எழுத்தாளர் இரா. முருகன் மறைவு... எழுத்தாளர் இரா. முருகன் தமிழ் எழுத்தாளர் இரா. முருகன் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத்தில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக புனைவு, அபுனைவு நூல்களை எழுதி வந்தவர் எழுத்தாளர் இரா. முருகன் (74). நாவல்கள், சிறுகதைகள், கட்டுரைகள் என பல வகை எழுத்திலும் தொடர்சியாக பங்களிப்பைச் செய்தவர். 1850 - 1960 காலகட்டங்களில் தமிழகத்திலும் கேரளத்திலும் வேர்விட்டுப் பரவிய ஒரு குடும்பத்தின் புனைவு கலந்த நான்கு நாவல்களாக அரசூர் வம்சம், விஸ்வரூபம், அச்சுதம் கேசவம், வாழ்ந்து போதீரே படைப்புகள் வெளியாகின. இதில், அரசூர் வம்சம் மற்றும் விஸ்வரூபம் பெரிய அளவில் கவனம் பெற்றன. இவர் எழுதிய மிளகு பரவலான வாசிப்பைப் பெற்ற வரலாற்று நாவலாகும். தினமணியில் தியூப்ளே வீதி என்கிற தலைப்பில் தன் வரலாற்றையும் எழுதி வரவேற்பைப் பெற்றார். உன்னைப் போல் ஒருவன், பில்லா - 2 ஆகிய திரைப்படங்களுக்கு வசனங்கள் எழுதியவர். 10க்கும் மேற்பட்ட நாவல்கள், சிறுகதைத் தொகுப்புகள், மேடை நாடகங்கள், ஏராளமான கட்டுரைகளை எழுதிய இரா. முருகன் உடல்நலக்குறைவால் இன்று சென்னையில் காலமானார். கதா விருது, பாரதி பல்கலைகலைக் கழக விருது, அரசூர் வம்சம் நாவலின் ஆங்கிலப் பதிப்பான தி கோஸ்ட்ஸ் ஆஃப் அரசூர் (Ghosts of Arasur), இந்திய புக்கர் விருது என்று சிறப்பிக்கப்படும் க்ராஸ்வேர்ட் விருதுக்கான குறும்பட்டியலில் இடம் பெற்றது, 2024 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது ஆகியவற்றை பெற்றவர். உள்ளூர் மற்றும் ஐபிஎல் கிரிக்கெட்டில் பிரபலமான தமிழக வீரர் அஸ்வின் முருகன் இவரது மகன் என்பது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
எழுத்தாளர் இரா. முருகன் காலமானார்!