மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கூடாது! பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தி பிரதமருக்கு முதல்வர் விஜய் கடிதம்... முதல்வர் விஜய், பிரதமர் நரேந்திர மோடி - கோப்புப்படம் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைக்க வலியுறுத்தியும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு மேக்கேதாட்டு அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: முதல்வர் ஜோசப் விஜய், தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து காவிரி நீர் கிடைத்திடவும், தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்திடும் வகையில் கர்நாடக அரசு உத்தேசித்துள்ள மேக்கேதாட்டு அணை கட்டும் இடத்தை மத்திய அரசு அதிகாரிகள் அண்மையில் பார்வையிட்டது சரியல்ல என தெரிவித்தும், கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி எவ்வித சட்டபூர்வ / நிர்வாக அனுமதியை வழங்கக்கூடாது என வலியுறுத்தியும் பிரதமர் நரேந்திர மோடிக்கு 6.11.2026 அன்று கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், தமிழ்நாட்டின் காவிரி ஆற்றுப் படுகையில் தொடர்ந்து நீர் கிடைப்பது தொடர்பாகவும், கர்நாடகத்தின் மேக்கேதாட்டு அணைத் திட்டம் தொடர்பான சமீபத்திய நிகழ்வுகளால் நமது விவசாய சமூகத்தினரிடையே அதிகரித்துவரும் அச்சம் குறித்தும், மிக முக்கியமான இந்த விவகாரத்தை உடனடியாக பிரதமர் கவனத்திற்குக் கொண்டுவரவே தாம் இந்தக் கடிதத்தை எழுதுவதாகக் குறிப்பிட்டுள்ள முதல்வர், கர்நாடகம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களுக்கு இடையேயான எல்லைக்கு சற்று மேலே, 67.16 டி.எம்.சி கொள்ளளவு கொண்ட மேக்கேதாட்டு நீர்த்தேக்கத்தைக் கட்ட கர்நாடக அரசு உத்தேசித்துள்ள திட்டம், தமிழ்நாட்டுக்கு உரிய நீர்வரத்தைத் தடுப்பது மட்டுமின்றி, உச்சநீதிமன்றம் நிர்ணயித்தபடி தமிழ்நாட்டுக்கு வழங்கப்பட வேண்டிய மாதாந்திர வாரியாக நீர் கிடைப்பதையும் கடுமையாகப் பாதிக்கும் என்று குறிப்பிட்டுள்ளார். முதல்வர் மேலும் தனது கடிதத்தில், கீழ்ப்படுகை மாநிலமான தமிழ்நாட்டின் ஒப்புதலின்றி, மேக்கேதாட்டு அணைத் திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கைக்கு (DPR) அனுமதி பெற, மத்திய ஜல் சக்தி அமைச்சக / மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சக அலுவலர்களுடன் கர்நாடக முதல்வரின் சந்திப்பு நடப்பதாகவும் தொடர்ந்து செய்திகள் வெளியாகி வருகின்றன என்றும், இது தமிழ்நாட்டு விவசாயிகளை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ள முதல்வர், முன்னதாக, கர்நாடக அரசு கூறியதாக வெளியான செய்தி அறிக்கைகளின்படி, மத்திய அரசின் அதிகாரிகள் குழு ஒன்று மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள இடத்தை நேரில் பார்வையிட்டதாகத் தெரிய வருவதாகவும், இதன்மூலம் தமிழ்நாட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தையே சீர்குலைக்கும் வகையில் மேக்கேதாட்டு அணை கட்டும் திட்டத்தை மறைமுகமாகச் செயல்படுத்துவதன் அறிகுறியாகவே தமிழ்நாட்டின் விவசாயிகள் அஞ்சுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், நீர்ப் பற்றாக்குறை ஆண்டுகளில் விகிதாச்சார (pro-rata) அடிப்படையில்கூட தமிழ்நாட்டிற்குச் சேரவேண்டிய நீரினை கர்நாடகம் வழங்க மறுப்பதால், இந்தப் பற்றாக்குறை நீர் ஆண்டில் (2026–27) ஏற்கனவே தவித்து வரும் காவிரி டெல்டா விவசாயிகளின் கவலையை, மத்திய அரசு அதிகாரிகள் அணை கட்ட உத்தேசித்துள்ள இடத்தைப் பார்வையிட்டதாக வந்த செய்தி மேலும் அதிகரித்துள்ளதாகவும் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, 28.07.2026-ஆம் நாளிட்ட தனது கடிதத்தை பிரதமரின் கனிவான கவனத்திற்குக் கொண்டுவருவதுடன், அதில், காவிரி நடுவர் மன்றத்தின் (CWDT) இறுதித் தீர்ப்பு மற்றும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பிற்கு இணங்கி உள்ளதாகத் தெளிவாக நிரூபிக்கப்படாமல் மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்தவொரு சட்டப்பூர்வ அல்லது நிர்வாக ஒப்புதலும் வழங்கப்படக் கூடாது என்று தாம் கோரியிருந்ததையும் தனது கடிதத்தில் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். மாநிலங்களுக்கு இடையேயான இந்தப் பிரச்னையில் தீர்வு எட்டப்படும் வரை, மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் மேக்கேதாட்டு திட்டத்திற்கு எந்தவொரு அனுமதியையும் வழங்கத் தடை விதிக்கக் கோரி, 27.05.2026 அன்று தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் முதன்மை அமர்வில் தமிழ்நாடு அசல் மனு தாக்கல் செய்துள்ளது என்றும், தமிழ்நாடு சட்டப்பேரவையில் 19.06.2026 அன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், மத்திய ஜல் சக்தி அமைச்சகம் கர்நாடக அரசுக்கோ அல்லது அதன் நிறுவனங்கள் மற்றும் இதர அமைப்புகளுக்கோ எந்தவித அனுமதியும் அளிக்கக் கூடாது என மீண்டும் வலியுறுத்தப்பட்டதையும் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், பிப்ரவரி 2007-இல் நடுவர் மன்றத்தால், காவிரிப் படுகை, நீர்ப் பற்றாக்குறை உள்ள படுகை எனத் தீர்ப்பளிக்கப்பட்டதால், காவிரிப் படுகைக்கு மட்டுமே பொருந்தும் வகையில் நீர்ப்பாசனம் மற்றும் பல்நோக்குத் திட்ட முன்மொழிவுகளுக்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பது தொடர்பாக டிசம்பர் 2025-இல் மத்திய ஜல் சக்தி அமைச்சகம் வெளியிட்ட வழிகாட்டு அறிக்கையைத் திரும்பப்பெறக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் 03.08.2026 அன்று தமிழ்நாடு அரசு தாக்கல் செய்த நீதிப்பேராணை மனு (W.P. (Civil) No. 1045 of 2026), நிலுவையில் இருப்பதையும் முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். கீழ்ப்படுகை மாநிலங்களின் மொத்தப் பங்கு மற்றும் மாதாந்திர அட்டவணைப்படி நீர் வழங்கப்படுதலை உறுதி செய்தல் ஆகிய இரு உரிமைகளும் முழுமையாகப் பாதுகாக்கப்படுவது அவசியமானது என்பதால், கர்நாடகம் சமர்ப்பித்துள்ள மேக்கேதாட்டு திட்டத்தின் விரிவான திட்ட அறிக்கையைப் பரிசீலிப்பதோ / ஆய்வு செய்வதோ அல்லது இத்தருணத்தில் மத்திய அரசின் முகமைகளின் ஒருதலைப்பட்சமான தொழில்நுட்ப மதிப்பீடுகள் அல்லது நேரடி தள ஆய்வுகள் முற்றிலும் பொருத்தமற்றது என்று வலியுறுத்தியுள்ளார். மேற்கூறியவற்றின் அடிப்படையில், பிரதமர் உடனடியாகத் தலையிட்டு கீழ்க்காணும் கோரிக்கைகள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கனிவுடன் கேட்டுக்கொள்வதாக முதல்வர் அக்கடிதத்தில் தெரிவித்துள்ளார். அக்கோரிக்கைகளின் விவரம் வருமாறு:- i. உச்ச நீதிமன்றத்தின் 16.02.2018-ஆம் நாளிட்ட தீர்ப்பைக் கருத்திற்கொண்டு, கீழ்ப்படுகை மாநிலங்களின் ஒப்புதலின்றி மேக்கேதாட்டு திட்டத்திற்கு எவ்வித நேரடி தள ஆய்வுகள், தொழில்நுட்ப மதிப்பீடுகள் செய்வதையோ அல்லது சட்டப்பூர்வ / நிர்வாக அனுமதிகள் வழங்குவதையோ தவிர்க்குமாறு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் & மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகங்களுக்கு அறிவுறுத்த வேண்டும். ii. மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தால் சமீபத்தில் நேரடி தள ஆய்வு மேற்கொள்ளப்பட்டிருந்தால், அதனால் ஏற்படும் தொடர் நிருவாக அல்லது தொழில்நுட்ப நடவடிக்கைகளை ஒத்திவைக்க வேண்டும். iii. சம்பந்தப்பட்ட படுகை மாநிலங்களின் ஒப்புதல் பெறாமல் இத்திட்டத்தைத் தொடர வேண்டாம் என கர்நாடக அரசிற்கு அறிவுறுத்த வேண்டும். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை