இ20 பெட்ரோல் 420 ஆக மாறியது! மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இ20 பெட்ரோல் 420 ஆக மாறியது! மத்திய அரசை விமர்சித்த ராகுல் காந்தி!

எத்தனால் கலப்பு விவகாரம் குறித்து மத்திய அரசை கடுமையாக விமர்சித்த ராகுல் காந்தி.. மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி - X இ20 பெட்ரோல் இப்போது 420 ஆக மாறியதாக மத்திய அரசை மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார். கர்நாடகத்தில் விற்பனை செய்யப்படும் பெட்ரோலில் எத்தனால் கலப்பு 31.2 சதவீதம் வரை இருப்பதாக அந்த மாநில அரசு வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக ராகுல் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில், இ20 பெட்ரோல் தற்போது 420 ஆக மாறிவிட்டது. பொதுமக்களின் வாகனங்களிலிருந்து பெட்ரோல் திருடப்படுகிறது. பெட்ரோலில் 20 சதவீதம் வரை எத்தனால் கலக்கப்படுவதாகப் பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால், கர்நாடகத்தின் 7 மாவட்டங்களில் இருந்து பெட்ரோல் மாதிரிகளைச் சேகரித்து ஆய்வு செய்தது. இதில் 14 மாதிரிகளில் 11 மாதிரிகளில் எத்தனால் கலப்பு 20 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது தெரிய வந்துள்ளது. இதன்மூலம், வாகன ஓட்டிகள் அதிக விலை கொடுத்து பெட்ரோல் வாங்கினாலும், அவர்களது வாகனங்களில் எத்தனால் அதிகளவில் நிரப்பப்படுவது தெரிய வந்துள்ளது. பெட்ரோல் நிலையங்களிலும் இதுகுறித்த விவரங்கள் குறிப்பிடுவதில்லை. நமது வாகனங்களில் நிரப்பப்படும் எரிபொருள் என்ன என்பதைப் பிரதமர் மோடி தெளிவுபடுத்த வேண்டும். பெட்ரோலில் எத்தனை சதவீதம் எத்தனால் கலக்கப்படுகிறது? 20 சதவீதத்துக்கும் அதிகமாக எத்தனால் கலக்கும் பெட்ரோல் நிறுவனங்கள் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்படும்? பொதுவெளியில் என்னுடன் விவாதிக்க நான் விடுத்த சவால் என்ன ஆனது? இவ்வாறு அவர் கேள்வி எழுப்பினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை