இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற இலக்கு: அஸ்வினி வைஷ்ணவ்

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: dinamani.com (original report) ↗
இந்தியாவை உலகளாவிய மின்னணு உற்பத்தி மையமாக மாற்ற இலக்கு: அஸ்வினி வைஷ்ணவ்

இந்தியாவை உலகளாவிய மின்னணு, செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு என அஸ்வினி வைஷ்ணவ் கூறியது... மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் - Union Minister Ashwini Vaishnaw இந்தியாவை உலகளாவிய மின்னணு, செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக உருவாக்குவதே மத்திய அரசின் இலக்கு என்று மத்திய ரயில்வே, மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார். 'செமிகான் இந்தியா 2.0' திட்டத்திற்கான இணையவழி விண்ணப்பத் தளத்தை அஸ்வினி வைஷ்ணவ் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது: நாட்டின் மின்னணுப் பொருள்கள் உற்பத்தித் துறை, வெறும் உதிரிபாகங்களை இணைக்கும் நிலையைக் கடந்து, பாகங்கள், மூலப்பொருள்கள், நவீனத் தொழில்நுட்பங்கள் அடங்கிய முழுமையான உள்நாட்டு உற்பத்திச் சங்கிலியாக வளர்ந்து வருகிறது. இது கடந்த 10 ஆண்டுகளில் மின்னணுத் துறையில் ஏற்பட்டுள்ள மாற்றம், அரசும் தொழில்துறையும் இணைந்து மேற்கொண்ட கூட்டு முயற்சியின் வெற்றியை காட்டுகிறது என்று தெரிவித்தார். மத்தி அரசு, பல்வேறு மூலோபாய முன்முயற்சிகள் மற்றும் கொள்கை தலையீடுகள் மூலம், நாட்டில் வலுவான மற்றும் மீள்திறன் கொண்ட செமிகண்டக்டர் சூழல் அமைப்பை உருவாக்க ஒருங்கிணைந்த முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பேட்டரி செல்கள், சர்க்யூட் போர்டுகள் உள்ளிட்டவற்றின் உற்பத்தித் திறன் அதிகரித்து வருவதாகவும், அரசின் திட்டங்கள் உள்நாட்டு விநியோகச் சங்கிலியை வலுப்படுத்துவதோடு, குறு, சிறு நடுத்தர நிறுவனங்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதாகக் கூறினார். இந்தத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்ட அலகுகளில் சுமார் 50% குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் துறையைச் சேர்ந்தவை. 'செமிகான் இந்தியா 2.0' திட்டமானது, குறிப்பாக உபகரணங்கள், மூலப்பொருள்கள், வேதிப்பொருள்கள் சார்ந்த வலுவான செமிகண்டக்டர் சூழலை உருவாக்குவதில் கவனம் செலுத்தும் என்றும், இதற்காக குறைந்தது மூன்று பெரிய உபகரண உற்பத்தியாளர்களையும், ஐந்து வேதிப்பொருள் மற்றும் வாயு நிறுவனங்களையும் இந்தியாவிற்கு ஈர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். திட்டங்களைத் தேர்ந்தெடுப்பதில் மிகுந்த கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்திய அவர், 'சுயசார்பு இந்தியா' தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, தரம், நவீனத் தொழில்நுட்பம், ஆராய்ச்சி, சர்வதேசப் போட்டித்திறன் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும் என்று அஸ்வினி வைஷ்ணவ் வலியுறுத்தினார். மேலும், இந்தியாவை உலகளவில் போட்டித்தன்மை கொண்ட மின்னணு மற்றும் செமிகண்டக்டர் உற்பத்தி மையமாக மாற்ற மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளதாகவும், உலகின் செய்யறிவு செயலியின் தலைநகராக மாறுவதில் இந்தியா கவனம் செலுத்தி வருவதாகவும், தொழில் பங்குதாரர்கள் ஒன்றிணைந்து செயல்படவும், நிபுணத்துவத்தைப் பகிர்ந்து கொள்ளவும், தொடர்ச்சியான முன்னேற்றத்தை நோக்கிப் பயணிக்கவும் அவர் அழைப்பு விடுத்தார். மின்னணுப் பாகங்கள் உற்பத்தித் திட்டத்தின் கீழ் புதிதாக 12 நிறுவனங்களின் திட்டங்களுக்கு இன்று ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக ரூ.7,503 கோடி முதலீடு செய்யப்படுவதுடன், ரூ.39,045 கோடி மதிப்பிலான பொருள்கள் உற்பத்தி செய்யப்படும். இதன் மூலம் 7,127 பேருக்கு நேரடி வேலைவாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒப்புதல் அளிக்கப்பட்ட திட்டங்கள் தமிழ்நாடு உள்பட 7 மாநிலங்களில் செயல்படுத்தப்பட உள்ளன. இதுவரை 16 மாநிலங்களில் 34 வகையான பொருள்களை உற்பத்தி செய்ய 118 திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதன் மொத்த முதலீடு ரூ.77,051 கோடியாகும். இதன்மூலம் இறக்குமதிச் சார்பு குறைந்து, உள்நாட்டு உற்பத்தி வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுவதாக அஸ்வினி வைஷ்ணவ் கூறினார். தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை