என்ன, சென்னை, திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பது குறித்து... வங்கக் கடலில் உருவாகியுள்ள முரசு புயல் ஆந்திரத்தை நெருங்கி வரும் நிலையில், சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை விடுத்துள்ளது வானிலை ஆய்வு மையம். சென்னை, திருவள்ளூரில் காலை முதலே சாறல் மழை பெய்து வரும் நிலையில், வானிலை ஆய்வு மையம் திடீரென ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. சென்னை மற்றும் திருவள்ளூரில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும், ஆரஞ்சு எச்சரிக்கை என்றால், 15 செ.மீ. வரை மழை பெய்யும் ஆபத்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதுபோல, இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர், நீலகிரி மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னை திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் மணிக்கு 75 கி. மீ. வேகத்தில் காற்று விசக்கூடும். காஞ்சி, வேலூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் இடையிடையே மணிக்கு 75 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என்றும், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் இன்று சூறைக்காற்று வீச வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முரசு தீவிரப் புயல் இன்று நள்ளிரவில் ஆந்திர மாநிலம், நெல்லூருக்கும் நர்சாபுரத்துக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. முரசு புயல் நெல்லூரிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே சுமார் 160 கி.மீ தொலைவிலும், சென்னையிலிருந்து (தமிழ்நாடு) வடகிழக்கே 180 கி.மீ தொலைவிலும், காவலியிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) கிழக்கு-தென்கிழக்கே 180 கி.மீ தொலைவிலும், ஒங்கோலிலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தென்கிழக்கே 210 கி.மீ தொலைவிலும், மசூலிப்பட்டினத்திலிருந்து (ஆந்திரப் பிரதேசம்) தெற்கே 240 கி.மீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ன, சென்னை, திருவள்ளூருக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையா? திடீர் அறிவிப்பு ஏன்?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗