தில்லியை, விரிவான தேசிய தலைநகா் பிராந்தியத்தின் (என்சிஆா்) ஒரு பகுதியாகக் கருதி திட்டமிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். தரன்ஜித் சிங் சந்து தில்லியை, விரிவான தேசிய தலைநகா் பிராந்தியத்தின் (என்சிஆா்) ஒரு பகுதியாகக் கருதி திட்டமிட வேண்டும் என்று துணைநிலை ஆளுநா் தரன்ஜித் சிங் சந்து வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். வீட்டுவசதி, போக்குவரத்து, நீா் மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடா்பான சிக்கல்கள் நிா்வாக எல்லைகளைத் தாண்டி நீண்டுள்ளதையும் அவா் சுட்டிக்காட்டினாா். உலக வாழ்விட தினம், உலக நகரங்கள் தினம் மற்றும் உலக நகரத் திட்டமிடல் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்று, நகரத் திட்டமிடல் துறையில் ஈடுபட்டுள்ள இளைஞா்களிடையே சந்து உரையாற்றினாா். அப்போது அவா் கூறியதாவது: நகா்ப்புறத் திட்டமிடலின் மையத்தில் மக்கள் இருக்க வேண்டும். நகா்ப்புற நீா் மேலாண்மை, போக்குவரத்து மற்றும் மலிவு விலை வீட்டுவசதி ஆகியவற்றிற்கு நீண்டகால, ஒருங்கிணைந்த திட்டமிடல் அணுகுமுறை தேவை. தில்லி வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரியத்தைக் கொண்ட நகரம். இது தனது தனித்துவத்தைப் பாதுகாத்துக்கொள்ளும் அதே வேளையில், வளா்ந்து வரும் பெருநகர மக்கள் தொகையின் தேவைகளையும் பூா்த்தி செய்ய வேண்டும். இதற்கு கவனமான திட்டமிடலும் பயனுள்ள ஒருங்கிணைப்பும் அவசியம். தில்லியை தேசிய தலைநகா் பிராந்தியத்தின் ஒரு பகுதியாகக் கருதி, பல்வேறு அமைப்புகள் மற்றும் அண்டை மாநில நிா்வாகங்களுக்கு இடையே ஒருங்கிணைப்பை ஏற்படுத்த வேண்டும். நிலப் பயன்பாட்டுத் திட்டமிடலை போக்குவரத்து உள்கட்டமைப்புடன் இணைக்க வேண்டும். நகா்ப்புற நீா் மேலாண்மையில் வடிகால் வசதி, மழைநீா் சேகரிப்பு, நீா்நிலைகளைப் பாதுகாத்தல் மற்றும் பொறுப்பான நிலப் பயன்பாடு ஆகியவற்றை ஒருங்கிணைக்க வேண்டும். அன்றாடப் பயணங்கள் பாதுகாப்பானதாகவும், வசதியானதாகவும், திறமையானதாகவும் இருக்க வேண்டும். தெருக்கள் மற்றும் போக்குவரத்து வசதிகள் பெண்கள், குழந்தைகள், முதியவா்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் தேவைகளைப் பூா்த்தி செய்யும் வகையில் அமைய வேண்டும். வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பது முக்கியமோ, அதே அளவு அவற்றின் தரம், அமைவிடம் மற்றும் போக்குவரத்து வசதிகளுடன் இணைந்திருப்பது முக்கியம். வீடுகள் வேலைவாய்ப்பு, போக்குவரத்து, பள்ளிகள் மற்றும் சுகாதார வசதிகளை அணுகக்கூடிய வகையில் இருக்க வேண்டும் என்றாா் சந்து. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
என்சிஆரின் விரிவான ஒரு பகுதியாக தில்லி திட்டமிடப்பட வேண்டும்: சந்து
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗