மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித நேரடி ஆய்வுகளும் கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித நேரடி ஆய்வுகளும் கூடாது: பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

மேகேதாட்டு பகுதி சென்னை: காவிரிப்படுகை மாநிலங்களின் ஒப்புதல் இன்றி மேகேதாட்டு அணை கட்ட கர்நாடகாவுக்கு எவ்வித அனுமதியும் மத்திய அரசு தரக் கூடாது என்று பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். மேகேதாட்டு அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் பார்வையிட்டது சரியல்ல என்றும் விஜய் கூறியுள்ளார். இது குறித்து பிரதமர் மோடிக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், “தமிழகத்தின் காவிரி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நீர் கிடைப்பது தொடர்பாகவும், கர்நாடகாவின் மேகேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளால் விவசாய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் அச்சம் குறித்தும், மிக முக்கியமான இந்த விவகாரத்தை உடனடியாக உங்கள் கவனத்துக்குக் கொண்டுவரவே இந்தக் கடிதத்தை எழுதுகிறேன். கர்நாடகா மற்றும் தமிழகம் ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேகேதாட்டு நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம், தமிழகத்துக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்ச நீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழகத்துக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும். கீழ்ப்படுகை மாநிலமான தமிழகத்தின் ஒப்புதலின்றி, மேகேதாட்டு அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) அனுமதி பெற, ஒன்றிய ஜல் சக்தி அமைச்சக / ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலர்களுடன் கர்நாடக முதல்வரின் சந்திப்பு நடப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன. இது தமிழக விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது, முன்னதாக, கர்நாடக அரசு கூறியதாக வெளியான செய்தி அறிக்கைகளின்படி, ஒன்றிய அரசின் அதிகாரிகள் குழு ஒன்று மேகேதாட்டு அணை கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டதாகத் தெரியவருகிறது. இதன்மூலம் தமிழக விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் மேகேதாட்டு அணை கட்டும் திட்டத்தை மறைமுகமாகச் செயல்படுத்துவதன் அறிகுறியாகவே தமிழக விவசாயிகள் அஞ்சுகின்றனர். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஆண்டுகளில் விகிதாச்சார (pro-rata) அடிப்படையில் கூட தமிழகத்துக்குச் சேரவேண்டிய நீரினை கர்நாடகா வழங்க மறுப்பதால், இந்தப் பற்றாக்குறை நீர் ஆண்டில் (2026–27) ஏற்கெனவே தவித்து வரும் காவிரி டெல்டா விவசாயிகளின் கவலையை, ஒன்றிய அரசு அதிகாரிகள் அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தைப் பார்வையிட்டதாக வந்த செய்தி மேலும் அதிகரித்துள்ளது. இது தொடர்பாக, 28.07.2026-ஆம் நாளிட்ட எனது கடிதத்தை பிரதமரின் கனிவான கவனத்துக்குக் கொண்டு வருவதுடன், அதில், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு இணங்கி உள்ளதாகத் தெளிவாக நிரூபிக்கப்படாமல் மேகேதாட்டு திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கப்படக் கூடாது. மாநிலங்களுக்கு இடையேயான இந்தப் பிரச்சினையில் தீர்வு எட்டப்படும் வரை, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மேகேதாட்டு திட்டத்துக்கு எந்தவொரு அனுமதியையும் வழங்கத் தடை விதிக்கக் கோரி, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழகம் அசல் மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக சட்டப் பேரவையில் 19.06.2026 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் கர்நாடக அரசுக்கோ அல்லது அதன் நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கோ எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது. மேலும், பிப்ரவரி 2007-இல் நடுவர் மன்றத்தால், காவிரிப் படுகை, நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால், காவிரிப் படுகைக்கு மட்டுமே பொருந்தும் வகையில் நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்குத் திட்ட முன்மொழிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக டிசம்பர் 2025-இல் ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு அறிக்கையைத் திரும்பப்பெறக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் 03.08.2026 அன்று தமிழக அரசு தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு (W.P. (Civil) No. 1045 of 2026), நிலுவையில் இருக்கிறது. கீழ்ப்படுகை மாநிலங்களின் மொத்தப் பங்கு மற்றும் மாதாந்திர அட்டவணைப்படி நீர் வழங்கப்படுதலை உறுதிசெய்தல் ஆகிய இரு உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவது அவசியமானது என்பதால், கர்நாடகா சமர்ப்பித்துள்ள மேகதாது திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதோ / ஆய்வு செய்வதோ அல்லது இத்தருணத்தில் ஒன்றிய அரசின் முகமைகளின் ஒருதலைப்பட்சமான தொழில்நுட்ப மதிப்பீடுகள் அல்லது நேரடி தள ஆய்வுகள் முற்றிலும் பொருத்தமற்றது. மேற்கூறியவற்றின் அடிப்படையில், நீங்கள் (பிரதமர் மோடி) உடனடியாகத் தலையிட்டு கீழ்க்காணும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன். அந்தக் கோரிக்கைகளின் விவரம் வருமாறு: 1. உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பைக் கருத்தில் கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேகேதாட்டு திட்டத்துக்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ / நிர்வாக அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகம் மற்றும் ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். 2. ஒன்றிய ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிருவாக அல்லது தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும். 3. சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டத்தைத் தொடரவேண்டாம் என கர்நாடக அரசுக்கு அறிவுறுத்த வேண்டும்” என்று அந்தக் கடிதத்தில் முதல்வர் விஜய் கூறியுள்ளார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை