நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைந்த ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி குறித்து... ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி - பிசிசிஐ நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இணைந்த ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி இந்திய அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அனைத்து போட்டிகளிலும் விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது ஆகிப் நபி தொடக்கத்தில் கடைசி 2 போட்டிகளில் மட்டுமே விளையாட இருந்தார். தற்போது, முதல் 3 போட்டிகளிலும் விளையாடுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவுக்குச் சுற்றுப் பயணம் செய்துள்ள நியூசிலாந்து அணி 5 டி20, 5 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர்களில் விளையாடவிருக்கின்றன. டி20 போட்டிகளில் இந்தியா 3-1 என வென்றுள்ள நிலையில், கடைசி டி20 போட்டி நாளை ஹாமில்டனில் நடைபெற இருக்கிறது. அடுத்ததாக ஒருநாள் தொடர் நவ. 4ஆம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. மொத்தம் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த ஒருநாள் தொடரில் அனைத்திலும் ஆகிப் நபி விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ரஞ்சி கோப்பையில் தொடர் நாயகன் விருது வென்ற இவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முதல் 3 ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி: ஷுப்மன் கில் [கேப்டன்], ரோஹித் சர்மா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், கேஎல் ராகுல், அக்சர் படேல், நமன் திர், அன்ஷுல் கம்போஜ், குர்னூர் ப்ரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், இஷான் கிஷான், முகமது சிராஜ், குல்தீப் யாதவ், நிதீஷ் குமார் ரெட்டி (முதல் ஒடிஐ) ஆகிப் நபி. 4, 5ஆவது போட்டிக்கான இந்திய அணி: ஷ்ரேயாஸ் ஐயர், ரோஹித் சர்மா, விராட் கோலி, திலக் வர்மா, இஷான் கிஷன், அக்சர் படேல், நமன் திர், ஆக்கிப் நபி, குர்னூர் பிரார், ருதுராஜ் கெய்க்வாட், அர்ஷ்தீப் சிங், குமார் குஷாக்ரா, முகமது சிராஜ், யஷ் தாக்குர், குல்தீப் யாதவ். ð¨ News ð¨Auqib Nabi added to #TeamIndia squad for first three ODIs vs New ZealandDetails ð½ | #NZvIND https://t.co/32rAdCiiDh தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்திய ஒருநாள் அணியில் ஜம்மு காஷ்மீர் வீரர் ஆகிப் நபி..! அனைத்து போட்டிகளிலும் விளையாடுவாரா?
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗