தமிழக முதல்வரின் நடவடிக்கையால் தமிழர்களுக்கு புதிய நம்பிக்கை அமைச்சர் வினோத்... அமைச்சர் வினோத். தமிழகத்திற்கு 2026 தீபாவளி தான் தல தீபாவளி. தமிழக முதல்வர் உண்மையான நரகாசுரர்களை அழித்துள்ளார். இனி தமிழகத்திற்கு நல்ல காலம் தான் என வேளாண்துறை அமைச்சர் வினோத் பேட்டியளித்துள்ளார். வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை சார்பில் இயற்கை வேளாண் விலை பொருள்கள் விற்பனை தொடக்க விழா இன்று தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பழைய பேருந்து நிலையத்தில் அமைந்துள்ள உழவர் சந்தையில் நடைபெற்றது. இதில் தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் வினோத், சிறுபான்மை நலத்துறை அமைச்சர் ஷாஜகான், மாவட்ட ஆட்சியர் ரேவதி ஆகியோர் தொடங்கி வைத்தனர். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த வேளாண்துறை அமைச்சர் வினோத், தஞ்சை மாவட்டத்தில் 13 இடத்தில் இயற்கை வேளாண் விளைபொருள்கள் விற்பனையாகத்தை தொடங்கியுள்ளோம். தமிழகத்தில் இதுவரை எத்தனையோ தீபாவளி கொண்டாடப்பட்டுள்ளது. ஆனால், உண்மையான தலைத் தீபாவளி இந்த 2026 தீபாவளி தான். தமிழக முதலமைச்சர் உண்மையான நரகாசுரர்களை அழித்து தமிழர்களுக்கும், தமிழக மக்களுக்கும் தீபாவளியைக் கொண்டு சேர்த்துள்ளார். இனி தமிழகத்திற்கும், தமிழக மக்களுக்கும் எப்போதும் நல்ல காலம் தான்.. உலகெங்கிலும் வாழும் தமிழர்களுக்கு அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள். பெரியார் நூலக ஊழல் குறித்துக் கேட்டபோது, திமுக செய்திருப்பார்கள் என்று பதில் கூறிவிட்டுப் புறப்பட்டுச் சென்றார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இனி தமிழகத்திற்கு நல்ல காலம் தான்! அமைச்சர் வினோத்!
📅
📍 Thanjavur, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗