இந்தியா கூட்டணி நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறித்து... மாதிரி நாடாளுமன்ற கூட்டத்தின்போது... - படம் - எக்ஸ் இந்தியா கூட்டணி நடத்திய மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தில் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீர்மானம் சனிக்கிழமை (அக். 31) நிறைவேற்றப்பட்டது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் இந்தியா கூட்டணி சார்பில் ஒரு மாதிரி நாடாளுமன்றக் கூட்டம் நடைபெற்றது. இந்த மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்துக்கு முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமை தாங்கி அவையை வழி நடத்தினார். இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்ட இந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் உரையாற்றினர். இந்த நிலையில், ஞானேஷ் குமாரை பதவி நீக்கும் தீர்மானம் அவையின் முன்னிலையில் கொண்டு வரப்பட்டது. அந்தத் தீர்மானத்துக்கு இந்தியா கூட்டணி தலைவர்கள் ஆதரவு தெரிவித்ததால் அவைத்தலைவர் மீரா குமாரால் அந்தத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞானேஷ் குமார் பதவி நீக்கத் தீர்மானம்: மாதிரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗