எழுத்தாளர்களின் தோழனாக...

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
எழுத்தாளர்களின் தோழனாக...

பலரும் வெளியிடத் தயங்கிய நூல்களை வெளியிட்டு எழுத்தாளர்களின் தோழனாக இருக்கும் சண்முகம் சந்திரசேகரன் பற்றி... சண்முகம் சந்திரசேகரன் - படங்கள்: ஆர். ஸ்ரீராம் வழக்கமான பதிப்பகம் என்றால் அதிக எண்ணிக்கையிலான நூல்களை வெளியிடுவது, அதன் மூலம் வருவாயை ஈட்டுவதுதான் பிரதானப் பணியாக இருக்கும். ஆனால், விழுப்புரத்தைச் சேர்ந்த புத்தகப் பதிப்பாளர் சண்முகம் சந்திரசேகரன் (76) சற்று வித்தியாசமானவர். சமூகம் சார்ந்த மற்றும் விற்பனைக் கருதி யாரும் வெளியிடத் தயங்கும் நூல்களை தாமாக முன்வந்து வெளியிட்டு, பதிப்பாளராக மாறி ஏறத்தாழ சுமார் 45-க்கும் மேற்பட்ட நூல்களைத் தனது சரவண பாலு பதிப்பகம் மூலம் வெளியிட்டிருக்கிறார். திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், குருவம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்திரசேகரன். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தேர்வில் தேர்ச்சி பெற்று, திருவாரூர் அரசுக் கல்லூரியில் இளநிலை எழுத்தராகப் பணியைத் தொடங்கியவர். திருச்சி தேசியக் கல்லூரியில் பி.யு.சி. முடித்த இவர், கும்பகோணம் அரசுக் கல்லூரியில் மாலை நேரப் பிரிவில் இளங்கலைப் பொருளாதாரம் படித்து முடித்தார். பின்னர் திருச்சி பெரியார் ஈ.வெ.ரா. அரசுக் கல்லூரி, தருமபுரி அரசுக் கல்லூரி, விழுப்புரம் அறிஞர் அரசுக் கல்லூரிகளில் பணியாற்றியுள்ளார். தொடர்ந்து வங்கித் தேர்வில் தேர்ச்சி பெற்று, சென்னை, திருச்சி நகரங்களில் பணியாற்றி, பின்னர் ஓய்வு பெற்றவர். இளம் வயதிலேயே புத்தகப் பிரியரான சந்திரசேகரன், எழுத்தாளர்கள் அகிலன், நா. பார்த்தசாரதி, சாண்டியல்யன், தமிழ்வாணன், பி.டி. சாமி, வல்லிக்கண்ணன் போன்றவர்களின் நூல்களைப் படிப்பதை வழக்கமாகக் கொண்டிருந்த இவர், எழுத்தாளர் பிரபஞ்சன், இலங்கையைச் சேர்ந்த செ. யோகநாதன், செ. கணேசலிங்கன் ஆகியோரது நட்பு வட்டாரத்திலும் இருந்தவர். இவரது மனைவி சகுந்தலா விழுப்புரத்தில் பள்ளி ஆசிரியையாகப் பணியாற்றி ஓய்வு பெற்றதால், இங்கேயே வசித்து வருகிறார். தற்போது 76 வயதானாலும் விரைவில் நூல்களை வெளியிடத் தயார் நிலையில்தான் சந்திரசேகரன் உள்ளார். புத்தகப் பதிப்புப் பணி குறித்து சந்திரசேகரனுடன் உரையாடிய போது, அவர் கூறியது: "சிறுவயதிலேயே வாசிப்பு என்றாலே தனி அலாதிதான். அப்போதெல்லாம் எங்கள் ஊர் வழியாக இயக்கப்படும் பேருந்துகளின் ஓட்டுநர்களிடம் காசு கொடுத்து, திருச்சி அல்லது துறையூரில் புத்தகங்களை வாங்கி வரச் சொல்லி, அதை படிப்போம். விடுமுறைக் காலங்களில் சொந்த ஊரான குருவம்பட்டியிலிருந்து திருச்சிக்கு மிதிவண்டியில் மாவட்ட மைய நூலகத்துக்குச் சென்று படிப்பது வழக்கம். இதைத் தொடர்ந்து அரசுக் கல்லூரிகளில் பணி, வங்கிப் பணி என அடுத்தடுத்த நிலைகளுக்குச் சென்றுவிட்டேன். நான் எழுத்தாளர் ஆக முடியவில்லை என்றாலும், சென்னையில் வங்கிப் பணியில் இருந்த போது, நூல்கள் மீதான அறிமுகக் கூட்டம், விமர்சனக் கூட்டங்களை நடத்தியிருக்கிறோம். இதன் மூலம் நிறைய பேரின் தொடர்பும் கிடைத்தது. இதுபோன்று நடத்தப்படும் கூட்டங்களுக்கு என்னுடைய வருங்கால வைப்புநிதித் தொகை, கூடுதல் பணிக்கு கிடைக்கும் தொகை போன்றவற்றை நடத்தி வந்தேன். கண்ணாடித் தளம், மக்கள்தளம் போன்ற முற்போக்கு இதழ்களை நடத்தி வந்த நான், என்னுடைய நண்பரும், மார்க்சிய அறிஞருமான கோ. கேசவனின் நூல்களை வெளியிடுவதற்காக பதிப்பகத்தைத் தொடங்கினேன். இதுபோல யாரும் வெளியிடத் தயங்கும் மற்றும் சமூகம் சார்ந்த நூல்களை வெளியிடுவதற்கு முன் வந்து சரவணபாலு பதிப்பகத்தைத் தொடங்கி எழுத்தாளர்கள் கோ. கேசவன், அஸ்வகோஷ், பாவண்ணன், கோபிகிருஷ்ணன், பழனி, சின்னசாமி உள்ளிட்டோரின் நூல்களை, இன்று வரை சுமார் 45-க்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளேன். வேதம் புதிது, சமூக விடுதலையும், தாழ்த்தப்பட்டோரும், சாதியம், சனநாயகப் புரட்சியும் அம்பேத்கரும், கோயில் நுழைவுப் போராட்டங்கள், அம்பேத்கரும் - சாதி ஒழிப்பும், சுயமரியாதை இயக்கமும், பொதுவுடைமையும், சிங்காரவேலரும் - பொதுவுடமை இயக்கமும், மண்ணும் - மனித உறவுகளும், சிறகுகள் முளைத்து, சாதி - அன்றும் - இன்றும் (மார்க்சியப் பார்வையில்), மா. சிங்காரவேலர் எழுதிய சுயராஜியம் யாருக்கு, கோ. கேசவனின் வாழ்வும் - பணியும் போன்ற நூல்களை வெளியிட்டுளேன். இதுமட்டுமல்லாது இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கங்கள் (சிபிஐ, சிபிஎம், சிபிஐ-எம்எல்) வரலாறு - போராட்டங்கள், பிளவுகள் என்ற நூலைத் தொகுத்து வெளியிட்டிருக்கிறேன். எழுத்தாளர் அஸ்வகோஷின் சிறகுகள் முளைத்த நூலைப் பதிப்பித்து வெளியிட்ட போது அந்த நூலுக்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. ஆனால், அந்த நூல் 2 முறை சாகித்ய அகாதெமி விருதுக்கான போட்டியில் பங்கேற்ற நூலாக அமைந்தது. என்னுடைய நண்பரும், எழுத்தாளருமான கேசவனின் படைப்புகள் குறித்து 3 தொகுதிகள் வெளி வந்துள்ள நிலையில், நான்காவது தொகுப்பை வெளியிட அவருடைய மகன் மதுபாலன் உதவியுடன் வெளியிட உள்ளேன். இதுமட்டுமல்லாது என்னுடை கவிதை நூல் ஒன்றையும், பெரியார் மீதான அவதூறுகளை எதிர்த்து ஒரு விளக்க நூலையும் விரைவில் வெளியிடத் திட்டமிட்டு இருக்கிறேன். சாதியும் - தீண்டாமையும் என்ற நூலையும் எழுதி வருகிறேன். விழுப்புரம் கலவரம் பற்றிய நாவல் ஒன்றை வெளியிட வேண்டும் என்பதும் என்னுடைய நீண்டநாள் ஆசையாகும். நான் சென்னையில் வங்கிப் பணியில் இருந்த போது இலக்கியக் கூட்டங்களை நடத்தும் போது, கூட்டத்தில் பங்கேற்பவர்களின் பெயர், தொடர்பு எண், முகவரி போன்றவற்றை பெறுவதை வழக்கமாகக் கொண்டிருந்தேன். அவ்வாறு கூட்டங்களில் பங்கேற்றவர்களைக் கடிதம் மூலம் தொடர்பு கொண்டு, நான் வெளியிட நூல்கள் குறித்த விவரங்களைத் தெரிவித்து, அவர்களின்தேவையறிந்து அவர்களுக்குத் தேவையான எண்ணிக்கையில் நூல்களை அனுப்பி வைப்பதை வழக்கமாக்க கொண்டிருந்தேன். இதன் மூலம் பலரின் நூல்கள் நூல்கள் 1000 முதல் 1500 எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டிருக்கிறது. இதைத் தவிர நூலகங்களுக்கும் புத்தகக்கள் சென்றடைந்திருக்கின்றன. இதன் மூலம் நூல்களை எழுதிய எழுத்தாளருக்கும், அதை வெளியிட்ட எனக்கும் மன நிறைவை அளித்திருக்கிறது. நூல்களை வெளியிட்டது மட்டுமல்லாது, எனது வீட்டின் மேல்தளத்தில் சுமார் 5 ஆயிரத்துக்கு மேற்பட்ட நூல்களைக் கொண்டு நூலகமாக மாற்றி வைத்திருக்கிறேன். பல்வேறு தலைப்புகளில் இங்கு நூல்கள் உள்ளன. இதைத் தவிரஎன்னுடைய நண்பர்களான எழுத்தாளர்கள் கோ.கேசவன், யோகநாதன் ஆகியோர் எழுதுவதற்காகன வீட்டின் மேல்தளத்தில் தனி அறையைத் தயார் செய்து தந்தேன். மற்றவர்கள் வெளியிடத் தயங்கிய நூல்களை வெளியிட்டு, எழுத்தாளருக்குரிய அங்கீகாரத்தை பெற்றுத் தந்தது மட்டுமல்லாது, அவர்களை வெளியுலகத்துக்கு கொண்டுசென்றதிலும் எனக்கு பெரும் மகிழ்ச்சிதான்" என்கிறார் சந்திரசேகரன். என்னுடைய ஓய்வூதியத் தொகையிலிருந்து போட்டித் தேர்வுகளில் பங்கேற்கும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களுக்குத் தேர்வுக் கட்டணம், போட்டித் தேர்வுகளை எதிர்கொள்ள கையேடுகளை வாங்தித்தருதல் போன்றவற்றையும் மேற்கொண்டு வருகிறேன். இன்றுவரை இந்த பணியை மேற்கொள்கிறேன். இதைத் தவிர ஏழை மக்களுக்கு மருத்துவ உதவி செய்தல், மருந்து}மாத்திரைகளை வாங்கித் தருதல் போன்ற பணிகளையும் செய்து வருகிறேன். முகமறியா பலரும் உதவி பெற்று, கைப்பேசி வாயிலாகவும், கடிதம் வாயிலாகவும் நன்றி தெரிவிப்பதும் எனக்கு மன நிறைவை அளிக்கிறது. இதற்கு மனைவி மற்றும் மகன்கள், மகளும் உறுதுணையாக இருக்கின்றனர் என்றார் சந்திரசேகரன்.அரசுப் பணியில் பணியாற்றினோம். ஊதியம் கிடைத்தது என்று இல்லாமல், பலருடைய நூல்களைத் தன்னுடைய பதிப்பகம் மூலமாக வெளியிட்ட விழுப்புரம் சந்திரசேகரன் பாராட்டுக்குரியவர்தான். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை