உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மு.வீரபாண்டியன்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மு.வீரபாண்டியன்

அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை... இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் - கோப்புப்படம் மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு பரிந்துரை வழங்க உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையில் கடந்த ஆட்சியில் உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. உயர் நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி முனைவர் பி.வி.ராஜமன்னார் தலைமையில் 1969 செப்டம்பர் 22 ஆம் தேதி முதல் உயர்மட்டக் குழு அமைக்கப்பட்டது. அதன் பிறகான 50 ஆண்டுகளுக்கு மேலான காலத்தில், மத்திய - மாநில உறவுகளில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைகள் மீது முறையாக ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை அளிக்க அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழுவில் இந்திய ஆட்சிப் பணியாற்றி ஓய்வு பெற்ற மூத்த அலுவலர் முனைவர் கே. அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் கல்வி புலத்திலும், அறிவுத் தளத்திலும் முத்திரை பதித்துள்ள பேராசிரியர் முனைவர் எம். நாகநாதன் ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. உயர் மட்டக் குழு தனது முதல் தொகுதி அறிக்கையை, கடந்த 2026 பிப்ரவரி 16 ஆம் தேதியில் தமிழ்நாடு அரசிடம் வழங்கியுள்ளது. இதன் தொடர்ச்சியாக உயர் மட்டக் குழு, தனது இறுதி அறிக்கையை நிறைவு செய்யும் நிலையில் இருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், மத்திய - மாநில உறவுகள் குறித்த உயர்நிலைக் குழு கலைக்கப்பட்டது சரியான நடவடிக்கையல்ல என இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி கருதுகிறது. பொருளாதாரம், கல்வி, வேலை, விவசாயம், வேலை வாய்ப்பு, இயற்கை வளங்களை கையாளுதல் உட்பட அனைத்து அதிகாரங்களையும் தன்னிடம் குவித்துக் கொண்டுள்ளது. தொடர்ந்து குவித்தும் வருகிறது. இது, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிரானது, மாநில உரிமைகளை மறுத்து வரும் செயலாகும். ஆளுநர்களை பயன்படுத்தி, மக்கள் தேர்வு செய்து அமைக்கப்பட்டுள்ள ஆட்சிக்கு எதிராக நடத்தி வரும் அதிகார அத்துமீறல்களை தமிழ்நாடு அரசும், மக்களும் கடந்த சில பத்தாண்டுகளாக அனுபவித்து உணர்ந்த உண்மையாகும். இந்த நிலையில் மத்திய - மாநில உறவுகள் குறித்து ஆய்வு செய்ய வேண்டியது அவசியமாகும். அந்த அவசியத் தேவையை கவனத்தில் கொள்ளாமல் நீதியரசர் குரியன் ஜோசப் தலைமையிலான உயர்மட்டக் குழு கலைக்கப்பட்டதை மறுபரிசீலனை செய்து, அது தனது பணியை பூரணமாக முடித்து தருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்தியுள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை