புதுச்சத்திரத்தில் வேலைக்கு செல்லுமாறு கண்டித்த தந்தை மற்றும் அத்தையை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. சிறைத் தண்டனை - கோப்புப் படம் புதுச்சத்திரத்தில் வேலைக்கு செல்லுமாறு கண்டித்த தந்தை மற்றும் அத்தையை வெட்டிக் கொன்ற வழக்கில் இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் தீா்ப்பளித்துள்ளது. நாமக்கல் மாவட்டம், புதுச்சத்திரத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (68). இவரது மகன் கோடீஸ்வரன் (38). பட்டதாரி இளைஞரான இவா், எந்த வேலைக்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளாா். இதனால் குடும்பத்தில் தந்தை, மகனுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் கோடீஸ்வரனை அவரது அத்தை லட்சுமியும் (65) கண்டித்துள்ளாா். இந்த நிலையில் கடந்த 2020-இல் பெருமாள், லட்சுமி ஆகியோா் கோடீஸ்வரனிடம் வாக்குவாதம் செய்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கோடீஸ்வரன், தந்தை பெருமாளையும், அத்தை லட்சுமியையும் வெட்டிக் கொலை செய்தாா். இதுகுறித்து, புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிந்து கோடீஸ்வரனை கைது செய்தனா். இந்த வழக்கு நாமக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவில் கோடீஸ்வரனுக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 18 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி எழில் வேலவன் வியாழக்கிழமை தீா்ப்பு அளித்தாா். பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
இரட்டை கொலை வழக்கு: இளைஞருக்கு இரட்டை ஆயுள் சிறைத் தண்டனை
📅
📍 Tamil Nadu, Tamil Nadu
🏷️ News
✍️ TN24 Editorial Desk
🔗 Source: dinamani.com (original report) ↗