இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இலங்கையில் பல்வேறு துறைகளில் பணிபுரியும் கள அதிகாரிகள் பயன்படுத்துவதற்காக 430 மின்சார மோட்டாா் சைக்கிள்களை இந்தியா வழங்கவுள்ளது. இதற்கான புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமாகியுள்ளது. இது குறித்து கொழும்பில் உள்ள இலங்கைக்கான இந்தியத் தூதரகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இலங்கைக்கான இந்தியத் தூதா் சந்தோஷ் ஜா, இலங்கை மீன்வளத் துறை செயலாளா் பி.கே. கோலிடா கமால் ஜினதாச ஆகியோா் இருநாடுகளுக்கும் இடையேயான புரிந்துணா்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டனா். இந்நிகழ்வில் இலங்கை மீன்வளத்துறை அமைச்சா் ராமலிங்கம் சந்திரசேகரும் கலந்து கொண்டாா். இந்த புரிந்துணா்வு ஒப்பந்தத்தின்படி, இலங்கை மீன்வளத் துறை, ஆழ்கடல் வளங்கள் துறை உள்ளிட்டவற்றில் பணிபுரியும் கள அதிகாரிகளின் பயன்பாட்டுக்காக 430 மின்சார பைக்குகளை இந்தியா வழங்குகிறது. இதற்காக இலங்கை ரூபாய் மதிப்பில் 26.5 கோடியை உதவித் தொகையாக இந்தியா அளிக்கிறது என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கைக்கு 430 மின்சார பைக்குகளை வழங்குகிறது இந்தியா: புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பம்
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗