ஹோர்முஸ் நீரிணையில் 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதாக ஈரான் அறிவிப்பு... ஹோர்முஸ் நீரிணையில்... - கோப்புப் படம் ஈரானின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கியதாக, ஈரானிய படைகள் அறிவித்துள்ளன. சர்வதேச எரிபொருள் விநியோகத்தின் முக்கிய பாதையான ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்வதற்கு அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளின் கப்பல்களுக்கும், அவர்களின் கூட்டாளிகளின் கப்பல்களுக்கும் ஈரான் அரசு தடை விதித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஹோர்முஸ் நீரிணையின் குறிப்பிட்ட பாதைகள் வழியாக மட்டுமே வெளிநாடுகளின் சரக்குக் கப்பல்கள் அனுமதிக்கப்படும் நிலையில், மற்ற பாதைகளில் கப்பல்களைத் தகர்க்கும் கண்ணிவெடிகளை ஈரானிய படைகள் பொருத்தியுள்ளன. இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் தங்களின் அனுமதியின்றி ஹோர்முஸ் நீரிணையின் வழியாகச் செல்ல முயன்ற 3 எண்ணெய்க் கப்பல்கள் கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி தீப்பற்றி எரிந்ததாக, ஈரானின் புரட்சிகர காவல் படை இன்று (அக். 29) அறிவித்துள்ளது. இதையடுத்து, இந்தச் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட 3 கப்பல்களும், ஈரானிய அதிகாரிகளின் எச்சரிக்கையைப் புறக்கணித்து ரேடார் கருவிகளை அணைத்தபடி அவ்வழியாகச் சென்றதாக, ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஹோர்முஸ் நீரிணையில் சில கப்பல்கள் தீப்பற்றி எரிந்ததை பிரிட்டன் ராணுவத்தின் கண்காணிப்புக் குழு உறுதி செய்துள்ளது. இருப்பினும், இந்தத் தாக்குதலில் பாதிக்கப்பட்ட கப்பல்கள் குறித்தும், அதில் பயணித்த மாலுமிகளின் நிலை குறித்தும் இதுவரை எந்தவொரு தகவலும் வெளியிடப்படவில்லை. முன்னதாக, ஹோர்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்களுக்கு அமெரிக்க கடற்படை பாதுகாப்பு அளித்து வருகின்றது. ஆனால், சமீபகாலமாக அவ்வழியாகச் செல்லும் கப்பல்கள் தொடர்ந்து கண்ணிவெடித் தாக்குதல்களில் சிக்கி வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடியில் சிக்கிய 3 எண்ணெய்க் கப்பல்கள்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗