இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
இலவச பேருந்து பயணம் மாற்றுத் திறனாளிகளுக்கும் விரிவாக்கம்

சென்னை: அரசுப் பேருந்​துகளில் கட்​ட​ணமில்லா பயணத் திட்​டம் மாற்​றுத் திறனாளி​களுக்​கும் விரிவுபடுத்தப்பட்டுள்​ளது. அவர்​கள் ‘ஏஐ’ சார்ந்த நவீன உதவி உபகரணங்​கள் வாங்க ரூ.30 ஆயிரம் வரை நிதி​யுதவி வழங்​கவும் தமிழக அரசு அரசாணை வெளி​யிட்​டுள்​ளது. இது​தொடர்​பாக மாற்​றுத் திறனாளி​கள் நலத் துறை செயலர் சோ.மது​மதி வெளி​யிட்ட அரசாணைகளில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தில் 40 சதவீதம் மற்​றும் அதற்கு மேல் பாதிப்பு கொண்ட அனைத்து வகை மாற்​றுத் திறனாளி​களும், அவர்​களு​டன் துணைக்​குச் செல்​லும் ஒரு​வரும் சாதா​ரண நகரப் பேருந்​துகளில் மட்​டுமே இல​வச​மாக பயணிக்க அனுமதிக்​கப்​பட்டு வந்​தது. இந்த நிலை​யில், தற்​போது அரசுப் போக்​கு​வரத்து கழகங்​களின் மாநகர மற்​றும் நகர சாதா​ரண பேருந்​துகள், விரைவுப் பேருந்​துகள், தாழ்​தளப் பேருந்​துகள், எல்​எஸ்எஸ், டீலக்ஸ் (குளிர்​சாதனப் பேருந்​துகள் நீங்​கலாக) மற்​றும் புறநகர், மலைப் பகுதி​களில் இயக்​கப்​படும் சாதா​ரண கட்​டண பேருந்​துகளுக்​கும் இல​வச பயண அனுமதி விரிவுபடுத்​தப்​பட்​டுள்​ளது. இந்த சலுகையைப் பெற விரும்​பும் மாற்​றுத் திறனாளி​கள், தமிழக அரசால் வழங்​கப்​பட்ட 16 இலக்க எண் கொண்ட அடை​யாள அட்​டையை (யுடிஐடி) நடத்​துநரிடம் காண்​பித்து பேருந்​து களில் பயணிக்​கலாம். இத்​திட்ட விரிவாக்​கத்​துக்​காக முதல்​கட்​ட​மாக ரூ.7.90 கோடி நிதி ஒதுக்​கீடு செய்​யப்​பட்டு, உடனடி​யாக நடைமுறைக்கு வரும் வகை​யில் ஆணை பிறப்​பிக்​கப்​பட்​டுள்​ளது. மாற்​றுத் திறனாளி​கள் தற்​சார்​புடன் வாழும் வகை​யில் செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) சார்ந்த மேம்​பட்ட நவீன உபகரணங்​கள், விளை​யாட்டு செயற்கை உறுப்​பு​கள் போன்றவற்றை வாங்​கும்​போது அரசு சார்​பில் மானியம் வழங்​கப்​படும் என அறி​விக்​கப்​பட்​டுள்​ளது. உபகரணங்​களின் மொத்த விலை​யில் 50 சதவீதம் அல்​லது அதி​கபட்​சம் ரூ.30 ஆயிரம் வரை (இதில் எது குறைவோ, அந்த தொகை) நிதி​யுத​வியாக வழங்​கப்​படும். இத்​திட்​டத்​தின்​கீழ் பயன்​பெற விரும்​பும் மாற்​றுத் திறனாளி​கள், அரசு மருத்​து​வரின் பரிந்​துரையைப் பெற்று உபகரணங்​களை கொள்​முதல் செய்த 60 நாட்​களுக்​குள் உரிய ஆவணங்​களு​டன் மாவட்ட மாற்​றுத் திறனாளி​கள் நல அலு​வல​கத்​தில் விண்​ணப்​பிக்​கலாம். இவ்​வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை