என்ன தீபாவளிக்கு நவ. 7 முதல் 17 வரை விடுமுறை விடப்படுவது குறித்து.. நவம்பர் மாதம் பிறந்ததும், நமக்கெல்லாம் தீபாவளி பண்டிகைக்கு ஒன்று அல்லது இரண்டு நாள்கள்தான் விடுமுறை. அதுவும் இந்த ஆண்டு ஞாயிற்றுக்கிழமையில் தீபாவளி பண்டிகை வந்திருக்கிறது. தீபாவளிக்கு ஒரே ஒரு நாள் விடுமுறை, அதுவும் ஞாயிறு என்றால், போச்சே போச்சே என்று நாகேஷ் பாணியில்தான் புலம்பிக் கொண்டிருப்பவர்கள் ஏராளம். ஆனால், இதைவிட சோகம் என்னவென்றால் பிகார் மாநிலத்தில் உள்ள அரசுப் பள்ளிகளுக்கு விடுமுறை தொடர்பாக மாநில அரசு வெளியிட்ட காலண்டரில், நவ. 7ஆம் தேதி முதல் 17ஆம் தேதி வரை விடுமுறை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை, விஸ்வகர்மா பூஜை, சகோதரர் நாள், சத் பூஜா என வரிசையாக 10 நாள்களுக்கு விடுமுறை. இதில், சனி, ஞாயிறும் சேர்ந்து கொள்கிறது. இது அனைத்துப் பள்ளிகளுக்கும் பொருந்துமா, சில பள்ளிகள் சிறப்பு வகுப்புகள் வைத்து மாணவர்களை கொல்லுமா? என்பதெல்லாம் தெரியாது. ஒரு மாதத்தில் 30 நாள்களில் தீபாவளி பண்டிகையையொட்டி 10 நாள்கள் விடுமுறை. அது மட்டுமா? நவ. 24ஆம் தேதி குரு நானக் ஜெயந்தி விழாவும், கார்த்திகை பௌர்ணயமியும் வருவதால் அன்றைய நாளும் விடுமுறைதான். அடுத்த மாதம் டிசம்பர் மாதம், அதைப் பற்றி சொல்லவே வேண்டாம். டிசம்பர் 25 முதல் ஜன. 1 வரை அரையாண்டு விடுமுறை விடப்படும் என்பதால் மாணவர்களுக்குக் கொண்டாட்டம்தான். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
என்ன, தீபாவளிக்கு நவ. 7 முதல் 17 வரை விடுமுறையா? இது எங்க?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗