இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணி வீரர் லாக்கி பெர்குசன் விலகியுள்ளதைப் பற்றி... லாக்கி பெர்குசன். - படம்: ஏபி இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 5 டி20, இரண்டு டெஸ்ட் மற்றும் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்தத் தொடரில் டி20 போட்டிகளில் ஆதிக்கம் செலுத்திவரும் இந்திய அணி முதல் மூன்று போட்டிகளில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியுள்ளது. வெல்லிங்டனில் அக். 27 ஆம் தேதி நடைபெற்ற மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி நிர்ணயித்த 199 ரன்கள் இலக்கை இந்திய அணி 13.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 199/4 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 38 பந்துகளில் 113 ரன்கள் குவித்து அசத்தினார். இந்தியா - நியூசிலாந்து இடையேயான 4-ஆவது போட்டி நாளை (அக். 30) ஆக்லாந்தில் நடைபெறவிருக்கிறது. இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு எகிறியிருக்கும் சூழலில் இந்தப் போட்டிக்கான டிக்கெட்டுகளும் வரலாறு காணாத வகையில் விற்றுத்தீர்ந்தன. இந்த நிலையில், இந்தியாவுக்கு எதிரான டி20 தொடரில் இருந்து நியூசிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் லாக்கி பெர்குசன் காயம் காரணமாக விலகியுள்ளார். அவருக்குப் பதிலாக மற்றொரு நியூசிலாந்து வீரர் மேட் ஃபிஸ்ஸர் மாற்று வீரராக அறிவிக்கப்பட்டுள்ளார். அதேபோன்று இரண்டாவது போட்டியில் காயமடைந்த நியூசிலாந்து வீரர் மேட் ஹென்றியும் பரிசோதிக்கப்பட்டார். அவருக்கு காயம் சரியாக ஒன்றிலிருந்து இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Ferguson experienced pain in his right-calf during the second T20I at Hagley Oval, and subsequent scans confirmed a low-grade tear. தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இந்தியாவுக்கு எதிரான டி20 தொடர்: நியூசி. நட்சத்திர வீரர் லாக்கி பெர்குசன் விலகல்!
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ Sports
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗