\"இங்க\" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: oneindia.com (original report) ↗
\"இங்க\" தண்ணீரை விட பெட்ரோல் விலை கம்மி.. சென்னையில் இருந்து ரொம்ப ஈஸியாக போகலாம்!

புருனே: உலகம் முழுவதும் எரிபொருள் விலை குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், தண்ணீரைவிட குறைவான விலையில் பெட்ரோல் கிடைக்கும் நாடு ஒன்று உள்ளது பற்றி உங்களுக்கு தெரியுமா! அதுவும் தென்கிழக்கு ஆசியாவிலேயே இந்த நாடு இருக்கிறது. அது என்ன நாடு. இந்த நாட்டில் மட்டும் எரிபொருள் இவ்வளவு குறைவாக எப்படி கிடைக்கும் என்பது குறித்து நாம் பார்க்கலாம். இப்போது அமெரிக்கா, அமீரகம் என எண்ணெய் வளம் கொண்ட நாடுகளிலேயே பெட்ரோல், டீசல் விலை அதிகமாக இருக்கிறது. இதனால் விலைவாசி குறித்த அச்சமும் பொதுமக்களிடையே அதிகரித்துள்ளது. ஆனால், ஒரு நாட்டில் மட்டும் தண்ணீரை விட பெட்ரோல் விலை குறைவாக இருக்கிறது. புருனே இந்தளவுக்கு குறைந்த விலைக்கு எரிபொருளை விற்கும் நாடு தான் புருனே. எண்ணெய் வளம் காரணமாக செல்வ செழிப்புடன் இருக்கும் இந்த சிறிய நாட்டில், இந்தியர்கள் விசா இல்லாமல் 3 நாட்கள் வரை சுற்றிப் பார்க்கலாம். தனது டிரிப்களை சமூக வலைத்தளங்களில் பகிரும் அன்கிதா குமார் என்ற பெண் தனது புருனே நாட்டு பயணம் தொடர்பான வீடியோவை தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். உலகின் மிகவும் சலிப்பான நாடு என்று அவர் புருனேவை வர்ணித்தாலும், அங்கு நிலவும் அமைதியான வாழ்க்கை முறையும் இயற்கை அழகும் வித்தியாசமான அனுபவத்தை தருவதாக குறிப்பிட்டுள்ளார். உலகின் பல நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு பேசுபொருளாக இருக்கும் நிலையில், புருனேவில் பெட்ரோல் விலை தண்ணீரைவிடக் குறைவு என்று அன்கிதா தெரிவித்துள்ளார். உலகின் அதிகம் சுற்றுலா பயணிகள் செல்லாத நாடுகளில் இதுவும் ஒன்று என்றும் அவர் கூறியுள்ளார். எண்ணெய் வளம் கொண்ட புருனே உலகின் செல்வ செழிப்பான நாடுகளில் ஒன்றாக உள்ளது. அங்கு மக்கள் வரி செலுத்துவதில்லை என்றும் கல்வி கிட்டத்தட்ட இலவசமாக கிடைப்பதாகவும் அன்கிதா தனது வீடியோவில் தெரிவித்துள்ளார். அரசு மருத்துவமனைகளில் மருத்துவ செலவு வெறும் ஒரு அமெரிக்க டாலர் மட்டுமே என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். புருனேவில் தன்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது அங்கு நிலவும் அமைதிதான் என்று அன்கிதா கூறியுள்ளார். பரபரப்பாக இருக்க வேண்டிய சாலை சந்திப்புகளில்கூட ஆட்கள் யாரும் இல்லாத அளவுக்கு அமைதியாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். நாட்டின் நிலப்பரப்பில் சுமார் 70 சதவீதம் காடுகள் நிறைந்துள்ளதாகவும், அங்கு இரவு நைட் லைஃப் என்று ஒன்றே இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். உள்ளூர் மக்களுக்கு மது தடை செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும், "இந்த நாட்டில் பார்க்க வேண்டிய இடங்கள் என்று எந்தவொரு பட்டியலும் இல்லை. பரபரப்பு இல்லை, அவசரம் இல்லை. அதுதான் இந்த நாட்டை சுவாரசியமானதாக மாற்றுகிறது. இங்கு வாழ்க்கை முற்றிலும் வேறுவிதமாக நகர்கிறது. மேலும், இந்தியர்கள் புருனேவுக்கு 3 நாட்கள் வரை விசா இல்லாமல் செல்லலாம். இந்த நாட்டை சுற்றி பார்க்க இந்த 3 நாட்களே போதுமானது" என்றார் சென்னையிலிருந்து புருனேவுக்கு நேரடி விமான சேவை இருக்கிறது. வெறும் 5 மணி நேரத்தில் நம்மால் புருனேவுக்கு செல்ல முடியும். ராயல் புருனே ஏர்லைன்ஸ் இரு நாடுகளுக்கும் இடையே நேரடி விமான சேவையை இயக்குகிறது. இந்தியாவின் மற்ற முக்கிய நகரங்களில் இருந்து சிங்கப்பூர் ஏர்லைன்ஸ், ஏர் ஏசியா, மலேசியா ஏர்லைன்ஸ் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் மூலம் புருனே செல்லலாம். புருனே விமான டிக்கெட் ரூ.17,000 முதல் ரூ.21,000 வரை இருக்கும். எண்ணெய் வளம், பிரம்மாண்டமான மசூதிகள், பசுமையான மழைக்காடுகள் என பல அம்சங்களை கொண்ட நாடாக புருனே இருக்கிறது. இது மாறுபட்ட அனுபவத்தை விரும்புபவர்களுக்கு தேர்வாக இருக்கலாம்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை