எபோலா அச்சுறுத்தல்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
எபோலா அச்சுறுத்தல்!

ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் வேகமாகப் பரவிவரும் எபோலா தொற்று, அந்த நாட்டை மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசில் வேகமாகப் பரவிவரும் எபோலா தொற்று, அந்த நாட்டை மட்டுமன்றி ஒட்டுமொத்த ஆப்பிரிக்க நாடுகளையுமே அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. காங்கோவில் இதுவரை தொற்று உறுதி செய்யப்பட்ட 10,060 நோயாளிகளில் 4,887 பேர் இறந்துள்ள நிலையில், இது காங்கோ வரலாற்றிலேயே அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்திய மோசமான பாதிப்பாக உருவெடுத்துள்ளது. பழ வெளவால்கள் மூலம் இந்த எபோலா தீநுண்மி பரவியிருக்கலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது. மழைக் காடுகளில் காணப்படும் பழ வெளவால்கள், குரங்குகள், காட்டு மான்கள் அல்லது முள்ளம்பன்றிகள் போன்ற விலங்குகள் நோய்வாய்ப்பட்டோ அல்லது இறந்த நிலையிலோ இருக்கும்போது அவற்றின் ரத்தம், சுரப்புகள், உறுப்புகள் அல்லது உடல் திரவங்களை மனிதர்கள் தொடும்போது, இந்த தீநுண்மி மனிதர்களுக்குப் பரவக்கூடும். கடந்த மே முதல் காங்கோவில் பரவிவரும் எபோலா தீநுண்மி யானது, அரிதான 'புண்டிபுக்யோ' வகையைச் சேர்ந்தது. இந்த வகை எபோலா தீநுண்மிக்கு அங்கீகரிக்கப்பட்ட சிகிச்சையோ அல்லது தடுப்பூசியோ ஏதுமில்லை. மிகவும் தொற்றுத்தன்மை கொண்ட எபோலா, பாதிக்கப்பட்ட நபரின் உடல் திரவங்களுடன் (ரத்தம், வாந்தி போன்றவை) நேரடித் தொடர்பில் இருப்பதன் மூலமோ, படுக்கை விரிப்புகள், ஆடைகள் மூலமோ பிறருக்குப் பரவுகிறது. 2014-16 காலகட்டத்தில் மேற்கு ஆப்பிரிக்காவில் ஏற்பட்ட எபோலா பரவல் 28,000-க்கும் மேற்பட்ட பாதிப்புகள் மற்றும் 11,000-க்கும் அதிகமான உயிரிழப்புகளுடன் வரலாற்றிலேயே மிகப் பெரிய பாதிப்பாக அமைந்தது. அதனுடன் ஒப்பிடுகையில், தற்போதைய எபோலா பரவலானது மூன்று மடங்கு அதிகமாக உள்ளது. கென்யா, நைஜீரியா உள்ளிட்ட பிராந்தியங்களிலும் எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. உகாண்டா, பிரான்ஸில் கண்டறியப்பட்டாலும், இப்போது அந்த நாடுகளில் பாதிப்பு இல்லை. ஆப்பிரிக்க நாடுகளுக்கே உரிய பொது சுகாதார கட்டமைப்புக் குறைபாடுகளால் அங்கு எந்தவொரு நோய்த்தொற்றின் பரவலும் அதிகமாக இருக்கும். அந்த வகையில் எபோலா தொற்றுப் பரவலைக் கண்டறியவும், கண்காணிக்கவும், அதன் பரவல் வேகத்தைக் குறைக்கவும் உதவும் சுகாதாரக் கட்டமைப்புகள் காங்கோவில் இல்லை. நோயைக் கண்டறிவதில் ஏற்படும் தாமதம், பாதிப்புகளைத் தெரிவிக்கத் தயங்குதல் போன்றவை உயிரிழப்பை அதிகப்படுத்துவதாக ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் தரவுகளின்மூலம் தெரியவந்திருக்கிறது. எபோலா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாதுகாப்பற்ற முறையில் சடலங்களை அடக்கம் செய்யும் கலாசார நடைமுறைகளை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும்; எபோலா தொற்று ஆபத்தை அதிகரிக்கும் பழக்கவழக்கங்களைக் கட்டுப்படுத்தும் பொது சுகாதார சட்டங்களை காங்கோவில் அரசு அதிகாரிகள் கடுமையாக அமல்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தல்களை வழங்கியிருக்கிறது. ஆனால், போதிய விழிப்புணர்வு இல்லாததால், எபோலா சிகிச்சை மையங்கள் மீதும், சுகாதாரப் பணியாளர்கள் மீதும் பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் நடக்கின்றன. கடந்த மே முதல் காங்கோவில் எபோலா பரவத் தொடங்கியதிலிருந்து, எபோலா தடுப்புப் பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளுக்கு சர்வதேச நன்கொடையாளர்களிடமிருந்து 962 மில்லியன் டாலர் நிதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், களப்பணியில் ஈடுபட்டுள்ள அமைப்புகளால் 200 மில்லியன் டாலர் மட்டுமே கணக்கு காட்டப்பட்டுள்ளது என ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்களின் பொது இயக்குநர் டாக்டர் ஜீன் கசேயா தெரிவித்திருக்கிறார். காங்கோவில் எபோலா பரவல் தடுப்பில் இந்த முறைகேடு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியிருக்கிறது. காங்கோவில் காடுகள் வரைமுறையின்றி அழிக்கப்படுவதும் எபோலா பரவல் அதிகரிப்புக்குக் காரணம் என்று ஆப்பிரிக்க நோய்க் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையத்தின் 'எமர்ஜிங் இன்ஃபெக்ஷியஸ் டிசீசஸ்' இதழில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. காடுகள் அழிப்பு வனவிலங்கு வாழ்விடங்களுக்கு இடையூறு விளைவிக்கிறது. குறிப்பாக, பழ வெளவால்கள் போன்றவற்றுக்கு இது பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், அவை காடுகளிலிருந்து வெளியேறி மனிதக் குடியிருப்புகளுக்கு அருகில் செல்லும் கட்டாயம் ஏற்படுகிறது. பழ வெளவால்களிலிருந்துதான் இந்த எபோலா தீநுண்மி பரவுவது குறிப்பிடத்தக்கது. காடு அழிப்புடன் தொடர்புடைய எபோலா தொற்று பரவும் ஆபத்து மிக அதிகமாக உள்ள பகுதிகளில் சுமார் 80% பகுதிகள் காங்கோவிலும், கேமரூன் ஆகிய நாடுகளிலும் உள்ளன. காடுகள் அழிப்பு, சுரங்கத் தொழில், விவசாய விரிவாக்கம் ஆகியவை, போதிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத தொழிலாளர்களையும், உள்ளூர் சமூகத்தினரையும் காட்டு விலங்குகள் மற்றும் காட்டு விலங்கு இறைச்சி வணிகத்துடன் நெருக்கமான தொடர்புக்குள் கொண்டு வருகின்றன. இதனால், அவர்கள் எளிதில் நோய்த்தொற்றுக்கு உள்ளாகின்றனர். பெருவெள்ளம், வறட்சி என அனைத்து வகையான பேரிடருக்கும் இயற்கையை அழிப்பதற்கும் முக்கியமான தொடர்பு இருப்பதை உலகம் முழுவதும் அவ்வப்போது நிகழும் சம்பவங்கள் உணர்த்துகின்றன. இப்போது எபோலா போன்ற நோய்த்தொற்றுக்கும் இயற்கையை வரைமுறையின்றி அழிப்பதும் ஒரு காரணம் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி என்கிற பெயரில் மனித இனம் தனக்குத்தானே வினையைத் தேடிக்கொண்டே இருக்கிறது. அஞ்சுவது அஞ்சாமை பேதைமை; அஞ்சுவது அஞ்சல் அறிவார் தொழில். அஞ்சத் தக்கதைக் கண்டு அஞ்சாதிருப்பது அறியாமையாகும்; அஞ்சத்தக்கதைக் கண்டு அஞ்சுவதே அறிவுடையாரின் தொழிலாகும். திருக்குறள் (எண் 428) அதிகாரம்: அறிவு உடைமை தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை