இளம் தலைமுறையினரையும் கேம் பிரியர்களைக் கவரும் வகையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள ரீசார்ஜ் திட்டம் குறித்து... ஜியோ - படம் - ஜியோ இளம் தலைமுறையினரையும் கேம் பிரியர்களைக் கவரும் வகையில் புதிய ரீசார்ஜ் திட்டத்தை ஜியோ அறிமுகம் செய்துள்ளது. இதன்படி, ரூ. 111க்கு ரீசார்ஜ் செய்து, இணையத்துடன் கேம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பெற முடியும். இந்தியாவைச் சேர்ந்த டெலிகாம் நிறுவனமான ஜியோவில் 53 கோடிக்கும் அதிகமான பயனர்கள் உள்ளனர். இவர்களுக்கான பல புதிய ரீசார்ஜ் திட்டங்களையும் சலுகைகளையும் ஜியோ அளித்து வருகிறது. அந்தவகையில் தற்போது, ரூ. 111-க்கு ரீசார்ஜ் செய்வதன் மூலம் கேம் மற்றும் பொழுதுபோக்கு அம்சங்களைப் பெறும் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ரீசார்ஜ் திட்டத்தில், ஜியோ கேம், ஃபேன்கோட் மற்றும் ஸ்நாப்சார்+ ஆகியவற்றை 28 நாள்களுக்குப் பெற முடியும். பயனர்கள் ரீசார்ஜ் செய்யும்போதே கேம் பேக் அல்லது யூத் பேக் என்ற இரு வகையில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்து ரீசார்ஜ் செய்துகொள்ளலாம். ரீசார்ஜ் செய்யும்போது எந்த வகையிலான ரீசார்ஜ் திட்டம் வேண்டும் என்பதை தேர்வு செய்துகொள்வது சிறப்பானதாக பார்க்கப்படுகிறது. இளசுகளைக் கவரும் ரூ.111-க்கான கேம் பேக் 58 நாள்களுக்கு வேலிடிட்டி கொண்டது. மொபைல் கேம் பிரியர்களுக்கு இத்திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ரூ. 111-க்கான ஜியோ யூத் பேக் 28 நாள்களுக்கு வேலிடிட்டி கொண்டது. இதில் ஜியோ கேம் மொபைல், ஃபேன் கோட், ஸ்நாம்சாட்+ ஆகியவற்றைப் பெறலாம். ஜியோ கேம் மொபைல் மூலம் ஜியோ கேம்ஸ் செயலியில் உள்ள சப்ஸ்கிரிப்ஷன் கேம்களை விளையாட முடியும். ஃபேன் கோட் மூலம் ஜியோ டிவியை ஸ்மார்ட்போனிலேயே பார்க்கலாம். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். ON GOOGLE DISCOVER
இளைஞர்களைக் கவரும் ரூ.111 ரீசார்ஜ் பிளான்! ஜியோவில் அறிமுகம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗