சந்திரசேகரன் பதவிக்கு ஆபத்து! டாடாவுக்கு எதிராக நின்ற வேணு சீனிவாசன்! டிசம்பர் 11ல் எல்லாம் முடியும்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
சந்திரசேகரன் பதவிக்கு ஆபத்து! டாடாவுக்கு எதிராக நின்ற வேணு சீனிவாசன்! டிசம்பர் 11ல் எல்லாம் முடியும்

மும்பை: டாடா அறக்கட்டளையின் கீழ் உள்ள சர் ரத்தன் டாடா டிரஸ்டில் (SRTT) துணை தலைவராக உள்ள வேணு சீனிவாசனின் அறங்காவலர் பதவிக்காலம் வரும் டிசம்பர் 11ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அவரது பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான தீர்மானத்தை நிறைவேற்ற அறங்காவலர் குழு கூட்டம் நடத்த முடியாத சூழல் நிலவுகிறது. இதனால், டாடா அறக்கட்டளையின் தலைவர் நோயல் டாடாவுக்கு எதிராக செயல்பட்டு வந்த வேணு சீனிவாசன், முக்கிய பொறுப்பில் இருந்து வெளியேறும் நிலை உருவாகியுள்ளது. மகாராஷ்டிரா அறநிலைய ஆணையரின் தடையால், கடந்த மே மாதம் முதல் SRTT அறங்காவலர் குழு கூட்டங்கள் நடைபெறவில்லை. இந்த தடைக்கு காரணமாக அமைந்தது வேணு சீனிவாசன் தொடர்ந்த மனுதான். அறக்கட்டளையின் நிர்வாக குழுவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை, மகாராஷ்டிரா பொது அறக்கட்டளைகள் சட்டத்துக்கு முரணாக இருப்பதாக அவர் மனுவில் குறிப்பிட்டிருந்தார். தொடர முடியாது குறிப்பிட்ட பதவிக்காலம் முடிந்த பிறகு, அறங்காவலர் தானாகவே அந்த பொறுப்பில் தொடர முடியாது. அறக்கட்டளை விதிகளில் அதற்கான சிறப்பு அனுமதி இருந்தால் மட்டுமே இது சாத்தியம். எனவே, டிசம்பர் 11ஆம் தேதிக்குள் பதவிக்கால நீட்டிப்புக்கான தீர்மானம் நிறைவேற்றப்படாவிட்டால், வேணு சீனிவாசனின் அறங்காவலர் பதவி தானாகவே முடிவுக்கு வந்துவிடும் என சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். அதன்பிறகு SRTT டிரஸ்ட் விவகாரங்களில் அவருக்கு இடமிருக்காது. அடுத்த அறங்காவலர் குழு கூட்டத்தில் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டால் மட்டுமே அவரால் மீண்டும் பொறுப்பில் தொடர முடியும். ஆனால், அப்படி ஒரு கூட்டம் நடந்தாலும் வேணு சீனிவாசனுக்கு ஆதரவு கிடைப்பது கடினம். அவரது பதவிக்காலத்தை நீட்டிக்க மற்ற அறங்காவலர்கள் அனைவரின் ஆதரவும் தேவை. நோயல் டாடாவுக்கு எதிராக அவர் எடுத்த நிலைப்பாடுகள், அறக்கட்டளைக்கு எதிராக தொடர்ந்த புகார்கள் காரணமாக மற்ற உறுப்பினர்கள் அவருக்கு ஆதரவளிக்க வாய்ப்பில்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன. ரத்தன் டாடா மறைவுக்கு பிறகு நோயல் டாடா அறக்கட்டளையின் தலைவராக பொறுப்பேற்றதில் இருந்தே நிர்வாகத்துக்குள் கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன. டாடா சன்ஸ் நிறுவனத்தை தனியார் நிறுவனமாகவே தொடர்ந்து வைத்திருக்க வேண்டும் என்பது நோயல் டாடாவின் நிலைப்பாடு. ஆனால், டாடா சன்ஸ் பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று கருத்துகள் எழுந்த நிலையில், அதற்கு வேணு சீனிவாசனின் ஆதரவு கொடுத்தார். இது மறைந்த ரத்தன் டாடாவின் நிலைப்பாட்டுக்கும் முரணாக இருந்ததாக கூறப்படுகிறது. அடுத்து டாடா சன்ஸ் தலைவர் என். சந்திரசேகரனின் பதவிக்காலத்தை நீடிப்பதிலும் குழப்பம் ஏற்பட்டது. அதாவது அவரது நியமன விவகாரத்திலும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. சந்திரசேகரன் ஏற்கனவே 2 முறை அந்த பதவியில் இருந்துவிட்ட நிலையில், மீண்டும் அந்த பதவியில் தொடரக்கூடாது என நோயல் டாடா எதிர்ப்பு தெரிவித்திருந்தார். இருப்பினும், வேணு சீனிவாசன் சந்திரசேகரனுக்கு ஆதரவாக வாக்களித்தார். அது அடுத்த சர்ச்சை! மேலும், டாடா அறக்கட்டளையின் நிர்வாக விவகாரங்களில் சிரமங்களை ஏற்படுத்தியதாக கூறி வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங் மீது விமர்சனங்கள் எழுந்தன. இப்போது இந்த SRTT டிரஸ்டில் ஐந்து அறங்காவலர்கள் உள்ளனர். நோயல் டாடாவுக்கு ஆதரவான நபராக கருதப்படும் டேரியஸ் கம்பட்டா தனது பதவிக்காலத்தை நீட்டிக்க விரும்பவில்லை. ஜஹாங்கீர் எச்.சி. ஜஹாங்கீரும் நோயலுக்கு ஆதரவாக உள்ளார். ஜிம்மி டாடா மற்றொரு அறங்காவலராக இருந்தாலும், முக்கிய முடிவுகளில் அவர் பெரிதாக இதில் எல்லாம் பங்கேற்க மாட்டார். எனவே, வேணு சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைந்து, அவர் விலகினால்.. குழுவில் மூன்று உறுப்பினர்களே எஞ்சும் நிலை ஏற்படும். அதன் பிறகு, எதிர்ப்பின்றி புதிய அறங்காவலர்களை நியமிக்க நோயல் டாடாவுக்கு வாய்ப்பு கிடைக்கும். எனினும், வேணு சீனிவாசன் இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு சர் தோராப்ஜி டாடா டிரஸ்டில் (SDTT) அறங்காவலராக தொடர்வார். அங்கு விஜய் சிங்கின் பதவிக்காலம் 2027 ஜூலை வரை உள்ளது. ஆறு உறுப்பினர்களை கொண்ட அந்த அறக்கட்டளையில் நோயல் டாடாவுக்கு ஆதரவாக மூன்று பேரும், எதிராக வேணு சீனிவாசன் மற்றும் விஜய் சிங்கும் உள்ளனர். எனவே, அங்கு சிக்கல் தொடரவே செய்யும். இதற்கிடையே டாடா சன்ஸ் ஆண்டு பொதுக்கூட்டத்தில் சந்திரசேகரனின் இயக்குநர் பதவியை நீட்டிப்பது குறித்த இறுதி முடிவு எடுக்கப்படுகிறது. டாடா சன்ஸ் நிறுவனத்தில் இந்த SRTT மற்றும் SDTT அறக்கட்டளைகளுக்கு 66 சதவீத பங்குகள் உள்ளன. எனவே, இரு அறக்கட்டளைகளும் இணைந்து தங்களது பிரதிநிதியை நியமிக்க வேண்டும். அந்த பிரதிநிதியின் வாக்கு சந்திரசேகரனின் மறுநியமனத்தில் முக்கிய பங்கு வகிக்கும். இந்த சூழலில் தான் SRTTயில் வேணு சீனிவாசனின் பதவிக்காலம் முடிவடைவது நோயல் டாடாவுக்கு மிக பெரிய பலத்தை கொடுக்கும்! இதன் மூலம் சந்திரசேகரனின் பதவி நீடிப்பை தடுக்க முடியும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை