இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

📅 📍 Chennai, Tamil Nadu 🏷️ Politics ✍️ 🔗 Source: bbc.com (original report) ↗
இந்தியாவை வீழ்த்திய பாகிஸ்தானை அந்நாட்டு பிரதமர் வாழ்த்தியதற்கு கிரிக்கெட் ரசிகர்கள் கிண்டல்

பட மூலாதாரம், Getty Images இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டிகள் என்றாலே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பும் பரபரப்பும் இருக்கும். இரு அணிகளும் களத்தில் கடுமையாகப் போட்டியிடும். ஆனால், அண்மையில் நடைபெற்ற இவ்விரு அணிகளுக்கு இடையிலான போட்டி வழக்கமான போட்டிகளில் இருந்து மாறுபட்டதாக இருந்தது. இந்த ஆட்டம், ஐசிசி நடத்தும் முக்கிய கிரிக்கெட் தொடர்களைப் போலல்லாமல், தலா ஆறு வீரர்களைக் கொண்ட அணிகள் பங்கேற்கும் 'ஹாங்காங் சிக்ஸஸ் 2026' தொடரின் ஒரு பகுதியாக நடைபெற்றது. ஹாங்காங்கின் மோங் கோக் பகுதியில் உள்ள மிஷன் ரோடு மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில், பாகிஸ்தான் அணி இந்தியாவை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் தோற்கடித்தது. சர்வதேச கிரிக்கெட்டின் உயர்மட்டப் போட்டிகளில் இரு அணிகளும் மோதும்போது கிடைக்கும் முக்கியத்துவத்துடன் இந்த வெற்றியை ஒப்பிட முடியாது. இந்த வெற்றியை பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் உற்சாகத்துடன் கொண்டாடினார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்துச் செய்தி ஒன்றைப் பதிவிட்டார். "ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற நமது வீரர்களுக்கு வாழ்த்துகள்! இது மிகச்சிறந்த கிரிக்கெட் போட்டியாக அமைந்தது" என்று அவர் குறிப்பிட்டார். பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைவர் மொஹ்சின் நக்வி மற்றும் அவரது குழுவினருக்கும் பாகிஸ்தான் பிரதமர் பாராட்டுத் தெரிவித்தார். வீரர்கள் போட்டிக்காக தயாராவதில் உதவியதற்கும், அவர்களுக்குத் தேவையான ஆதரவை வழங்கியதிலும் அவர்கள் சிறப்பாகச் செயல்பட்டதாகக் குறிப்பிட்டார். ஆனால், பிரதமரின் இந்த உற்சாகமான கொண்டாட்டத்தை அனைவரும் வரவேற்கவில்லை. 'இது உலகக் கோப்பைப் போட்டி அல்ல; ஹாங்காங் சிக்ஸஸ் தொடரில் நடைபெற்ற ஓர் ஆட்டம் மட்டுமே' என்று சமூக ஊடகங்களில் பல கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு நினைவூட்டினார்கள். பட மூலாதாரம், Getty Images முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் அஜய் ஜடேஜாவின் பெயரில் செயல்படும் போலிக் கணக்கு ஒன்றில் வெளியான பதிவு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'ஹாங்காங் சிக்ஸஸ் உலகக் கோப்பை' தொடரில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதற்கு அந்தக் கணக்கு நையாண்டியாக வாழ்த்துத் தெரிவித்திருந்தது. End of அதிகம் படிக்கப்பட்டது பிபிசி தமிழ் செய்திகளை செல்போனிலேயே படிக்கலாம் பின்தொடர கிளிக் செய்யவும் வாட்ஸ்அப் விளம்பரம் - முடிவு அந்தப் பதிவில், "இந்தியாவுக்கு எதிரான ஹாங்காங் சிக்ஸஸ் உலகக் கோப்பைப் போட்டியில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துகள். இனி வெற்றி ஊர்வலம் நடத்த வேண்டியதுதான்!" என்று குறிப்பிடப்பட்டிருந்தது. மூத்த விளையாட்டு ஊடகவியலாளர் விக்ராந்த் குப்தாவும் ஷெரீப்பின் பதிவைக் கண்டு வியப்படைந்தார். "நிஜமாகவா?" என்ற கேள்வியை மட்டுமே அவர் எழுப்பியிருந்தார். ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ளும் அஜ்மல் ஜத்ரானும் எக்ஸ் தளத்தில் ஷெரீப்பின் பதிவைக் கிண்டல் செய்துள்ளார். "இனிமேல், போட்டி தொடங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும்போது வெற்றி பெற்றால்கூட அதைப் பற்றிப் பதிவிடும் நிலை வரும் போலிருக்கிறது. மற்றவர்கள் தங்கள் பணிகளில் கவனம் செலுத்திக் கொண்டிருக்கும் போது, ஒரு நாட்டின் பிரதமர் டாஸ் போடுவது மற்றும் முக்கியத்துவம் இல்லாத போட்டிகளைப் பற்றிப் பதிவிடுவதையே வேலையாகக் கொண்டிருக்கிறார்" என்று அவர் விமர்சித்துள்ளார். முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ராவும் ஷெரீப்பின் பதிவைக் கிண்டல் செய்தார். "இந்தியாவைத் தோற்கடித்துவிட்டோம் என்று சொல்வதில் அவர்கள் காட்டிய அவசரத்தில், உண்மையைச் சரிபார்க்கக்கூட மறந்துவிட்டார்கள். உண்மையில், பாகிஸ்தான் தனது முதல் போட்டியிலேயே ஐக்கிய அரபு அமீரகத்திடம் தோல்வியடைந்தது" என்று அவர் குறிப்பிட்டார். மேலும், "ஒரு நாட்டின் பிரதமரே 'ஹாங்காங் சிக்ஸஸ்' போன்ற போட்டியைப் பற்றிப் பதிவிடுகிறார் என்றால், அந்த நாட்டின் கிரிக்கெட் எந்த நிலையில் இருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளலாம்" என்றும் அவர் விமர்சித்துள்ளார். பாகிஸ்தான் ரசிகர்கள் சிலரும் பிரதமரின் பதிவுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். 'லாஹோரி கை' என்ற பெயரில் இயங்கும் ஒருவர், "தயவுசெய்து எங்களை அவமானப்படுத்தாதீர்கள்" என்று பதிவிட்டார். "கடந்த ஐந்து ஆண்டுகளில் ஐசிசி நடத்திய அனைத்துத் தொடர்களிலும் இந்தியாவிடம் பாகிஸ்தான் தோல்வியடைந்துள்ளது. அப்படியிருக்க, பெரிய முக்கியத்துவம் இல்லாத ஹாங்காங் சிக்ஸஸ் போட்டியில் கிடைத்த வெற்றியை நீங்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறீர்கள்!" என்றும் அவர் பிரதமரை சாடினார். ஆண்களுக்கான இரண்டு முக்கிய உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர்களில் இந்தியா, பாகிஸ்தானுக்கு எதிராகச் சிறப்பான வெற்றிப் பதிவைக் கொண்டுள்ளது. ஒருநாள் உலகக் கோப்பையில் இரு அணிகளும் இதுவரை எட்டு முறை மோதியுள்ளன. இந்த எட்டு போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது. டி20 உலகக் கோப்பையில் இந்தியா 8-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது; பாகிஸ்தான் 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற போட்டித் தொடரில் மட்டுமே ஒரேயொரு முறை வெற்றி பெற்றுள்ளது. விளையாட்டுச் செய்தியாளர் கௌரவ் கால்ராவும் இதுகுறித்துத் தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில், ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ராவைப் பின்னுக்குத் தள்ளி, பாகிஸ்தானின் அர்ஷத் நதீம் தங்கப் பதக்கம் வென்றபோது ஏற்பட்ட பரபரப்புடன் தற்போதைய நிகழ்வை அவர் ஒப்பிட்டுள்ளார். "இது மிகப்பெரிய நிகழ்வு! ஒலிம்பிக்கில் நீரஜை வீழ்த்தி அர்ஷத் தங்கம் வென்றதைப் போன்றது இது. ஒருவேளை அதைவிடப் பெரிதாகக்கூட இருக்கலாம். சில நேரங்களில் நாம் ஏதோ ஒரு கற்பனை உலகில் வாழ்கிறோமோ என்று தோன்றுகிறது" என்று கால்ரா தனது பதிவில் நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு விளையாட்டு செய்தியாளரான பரத் ராம்ராஜும், இந்த வெற்றியைப் பிரதமர் கொண்டாடியதைக் கிண்டல் செய்துள்ளார். "ஒரு நாட்டின் பிரதமர் ஹாங்காங் சிக்ஸஸ் தொடரைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்கிறார்" என்று அவர் பதிவிட்டுள்ளார். பட மூலாதாரம், Getty Images விளையாட்டுப் புள்ளிவிவரங்கள் தொடர்பான செய்திகளை வெளியிடும் அசீம் சித்திக்கும் ஷெபாஸ் ஷெரீப்பின் பதிவை விமர்சித்துள்ளார். "ஹாங்காங் சூப்பர் சிக்ஸஸ் என்பது மிக முக்கியமான கிரிக்கெட் தொடர் அல்ல என்பதை யாராவது பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்பிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். தயவுசெய்து அந்த அணிக்கு வாழ்த்துத் தெரிவிப்பதை நிறுத்துங்கள்" என்று அவர் குறிப்பிட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரசிகரான 'ஸ்ரீநி மாமா' என்பவரும், "இது என்ன மாதிரியான வாழ்த்து?" என்று கேள்வி எழுப்பியுள்ளார். இறுதியாக, ஒரு ரசிகர், இந்தப் பதிவு போலிக் கணக்கிலிருந்து வெளியானது அல்ல என்பதைச் சுட்டிக்காட்டும் வகையில், "இல்லை, இது போலிக் கணக்கின் பதிவு அல்ல" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு குறுங்காணொளிகள் முடிவு

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை