இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ Business ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
இளைஞரின் வங்கி கணக்கிற்கு வந்த ரூ.10,000 கோடி.. ரூ.10,000 சம்பளம் வாங்கியவருக்கு காத்திருந்த ஷாக்

ஜெய்ப்பூர்: மாதம் ரூ.10 ஆயிரம் சம்பாதிக்கும் 22 வயது மெடிக்கல் ஊழியரின் வங்கி கணக்கில் திடீரென்று ரூ.10 ஆயிரம் கோடி பணம் வரவு வைக்கப்பட்டு இருந்த சம்பவம் நடந்துள்ளது. என்ன நடந்தது? என்பது பற்றி இங்கு பார்க்கலாம். ராஜஸ்தான் மாநிலம் சிகார் பகுதியில் உள்ள சலாசர் பஸ் நிலையத்தின் அருகே நிர்மல் மெடிக்கல் உள்ளது. இந்த மெடிக்கலில சமீர் கான் என்பவர் பணியாற்றி வருகிறார். இவருக்கு மாத சம்பளம் ரூ.10 ஆயிரம். இவர் கடந்த 28 ம் தேதி தனது செல்போனுக்கு ரீசார்ஜ் செய்ய விரும்பினார். இதற்காக அவர் வங்கி கணக்கு வைத்திருக்கும் வங்கியின் செயலியை திறந்தார். அதில் பேலன்ஸ் செக் செய்து பார்த்தார். அப்போது பேலன்ஸ் பூஜ்ஜியம் என காண்பித்தது. மேலும் அதில் ரூ.10 ஆயிரம் கோடி Lien தொகையை காண்பித்தது. இதனால் அந்த சமீர்கான் அதிர்ச்சியடைந்தார். வங்கி கணக்கில் அவருக்கு சொந்தமான ரூ.55 ஆயிரம் இருந்தது. அதனையும் அவரால் பயன்படுத்த முடியாத அளவுக்கு வங்கி கணக்கு முடக்கம் செய்யப்பட்டது. இதனால் சமீர் கான் அதிர்ச்சியடைந்தார். உடனடியாக மெடிக்கல் உரிமையாளர் தீரஜ் சர்மாவிடம் கூறினார். இருவரும் சிகார் சைபர் கிரைம் போலீசுக்கு சென்று சம்பவம் பற்றி தெரிவித்தனர். திடீரென்று சமீர் கான் அக்கவுண்ட்டுக்கு ரூ.10 ஆயிரம் கோடி வந்துள்ளதும், தற்போது வங்கி கணக்கில் உள்ளமொத்த பணமும் முடக்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தனர். போலீசார் அவர்களை வங்கிக்கு செல்லும்படி கூறினர். இருவரும் வங்கிக்கு சென்று பார்த்தனர். அப்போது வங்கி ஊழியர்கள் பிரச்சனையை சரிசெய்தனர். ''தொழில்நுட்ப கோளாறு காரணமாக வங்கி கணக்கில் ரூ.10 ஆயிரம் கோடி காட்டுகிறது. இதனால் வங்கி கணக்கு முடக்கப்பட்டது'' என்று கூறி அந்த பிரச்சனையை சரிசெய்து கொடுத்தனர்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை