பிரதமர் நரேந்திர மோடி தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளது குறித்து... பிரதமர் நரேந்திர மோடி - படம் - எக்ஸ் பிரதமர் நரேந்திர மோடி, மக்களுக்கு தனது தீபாவளி வாழ்த்துகளை சனிக்கிழமை (நவ. 7) தெரிவித்துள்ளார். தீபாவளித் திருநாள், நாளை கொண்டாடப்படும் நிலையில் பல்வேறு அரசியல் தலைவர்கள் தங்களது வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதைத் தொடர்ந்து, தீபாவளி வாழ்த்து தெரிவித்து பிரதமர் மோடி விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த விடியோவில் பிரதமர் மோடி பேசியிருப்பதாவது: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு, நாடு முழுவதும் ஒளியால் ஜொலிக்கிறது. இந்த தீபாவளித் திருநாள், இருளுக்கு எதிரான நமது உறுதியின் பிரதிபலிப்பாகும். நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த தீபாவளி வாழ்த்துகள். இந்த தீபாவளிப் பண்டிகை உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி, அமைதி மற்றும் செழிப்பைக் கொண்டுவர வேண்டும். உங்களைப் போலவே, நானும் தீபாவளியை மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடுகிறேன். வழக்கம்போல, இந்த தீபாவளியையும் நமது ராணுவ வீரர்களுடன் நான் கொண்டாடவிருக்கிறேன் என்று பிரதமர் தெரிவித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவேன்; பிரதமர் மோடி தீபாவளி வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Politics
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗