இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் பிறந்த நாளுக்கு பிசிசிஐ கூறியிருப்பதாவது... விராட் கோலிக்கு பிசிசிஐ வாழ்த்து - படம்: எக்ஸ் / பிசிசிஐ இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலியின் (38 வயது) பிறந்த நாளுக்கு பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளது. தில்லியைச் சேர்ந்த விராட் கோலி இந்திய அணியில் ஜூன் 20, 2011ல் அறிமுகமானார். பின்னர், ஒருநாள், டி20 போட்டிகளில் அறிமுகமாகி அனைத்து வடிவ கிரிக்கெட்டிலும் இந்தியாவுக்கு கேப்டனாக பொறுப்பேற்றார். கடந்த 2024ல் டி20 உலகக் கோப்பையை வென்றதும் அதிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 2025ல் பிஜிடி தொடருக்குப் பிறகு டெஸ்ட்டிலும் தனது ஓய்வு அறிவித்தார். தற்போது, ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார். 2028 உலகக் கோப்பைக்குப் பிறகு அதிலிருந்தும் ஓய்வு பெற இருக்கிறார். எப்படியாவது மீண்டும் ஒருநாள் உலகக் கோப்பையை வெல்ல வேண்டுமென உத்வேகத்துடன் இருக்கிறார். இதுவரை மொத்தமாக 566 போட்டிகளில் இந்தியாவுக்காக விளையாடியுள்ளார். இந்த நிலையில் விராட்டின் பிறந்த நாளில் பிசிசிஐ தனது எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது: 566 சர்வதேச போட்டிகள், 28, 601 ரன்கள், 86 சர்வதேச சதங்கள் மட்டுமில்லாமல் இன்னமும் மிச்சமிருக்கின்றன. 2011 ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பை, ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி 2013, 2025 மற்றும் 2024 ஐசிசி டி20 உலகக் கோப்பைகளின் வெற்றியாளர். கிரிக்கெட்டின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான விராட் கோலிக்கு பிறந்த நாள் வாழ்த்துகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மனைவி அனுஷ்காவுடன் லண்டனில் வசித்து வரும் விராட் கோலி ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணியில் விளையாடி வருகிறார். 5ï¸â£6ï¸â£6ï¸â£ Intl. Matches & Counting ð«¡2ï¸â£8ï¸â£6ï¸â£0ï¸â£1ï¸â£ Intl. Runs & Counting ð8ï¸â£6ï¸â£ Intl. Centuries & Counting ð Winner of ICC Men's ODI World Cup 2011, ICC Champions Trophy 2013 & 2025, and ICC Men's T20 World Cup 2024 ðHappy Birthday to one of the finest to ever grace the game,⦠pic.twitter.com/trAaZrw9LY தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவுக்காக 86 சதங்கள், 28,600 ரன்கள்... விராட் கோலிக்கு பிசிசிஐ வாழ்த்து!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗