கேதார கௌரி விரதம் எப்போது தொடங்குகிறது? பூஜை செய்ய சரியான நேரம்.. ஜோதிடர் விளக்கம்!

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Events ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
கேதார கௌரி விரதம் எப்போது தொடங்குகிறது? பூஜை செய்ய சரியான நேரம்.. ஜோதிடர் விளக்கம்!

தீபாவளியும், அமாவாசையும் ஒரே நாளில்... கேதார கௌரி விரதம் எப்போது கடைப்பிடிக்க வேண்டும்? கேதார கௌரி விரதம் - file photo தீபாவளியும், அமாவாசையும் இந்தாண்டு ஒன்றாக வருவதால் கேதார கௌரி விரதம் எப்போது அனுஷ்டிக்க வேண்டும்? என்ற குழப்பம் அனைவர் மத்தியிலும் நிலவுகிறது. கேதார கௌரி பூஜை எப்போது செய்ய வேண்டும் என்று தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் விளக்கியுள்ளார். அதன்படி, நவம்பர் 8-ஆம் தேதி பிற்பகல் 12.00 மணிக்கு அமாவாசை தொடங்கி மறுநாள் நவம்பர் 9-ஆம் தேதி பிற்பகல் 12.46-க்கு அமாவாசை நிறைவடைகின்றது. இதையடுத்து 12.00 - 1.30க்கு எமகண்டமும், அதைத்தொடர்ந்து மாலை 4.30 - 6.00 ராகு காலம் வருவதால் கேதார கௌரி விரதப் பூஜை 7 மணிக்கு மேல் செய்வது உத்தமம் என்று கூறியுள்ளார். ஒருவேளை, திங்கள் கிழமை நவம்பர் 9-ஆம் தேதி கேதார கௌரி விரத பூஜை அனுஷ்டிப்பவர்கள் அன்றைய தினம் காலை பிரம்ம முகூர்த்தமான 4.30 முதல் 6.00 வரையிலும், அதோடு காலை 6.00 - 7.30 மணிக்குள் கலசம் நிறுத்தியோ அல்லது கோயிலுக்குச் சென்றோ பூஜையை முடித்துவிட வேண்டும். அதன்பிறகு ராகுகாலம், எமகண்டம் வருவதால் அந்த நேரத்தில் பூஜை செய்வது உகந்தது அல்ல என்று தெரிவித்துள்ளார். உமா தேவி, ஈஸ்வரனின் உடலில் இடப்பக்கத்தைப் பெற மேற்கொண்ட கேதார கௌரி விரதத்தை, தற்போது ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதத்தில் கடைப்பிடிக்கின்றனர். அவரவர் குடும்ப வழக்கப்படி கேதார கௌரி விரதத்தை கடைப்பிடிக்கலாம். பொதுவாக இந்த கேதார கௌரி விரதத்துக்கு 21 என்பது மிகவும் உகந்ததாக உள்ளது. உமா தேவி, ஈஸ்வரனை நினைத்து 21 நாள்கள் இந்த விரதத்தை அனுஷ்டித்ததால், இந்த பூஜையின்போது 21 எண்ணிக்கையில் அப்பம், வடை, பழம், பாக்கு, வெற்றிலை, அதிரசம் எனப் பூஜை பொருள்களை வைத்து, கலசம் நிறுத்திப் பூஜிப்பார்கள். இந்த பூஜையை இருபத்தோரு நாள்கள் செய்ய வேண்டும். ஆனால், எல்லா பெண்களாலும் 21 நாள்கள் பூஜை செய்ய முடியாததால், இவ்வாறு 21 பொருள்களை வைத்து பூஜிக்கப்படுகிறது. எனவே அவரவர் வசதிக்கேற்ப 21 நாள்களோ, 9 நாள்களோ, 5 நாள்களோ, 3 நாள்களோ அல்லது ஐப்பசி அமாவாசையன்றோ கேதார கெளரி தினத்தில் பார்வதி சமேதரான சிவபெருமானை வழிபட வேண்டும். ஆண்களும் இவ்விரதத்தை அனுஷ்டிக்கலாம். முதல் 20 நாளும் ஒரு பொழுது சூரிய அஸ்தமனத்தின் பின் உணவருந்தி, இறுதி நாளாகிய சதுர்தசி அன்று உபவாசம் இருந்து மறுநாள் காலை சூரிய உதயத்திற்கு முன்னர் "பாரணம்" செய்து விரதத்தை முடித்தல் வேண்டும். தீபாவளி அன்று நோன்பிருப்பவர்கள் நாள் முழுவதும் உபவாசமிருந்து "ஓம் நமசிவாய.. சிவாய நம ஓம்" என்ற மந்திரம் ஜெபித்து, மாலை பிரதோஷ காலத்தில் நோன்பை முடிக்க வேண்டும். பூஜைக்காக முதலில் மஞ்சள், பிள்ளையாரை செய்வித்து சந்தனம், குங்குமம், புஷ்பம், அறுகு சார்த்தி விநாயகரை பதினாறு நாமம் சொல்லி அர்ச்சனை செய்து, பின்னர் தூப தீபம் காட்டி தாம்பூலம், நைவேத்தியம் செய்து தீபாராதனையான பிறகு, கேதாரீஸ்வரரை ஆவாகனம் செய்வர். பூஜையில், முனை முறியாத விரலி மஞ்சள், வெற்றிலை, கொட்டைப் பாக்கு, அரளிப்பூ, அரளி மொட்டு, இலை, வாழைப்பழம், அதிரசம், வகைக்கு நாளைக்கு ஒன்றாக 21 சமர்ப்பணம் செய்து, எலுமிச்சம்பழம் இரண்டு, நோன்புக் கயிறு சார்த்தி, தேங்காய் இரண்டு (ஒன்று குல தெய்வத்திற்கு) கருகுமணி, காதோலை, சீப்பு, கண்ணாடி சமர்ப்பித்து, பிரசாதமாக 21 அதிரசம், அப்பம் அல்லது சொய்யம், வடை முதலியன நைவேத்தியமாகச் சமர்ப்பித்து, தேங்காய் உடைத்து புஷ்ப அர்ச்சனை செய்து, தூப தீபம் காட்டி நைவேத்தியம் தாம்பூலம் சமர்ப்பித்து கற்பூர தீபாரதனை காண்பித்து நோன்புக் கயிற்றைக் கையில் கட்டிக்கொள்ள வேண்டும். சிலர் வீடுகளிலேயே கலசம் நிறுத்தி இந்த பூஜையை மேற்கொள்வர். சிலர் பூஜைக்கான எல்லா வேலைகளையும் செய்துவிட்டு பூஜை பொருள்கள் மற்றும் நோம்பு கயிற்றைக் கோயிலுக்கு எடுத்துச் சென்று அங்குப் பூஜித்து வீட்டுக்குக் கொண்டு வருவதும் வழக்கம். கணவன் - மனைவி ஒற்றுமைக்காக மேற்கொள்ளப்படும் இந்த விரதத்தை இயன்ற வரை விடாது அனுஷ்டிப்பது உத்தமம். விரத நாள் அன்று ஈஸ்வரனை வழிபட்டு சுமங்கலிப் பெண்களும், கன்னிப் பெண்களும் இந்த கேதார கௌரி விரதத்தை மேற்கொள்ளலாம். அதுமட்டும் அல்லாமல் எந்த வயதினரும், ஆண்களும், பெண்களும் ஈஸ்வரனை நினைத்து இந்த விரதத்தை மேற்கொண்டு வேண்டிய அருளைப் பெறலாம் என்பது ஐதீகம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை