செஞ்சி அருகே இடி பாய்ந்து 2 பேர் பலியான சம்பவம் குறித்து... இடி பாய்ந்ததில் பலியான பள்ளியில் ஆய்வக உதவியாளர் அய்யனார், நாற்று எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராஜி. - டிஎன்எஸ் விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் சொரத்தூர் கிராமத்தில் வயலில் நாற்று எடுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆய்வக உதவியாளர் உள்பட இரண்டு பேர் இடி பாய்ந்து சம்பவ இடத்திலேயே பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஜம்போதி கிராமத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம் மகன் அய்யனார்(36). இவர் தையூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவருக்கு சொந்தமான நிலம் சொரத்தூர் கிராமத்தில் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள அவரது நிலத்தில் விவசாயப் பணிக்காக நாற்று எடுக்கும் பணியில் தையூர் கிராமத்தைச் சேர்ந்த சின்னசாமி மகன் ராஜி(50) ஈடுபட்டிருந்தார். இடியுடன் கூடிய கனமழை இந்தநிலையில் மதியம் செஞ்சி உள்ளிட்ட பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழை பெய்தது. அப்போது, எதிர்பாராத விதமாக விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்த பள்ளி ஆய்வக உதவியாளர் அய்யனார் மற்றும் நாற்று எடுத்துக் கொண்டிருந்த ராஜி ஆகியோர் மீது இடி பாய்ந்தது. இடி பாய்ந்ததில் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்தனர். இதைக் கண்டு அருகில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இடி பாய்ந்ததில் பாதிக்கப்பட்டவர்களை செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். மருத்துவமனையில் அய்யனார், ராஜி ஆகியோரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து செஞ்சி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் இடி பாய்ந்ததில் பலியான சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பள்ளியில் பணியாற்றி வந்த அய்யனார் மற்றும் கூலித் தொழிலாளி ராஜியின் உயிரிழப்பால் அவர்களது குடும்பத்தினர் கதறி அழுதது காண்போரையும் கண்கலங்க வைத்தது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
செஞ்சி அருகே சோகம்: நாற்று எடுத்த போது இடி பாய்ந்து ஆய்வக உதவியாளர் உள்பட 2 பேர் பலி
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗