இண்டியா கூட்டணி போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு: அபிஜித் திப்கே அறிவிப்பு

📅 📍 Tamil Nadu, Tamil Nadu 🏷️ News ✍️ 🔗 Source: hindutamil.in (original report) ↗
இண்டியா கூட்டணி போராட்டத்துக்கு சிஜேபி ஆதரவு: அபிஜித் திப்கே அறிவிப்பு

சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே புதுடெல்லி: டெல்லியில் இண்டியா கூட்டணி போராட்டாத்துக்கு கரப்பான் பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) ஆதரவளித்துள்ளது. தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரை எதிர்க்கும் இந்த போராட்டம் குறித்து சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நவம்பர் 1-ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இண்டியா கூட்டணி போராட்டம் நடத்துகிறது. வாக்​காளர் பட்​டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை (எஸ்ஐஆர்) மறுஆய்வு செய்வதற்கும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாருக்கு எதிராகவும் இந்தப் போராட்டம் நடத்தப்பட உள்ளது. இப்போராட்டத்திற்கு, சிஜேபி நிறுவனர் அபிஜித் திப்கே ஆதரவை தெரிவித்துள்ளார். இருப்பினும், தனது கட்சியின் தலைவர்கள் இண்டியா கூட்டணித் தலைவர்களுடன் ஒரே மேடையைப் பகிர்ந்துகொள்வார்களா என்பது குறித்து அவர் தெளிவுபடுத்தவில்லை. முன்னதாக, வேலைவாய்ப்புத் தேர்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, ஜந்தர் மந்தரில் சிஜேபி போராட்டம் நடத்தியது. இதில், காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கூட்டணியைச் சேர்ந்த பல நாடாளுமன்ற எம்பிக்களும் தலைவர்களும் கலந்து கொண்டனர். இருப்பினும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே மற்றும் பிரியங்கா காந்தி வத்ரா ஆகியோர் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கவில்லை. இண்டியா கூட்டணியின் போராட்டம் மீது தனது எக்ஸ் தளத்தில் சிஜேபி தலைவர் அபிஜித் திப்கே பதிவிட்டுள்ளார். அதில், ஞானு (ஞானேஷ்குமார்) பதவி விலக வேண்டும். எங்கள் கரப்பான் பூச்சி ஜனதா கட்சி, இண்டியா கூட்டணியின் ‘நவம்பர் 1’ பேரணிக்கு ஆதரவை வழங்குகிறது. தேசமே முதன்மையானது. ‘ஜெய் பீம் ஜெய் ஹிந்த்’ சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களை நடத்துவதற்குத் தேவையான நம்பிக்கையை ஞானேஷ்குமார் இழந்துவிட்டார். தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மையையும் சுதந்திரமான தன்மையையும் மீட்டெடுக்க, அவர் பதவி விலகுவது அவசியம். இன்று, எஸ்ஐஆர் செயல்முறை, தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கப்படுவது கவலைகளை எழுப்பியுள்ளது. குடிமக்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்துவதை எளிதாக்குவதற்குப் பதிலாக, தங்கள் பெயர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விடுமோ என்ற அச்சம் மக்களிடையே அதிகரித்து வருகிறது. சமூக அல்லது பொருளாதார அந்தஸ்து எதுவாக இருந்தாலும், ஒவ்வொரு இந்தியருக்கும் சமமான அரசியல் குரல் இருப்பதை உறுதி செய்ய டாக்டர் அம்பேத்கர் போராடினார். ஒவ்வொரு அரசாங்கமும் அரசியலமைப்பு நிறுவனமும் இந்தக் கொள்கையைப் பாதுகாக்க வேண்டும். தகுதியுள்ள ஒவ்வொரு குடிமகனின் வாக்குரிமையைப் பாதுகாப்பதே தேர்தல் ஆணையத்தின் பொறுப்பாகும். மாறாக, அவர்களின் வாக்குப்பதிவுச் செயல்பாட்டில் தடைகளை உருவாக்குவது அல்ல. நமது அரசியலமைப்புச் சட்டம் ஒவ்வொரு வயது வந்த குடிமகனுக்கும் வாக்களிக்கும் உரிமையை வழங்குகிறது. தகுதியுள்ள எந்தவொரு குடிமகனும் இந்த உரிமையிலிருந்து தவறாமல் இருப்பதை உறுதி செய்வது நமது பொறுப்பாகும். எனவே, நம் நாட்டில் சுதந்திரமான மற்றும் நேர்மையான தேர்தல்களுக்காகப் போராடும் அனைத்து அமைப்புகளுக்கும் சிஜேபி ஆதரவளிக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகக் கோரி, அக்டோபர் 2-ல் போராட்டம் நடத்த சிஜேபி அழைப்பு விடுத்திருந்தது. இருப்பினும், டெல்லியில் போராட்டம் நடைபெறும் இடத்துக்குச் செல்லும் முன்பே, அக்கட்சியின் அபிஜித் திப்கே, சவுரவ் தாஸ் மற்றும் அசுதோஷ் ரங்கா ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதற்கிடையில், எஸ்ஐஆர் நடைமுறைக்கும், தலைமைத் தேர்தல் ஆணையருக்கும் எதிராக ராகுல் காந்தி போராட்டங்களை முன்னெடுத்து வந்தார். இருப்பினும், பண்டிகைக் காலம் காரணமாக அவர் இந்தப் போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளார். அடுத்த போராட்டம் டெல்லியின் ராம் லீலா மைதானத்தில் நவம்பர் 1-ல் நடைபெறுகிறது. முன்னதாக, எஸ்ஐஆர் நடைமுறைக்கு எதிரான போராட்டத்தில் யார் வேண்டுமானாலும் இணையலாம் என்று அவர் கூறியிருந்தார்.

🔗 TN24-ல் நேரலை செய்திகள் பார்க்க / Live Stream on TN24 →
TN24 — Your Source for Tamil Nadu News
தமிழ்நாட்டின் நம்பகமான செய்தி தொகுப்பு தளம் | அரசியல், விளையாட்டு, வணிகம், சினிமா மற்றும் மாவட்ட செய்திகள் — 24/7
● LIVE
செப்டம்பர் 8, 2026
✍️ செய்தி எழுதுக
📰 Latest News
🏛️ அரசியல்

தமிழ்நாடு அரசின் புதிய திட்டங்கள் — New State Government Welfare Schemes for 2026-27

மேலும் படிக்க →
🏏 விளையாட்டு

CSK 2026 IPL Season Preview — சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பலம் பலவீனம் பகுப்பாய்வு

மேலும் படிக்க →
📈 வணிகம்

மதுரையில் தங்கம் விலை — Gold & Silver Rates in Madurai Today | நவரத்ரி சிறப்பு

மேலும் படிக்க →
🌧️ வானிலை

தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எதிர்பார்ப்பு — Northeast Monsoon 2026 Forecast

மேலும் படிக்க →
📋 அரசு வேலை

TNPSC குரூப் 2 தேர்வு 2026 — அறிவிப்பு, தேதி, விண்ணப்ப முறை | Group 2 Exam Notification

மேலும் படிக்க →
🏙️ குடிமக்கள்

கோவையில் புதிய மெட்ரோ திட்டம் — Coimbatore Metro Rail Phase 2 Update & Route Map

மேலும் படிக்க →
💻 தொழில்நுட்பம்

தமிழ்நாட்டில் AI மற்றும் டிஜிட்டல் திறன் மையங்கள் — Tamil Nadu AI & Digital Skills Hubs Launch

மேலும் படிக்க →
தலைப்புச் செய்தி
தலைப்புச் செய்தி

தமிழ்நாடு செய்திகள் — Tamil Nadu News Live 24x7 | தமிழ் செய்திகள்

தமிழ்நாடு மற்றும் வட்டார முக்கிய நிகழ்வுகள் குறித்த விரிவான கள நிலவரம் — Latest Tamil news today, news live tamilnadu 24x7.

📢 விளம்பரம் • Advertisement விளம்பர தொடர்புக்கு: tn24now@gmail.com ↗
TN24 Live News
செய்தி அறிக்கை