இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. பாட் கம்மின்ஸ் (கோப்புப் படம்) இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இங்கிலாந்து அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவுள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் முதலில் நடைபெறுகிறது. முதல் ஒருநாள் போட்டி வருகிற நவம்பர் 13 ஆம் தேதி பெர்த்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடர்களுக்கான ஆஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று அறிவித்துள்ளது. இந்த இரண்டு தொடர்களிலும் மூத்த வீரர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் பாட் கம்மின்ஸுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. டிசம்பரில் நடைபெறவுள்ள நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குத் தயாராவதற்காக மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் மற்றும் டி20 என இரண்டு தொடர்களிலுமே ஆஸ்திரேலிய அணியை மிட்செல் மார்ஷ் கேப்டனாக வழிநடத்துகிறார். Two potential debutants and a whole bunch of new faces for a big series against England #AUSvENGFULL STORY: https://t.co/jtyp1JTJX2 pic.twitter.com/UuQqFyTNmd ஒருநாள் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்டுமேன், அலெக்ஸ் கேரி, கூப்பர் கானலி, ஜாக் எட்வர்ட்ஸ், கேமரூன் கிரீன், டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்லிஷ், ஸ்பென்சர் ஜான்சன், ஆலிவர் பீக், மேத்யூ ரென்ஷா, லியம் ஸ்காட், ஆடம் ஸாம்பா. டி20 தொடருக்கான ஆஸ்திரேலிய அணி விவரம் மிட்செல் மார்ஷ் (கேப்டன்), சேவியர் பார்ட்லெட், மஹ்லி பியர்டுமேன், நிகில் சௌதரி, டிம் டேவிட், ஜோயல் டேவிஸ், ஜாக் எட்வர்ட்ஸ், நாதன் எல்லிஸ், ஜாக் ஃபிரேஸர் மெக்கர்க், சாம் ஹார்ப்பர், ஸ்பென்சர் ஜான்சன், மிட்செல் ஓவன், லாச்லான் ஷா, ஆடம் ஸாம்பா. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களுக்கான ஆஸி. அணி அறிவிப்பு; மூத்த வீரர்களுக்கு ஓய்வு!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗