இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50ஆவது ஆண்டு..! முதல் போட்டியில் தமிழக வீராங்கனை கேப்டன்!

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Sports ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50ஆவது ஆண்டு..! முதல் போட்டியில் தமிழக வீராங்கனை கேப்டன்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் 50ஆவது ஆண்டு கொண்டாட்டம் குறித்து... இந்திய மகளிர் கிரிக்கெட்டின் 50ஆம் ஆண்டு - படம்: எக்ஸ் / பிசிசிஐ விமன் இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளன. இதனைக் கொண்டாடும் விதமாக பிசிசிஐ விமன் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. முதன்முதலாக இந்திய மகளிரணி டெஸ்ட் போட்டியில் பெங்களூரில் சின்னசாமி கிரிக்கெட் திடலில் மேற்கிந்தியத் தீவுகள் அணியுடன் 1976ஆம் ஆண்டு அக்.31ஆம் தேதி விளையாடியது. இந்த முதல் போட்டிக்கு கேப்டனாக சென்னையைச் சேர்ந்த சாந்தா ரங்கசாமி பொறுப்பேற்றிருந்ததும் குறிப்பிடத்தக்கது. ஷுபாங்கி குல்கர்னி முதல் இன்னிங்ஸிலேயே 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். இந்த டெஸ்ட் போட்டி நவ.2ஆம் தேதி வரை நடைபெற்று சமனில் முடிவடைந்தது. மொத்தமாக 6 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் முதல் மூன்று போட்டி சமனில் முடிந்தன. நான்காவது போட்டியில் இந்திய அணி முதல் வெற்றியைப் பெற்றது. ஐந்தாவது போட்டி மீண்டும் சமனில் முடிய, கடைசி போட்டியில் இந்தியா தோல்வியுற்றது. ஆக, முதல் தொடரே 1-1 என சமனில் முடிந்ததும் குறிப்பிடத்தக்கது. தற்போது, மகளிர் கிரிக்கெட் அதிகளவு பிரபலமாகியுள்ளது. ஆடவர் கிரிக்கெட்டுக்கு இணையாக ஊதியமும் வழங்கப்படுகிறது. அவர்களது போட்டிக்கும் வணிக ரீதியான முக்கியத்துவம் ரசிகர்களிடம் உருவாகியுள்ளது. டெஸ்ட் போட்டிகள் குறைவாக விளையாடினாலும் டி20 போட்டிகள் அதிகமாக விளையாடப்படுகின்றன. இந்திய மகளிரணி சமீபத்தில் 2025ல் ஒருநாள் உலகக் கோப்பையை வென்றது. ஆசிய கோப்பையில் இதுவரை 8 முறை 2004, 2005-06, 2006, 2008, 2012, 2016, 2018, 2022) சாம்பியனாகியிருக்கிறது. ஆசிய விளையாட்டிலும் தங்கம் வென்றுள்ளன. ஆனால், இதுவரை டி20 உலகக் கோப்பையை வெல்லாமல் இருப்பதும் கவனிக்கத்தக்கது. தற்போது, இந்திய மகளிரணிக்கு ஸ்மிருதி மந்தனா அனைத்து வடிவலான போட்டிகளுக்கும் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். விரைவில் டி20 உலகக் கோப்பையையும் வெல்லும் முனைப்பில் இருக்கிறார். 5ï¸â£0ï¸â£ years of pride, passion, and excellence ð ðï¸ #OnThisDay in 1976, the Indian Womenâs Team took the field for their first-ever international match, hosting the West Indies in Bengaluru ðHere is to celebrating the pioneers and a legacy that continues to inspire⦠pic.twitter.com/JDn3YEIad1 தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை