இனிவரும் காலங்களில் போக்குவரத்து துறை மக்களுக்கு பயனுள்ள துறையாகவும், தனியாருக்கு இணையாக இருக்கும் என அமைச்சர் கூறியிருப்பது... போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் - டிஎன்எஸ் சேலம்: இனிவரும் காலங்களில் தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துத் துறை மக்களுக்கு பயனுள்ள துறையாகவும், தனியாருக்கு இணையாக இருக்கும் என போக்குவரத்து துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் தெரிவித்துள்ளார். சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கி நிதி இணைப்பு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் போக்குவரத்துத் துறை அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன் கலந்து கொண்டு, 1,376 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ. 150 கோடி மதிப்பிலான வங்கி நிதி இணைப்புகளை வழங்கினார். மேலும், சில்லறை மீன் விற்பனையை ஊக்குவிக்கும் வகையில், 18 பயனாளிகளுக்கு குளிர்காப்புப் பெட்டி பொருத்தப்பட்ட இருசக்கர வாகனங்களையும் வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் அவர் பேசியதாவது: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கடந்த மூன்று நாள்களில் சென்னையிலிருந்து 10 ஆயிரத்து 224 பேருந்துகள் இயக்கப்பட்டு, 4 லட்சத்து 57 ஆயிரம் பயணிகள் பயணம் செய்துள்ளனர். பண்டிகை முடிந்து திரும்பும் பயணிகளின் வசதிக்காக தற்காலிக பேருந்து நிறுத்தங்கள் மற்றும் கூடுதல் பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், இனிவரும் காலங்களில் போக்குவரத்து துறை மக்களுக்கு பயனுள்ள துறையாகவும், தனியாருக்கு இணையாக இருக்கும் என அவர் கூறினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்துத் துறை தனியாருக்கு இணையாக இருக்கும்: அமைச்சர் விஜய் தமிழன் பார்த்திபன்