இது ஏற்றுக்கொள்ளதக்க செயலா? தயாரிப்பாளர் கண்ணன் ரவி பதில்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Entertainment ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இது ஏற்றுக்கொள்ளதக்க செயலா? தயாரிப்பாளர் கண்ணன் ரவி பதில்!

தயாரிப்பாளர் கண்ணன் ரவி தன் மகன் திருமண சடங்குகள் குறித்து பேசியுள்ளார்... தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பாளர் கண்ணன் ரவி தன் மகன் திருமணத்தில் நடந்த விஷயங்கள் குறித்து பதிலளித்துள்ளார். தயாரிப்பாளர் கண்ணன் ரவி ராவண கோட்டம், தலைவர் தம்பி தலைமையில், டிஎன் 2026 ஆகிய திரைப்படங்களைத் தயாரித்தவர். தமிழ் சினிமாவில் பெரிய முதலீட்டு திரைப்படங்களத் தயாரிக்கும் முயற்சியிலும் உள்ளார். அண்மையில், இவர் மகன் தீபக் ரவிக்கும் முன்னாள் அமைச்சர் துரைமுருகனின் பேத்திக்கும் திருமணம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் இந்தியாவில் மட்டுமல்லாது துபை உள்பட பல நாடுகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்தனர். கண்ணன் ரவி கடந்த 35 ஆண்டுகளாகத் துபையில் தொழிலதிபராக உள்ளதால் கல்யாணமும் பிரம்மாண்ட செலவில் சென்னையில் நடைபெற்றது. ஆனால், இந்த நிகழ்வில் மணப்பெண்ணை அழைத்து வரும் போது அவரைப் பொலிவாகக் காட்ட நடனப் பெண்கள் வண்ணம் பூசப்படாத சாம்பல் நிறத் தோற்றத்தில் மணமகளைச் சூழ்ந்து வந்தனர். இந்த வரவேற்பு சமூக வலைதளங்களில் பெரிய சர்ச்சையானது. எப்படி மற்ற பெண்களுக்கு சாயம் அடித்து இன்னொருவரைத் தங்கம் போல் காட்ட முடியும்? இது மனிதத் தன்மையற்ற செயல் என விமர்சனங்கள் எழுந்தன. இந்த நிலையில், இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்த தயாரிப்பாளர் கண்ணன் ரவி இதுகுறித்த கேள்விக்கு, “யாரையும் தரக்குறைவாகக் காட்ட வேண்டும் என இதைச் செய்யவில்லை. அப்பெண்களைச் சிலையாகக் காட்ட வேண்டும் என்கிற அழகியல் நோக்கில்தான் அப்படி ஒரு வரவேற்பு செய்யப்பட்டது. மற்றவர்களும் அதனை அப்படியே பாருங்கள். என் பொருளாதார நிலைமைக்கு வெளிநாட்டிலேயே திருமணத்தைச் செய்திருக்க முடியும். ஆனால், நம் நாட்டில் நம் மக்கள் சூழ நடத்த வேண்டும் என நினைத்துச் செய்தேன். அது விமர்சனங்களைச் சந்தித்துள்ளது. இருந்தாலும் அதனை நான் எதிர்கொள்வேன். மேலும், இவ்வளவு செலவு செய்ய வேண்டுமா? என்றும் பேசினார்கள். என் சொத்து முழுவதும் என் பிள்ளைகளுக்குத்தான்; அவர்கள் சந்தோஷம்தான் எனக்கு முக்கியம். சம்பாதிக்கும் அளவு அதனைச் செலவு செய்யும் பாக்கியவான்களில் நானும் ஒருவன். என்னிடம் பணம் இல்லையென்றால் எளிமையாகத்தான் இத்திருமணம் நடைபெற்றிருக்கும். பணம் இருக்கிறது என்பதால் ஆடம்பரமாகச் செய்தேன். மேலும், சமஸ்கிருத முறைப்படி திருமணச் சடங்குகள் நடந்தன. நான் இந்து மதத்தைச் சார்ந்தவன். என் மதமுறைப்படி திருமணம் நடத்தியதில் என்ன தவறு? திமுக கட்சியைச் சார்ந்தவரின் வீட்டில் பெண் எடுத்தால் கடவுள் மறுப்பையும் ஏற்க வேண்டுமா? இது ஒருவீட்டினரின் முடிவு அல்ல. திருமணம் என்பது இரண்டு வீட்டைச் சார்ந்தது. அதனால், இதில் அரசியல் நோக்கங்கள் இருக்கக் கூடாது. பிராமணர்களும் இந்த நாட்டைச் சேர்ந்தவர்கள்தான். அவர்களுடன் போட்டிபோட ஆயிரம் வழிகள் இருக்கும்போது இந்த வழியை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்?” எனப் பதிலளித்துள்ளார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை