தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்காக ஒரு மாதிரி நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி நடத்துவது பற்றி... மாதிரி நாடாளுமன்றம். - படம் - எக்ஸ் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை பதவி நீக்குவதற்காக ஒரு மாதிரி நாடாளுமன்றத்தை இந்தியா கூட்டணி சனிக்கிழமை (அக். 31) நடத்தி வருகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்.ஐ.ஆர்.) நடவடிக்கையில் முறைகேடுகள் நடைபெற்றதாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, நாடு முழுவதும் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தொடர்ந்து, எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக தகுதி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் இந்த மாதிரி நாடாளுமன்றம் தில்லியில் நடைபெற்று வருகிறது. இந்த மாதிரி நாடாளுமன்றத்துக்கு முன்னாள் மக்களவைத் தலைவர் மீரா குமார் தலைமை தாங்குகிறார். மேலும், ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே உள்ளிட்டஇந்தியா கூட்டணியைச் சேர்ந்த முக்கியத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டு உரையாற்றுகின்றனர். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞானேஷ் குமார் விவகாரம்: இந்தியா கூட்டணி நடத்தும் மாதிரி நாடாளுமன்றம்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗