காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 74,600-ஐ கடந்துள்ளது குறித்து... இஸ்ரேலின் தாக்குதலில் கொல்லப்பட்ட தனது 4 வயது மகனின் உடலை தூக்கிச் செல்லும் பாலஸ்தீன தந்தை... - AP காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்களால் இதுவரை 74,600-க்கும் அதிகமான பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில், பாலஸ்தீன கிளர்ச்சியாளர்களான ஹமாஸ் படைகளுக்கும் இஸ்ரேல் ராணுவத்துக்கும் இடையே கடந்த 2023 அக்டோபர் மாதம் தொடங்கிய போரால் ஆயிரக்கணக்கான பாலஸ்தீன பெண்கள் மற்றும் குழந்தைகள் கொல்லப்பட்டனர். இருதரப்புக்கும் இடையே கடந்த 2025 அக்டோபர் மாதம் அமெரிக்கா தலைமையில் போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டாலும், காஸா மீதான தாக்குதல்களை இஸ்ரேலிய படைகள் தொடர்ந்து நடத்தி வருகின்றன. இதில், காஸா மற்றும் மேற்கு கரை ஆகிய பகுதிகளிலுள்ள அகதிகள் முகாம் மற்றும் குடியிருப்புப் பகுதிகளைக் குறிவைத்து இஸ்ரேலிய படைகள் தொடர்ந்துத் தாக்குதல் நடத்துவதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், காஸாவில் கடந்த 2023 ஆம் ஆண்டு முதல் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் இதுவரைக் கொல்லப்பட்ட பாலஸ்தீனர்களின் எண்ணிக்கை 74,640 ஆக அதிகரித்துள்ளதாக, காஸாவின் சுகாதார அமைச்சகம் இன்று (நவ. 7) அறிவித்துள்ளது. இஸ்ரேல் தாக்குதல்களால் கடந்த 48 மணிநேரத்தில் மட்டும் 10 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதில், கடந்த அக்.29 மற்றும் நவ.7 இடையேயான காலத்தில் மட்டும் சுமார் 70 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இதன்மூலம், போர்நிறுத்தம் அமலுக்குக் கொண்டுவரப்பட்ட பிறகு இந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 1,610 பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதையடுத்து, இஸ்ரேலின் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டுவர சர்வதேச நாடுகளும் இஸ்ரேலிய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டுமென மனித உரிமை ஆர்வலர்கள் வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
காஸாவின் துயரம்! இஸ்ரேல் தாக்குதலில் இதுவரை 74,640 பாலஸ்தீனர்கள் பலி!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗