தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை விடமாட்டோம் என ராகுல் காந்தி தெரிவித்தது குறித்து... மாதிரி நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தி. - படம் - எக்ஸ் இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை தப்பிக்க விடமாட்டோம் என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி சனிக்கிழமை (அக். 31) தெரிவித்தார். எஸ்ஐஆர் நடவடிக்கைகளை எதிர்த்தும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக பதவி நீக்கத் தீர்மானம் கொண்டு வருவதற்காகவும் ஒரு மாதிரி நாடாளுமன்றக் கூட்டத்தை தில்லியில் இந்தியா கூட்டணி நடத்தியது. இந்தக் கூட்டத்தில் ராகுல் காந்தி பேசியதாவது: நாங்கள் உங்களைத் தப்பிக்க விடமாட்டோம். ஞானேஷ் குமார் ஓர் உதாரணம் மட்டுமே; இன்னும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று எங்களுக்குத் தெரியும். இந்த நிகழ்வு உங்களுக்கான ஒரு எச்சரிக்கை. நிலைமைகள் மாறிக்கொண்டிருக்கின்றன. நான் இதை அன்போடும் பாசத்தோடும் கூறுகிறேன். நாங்கள் மோசமானவர்களோ அல்லது தீயவர்களோ அல்ல; ஆனால் நாங்கள் அரசியலமைப்பையும் எங்கள் மக்களின் குரலையும் பாதுகாப்போம். ஞானேஷ் குமார் மீது பதவிநீக்கம் நடவடிக்கை எடுப்பது மட்டுமல்லாமல், அவர் மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்தில் விசாரணை நடத்தி நீதி வழங்கப்பட வேண்டும். பிரதமர் மோடியும் அமித் ஷாவும் உயர்நிலையில் இருக்கலாம். நாங்கள் அவர்களைச் சமாளிப்போம். ஆனால் நீங்கள் (ஞானேஷ் குமார்) அவர்களின் கருவிகள். அதனால் நீங்கள்தான் எங்கள் முதல் இலக்கு என்று ராகுல் காந்தி தெரிவித்தார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஞானேஷ் குமாரை தப்பிக்க விடமாட்டோம்: ராகுல் காந்தி உறுதி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗