 'கர்வா செளத்' விரதம் கடைப்பிடிக்காமல் எனது சாவுக்கு காத்திருக்கிறார். இதனால் அவரை விவாகரத்து செய்ய உள்ளதாக மனைவிக்கு எதிராக கணவர் ஒருவர் போலீசில் அளித்த வினோத புகார் பேசும் பொருளாகி உள்ளது. வடமாநிலங்களில் ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் பவுர்ணமிக்கு பிறகு 4வது நாளில் 'கர்வா செளத்' என்ற பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று 'கர்வா செளத்' கொண்டாடப்படப்பட்டது. இந்த நாளில் பெண்கள் விரதம் கடைப்பிடித்த அவர்களின் கணவர்கள் நீண்ட ஆயுளோடும், உடல் ஆரோக்கியத்துடன் இருப்பார்கள் என்பது நம்பிக்கை. இந்நிலையில் தான், தற்போது மத்திய பிரதேச காவல் நிலையத்தில் வினோதமான புகார் ஒன்று பதிவாகி உள்ளது. தனது மனைவி 'கர்வா செளத்' தினத்தில் விரதம் கடைப்பிடிக்க மறுத்து என் சாவுக்கு காத்திருக்கிறாள். அவரை விரதம் கடைப்பிடிக்க சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் விவாகரத்து வழங்குவேன் என்று மனைவிக்கு எதிராக ஒருவர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் மத்திய பிரதேசம் சிவ்புரி பகுதியில் நடந்துள்ளது. அங்குள்ள பிஜ்ராவன் கிராமத்தை சேர்ந்தவர் பரிலால் ஆதிவாசி. இவரது மனைவி பெயர் மிதிலேஷ் ஆதிவாசி. இவர்கள் வசிக்கும் கிராமத்தில் உள்ள பெண்கள் தங்களின் கணவர் நல்ல ஆரோக்கியத்துடன் நீண்ட நாட்கள் வாழ வேண்டும் என்று 'கர்வா செளத்' தினமான இன்று விரதம் கடைப்பிடித்து வருகின்றனர். இதனால் பரிலால் முன்கூட்டியே தனது மனைவி மிதிலேஷ்ஷிடம் விரதம் கடைப்பிடிக்கும்படி கூறினார். ஆனால் மனைவி விரதம் கடைப்பிடிக்க மறுத்துவிட்டார். இதனால் கோபமடைந்த பரிலால் நேற்று தனது மனைவி மிதிலேஷ்க்கு எதிராக போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரில், ''என் மனைவி 'கர்வா செளத்' விரதம் கடைப்பிடிக்க மறுக்கிறார். என் மீது அவருக்கு பாசமில்லை. நான் நீண்ட காலம் உயிர் வாழ வேண்டும் என அவர் விரும்பவில்லை. நான் சீக்கிரம் இறக்க வேண்டும் என்று நினைக்கிறாள். இதனால் தான் 'கர்வா செளத்' விரதம் கடைப்பிடிக்கவில்லை. என் மனைவியை விரதம் கடைப்பிடிக்க சொல்ல வேண்டும். இல்லாவிட்டால் அவரை விவாகரத்து செய்வேன்'' என்று கூறியுள்ளார். இந்த புகாரை பார்த்து போலீசார் அதிர்ந்து போயினர். பரிலால் - மிதிலேஷ் தம்பதிக்கு இடையேயான பிரச்சனையை தீர்க்க முடிவு செய்தனர். இருவரையும் சமாதானம் செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
என் சாவுக்கு மனைவி காத்திருக்கிறாள்.. விரதம் கடைப்பிடிக்காததால் போலீசுக்கு ஓடிய கணவர்! வினோத புகார்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: oneindia.com (original report) ↗