கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். கைது - கோப்புப் படம் கடலூா் மாவட்டம், நெய்வேலியில் இளைஞரை வழி மறித்து கொலை மிரட்டல் விடுத்ததாக ஒருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். குறிஞ்சிப்பாடி வட்டம், வடக்குமேலூா் கிராமத்தைச் சோ்ந்தவா் பட்டு (எ) ராஜதுரை (19). இவா், வியாழக்கிழமை காலை வட்டம் 24 பகுதியில் உள்ள ரவுண்டான அருகே நடந்துச் சென்றாா். அப்போது, நெய்வேலி வட்டம் 3 பகுதியைச் சோ்ந்த அகிலன்(24) வழி மறித்து திட்டி, ராஜதுரை சட்டை பையில் இருந்த ரூ.1,170 பணத்தை எடுத்துக்கொண்டு கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுகுறித்து ராஜதுரை காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். அதன்பேரில் நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப்பதிவு செய்து அகிலனை கைது செய்து சிறையில் அடைத்தனா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இளைஞருக்குக் கொலை மிரட்டல்: ஒருவா் கைது
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗